ஆண்டாள் காட்டும் அருட்பாதை (4)
பாசுரம்(4)
ஆழி மழைக் கண்ணா
ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து
கொடார்த்தேறி ஊழி முதல்வன்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடை பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த
சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மழை இல்லாவிடில் கால்நடைகள்
உண்டு உயிர் வாழ தழைகள் எது?
நாமுண்ணும் உணவில் சுவையூட்டும்
மல்லி ,புதினா, போன்ற கீரைகள்தான் எது?
மழையில்லாவிடில் பயிர் பச்சைகள் ஏது ,
கனிகள் ஏது, மனிதர்கள் உயிர் வாழ உணவேது.?
உடலில் உயிர் தரிக்க உதவும் நீறேது ?
அவன் திருவடிகளை அர்ச்சிக்க வாசம்
மிகுந்த வண்ண மலர்களே எது?
இவற்றையெல்லாம் தருபவன்
அந்த கண்ணன் ஒருவன்தான்
ஆழி என்று அழைக்கப்படும் கடலும் அந்த கடலில்
பள்ளி கொண்டுள்ள அரங்கனும்தான் மழையை தந்து
இந்த பூவுலகத்தில் வாழும் அனைத்து உயிர்களையும்
வாழ வைக்கின்றான்.
உப்பு கரிக்கும் உவராழியிளிருந்து உவர் நீரை
உயிர் காக்கும் நீராக மாறி
மேகமாக மாற்றி வேகமாக வந்து
மழையாய் பொழிகின்றான்.
ஊற்றாய் பூமியில் இருக்கின்றான். நம் மனதில்
இன்ப ஊற்றாகவும் இருந்துகொண்டு
இணையில்லா இன்பம் தருகின்றான்.
மலையிலிருந்து அருவியாய் பெருகி உயிர்கள் இருக்கும்
இடத்திற்கே நதியாய் வந்து நலம் தருகின்றான்
வைகுண்டத்தில் உறங்குவதை விட்டொழித்து
ராம, கிருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களை
எடுத்து நம்மோடு இணங்கி இருந்து நமக்கு
இன்பம் தருகின்றான்
அவதாரம் முடிந்த பின்னும் ஆலயங்களில்
சிலையாய்,நிலையாய் நின்று
நம் குறைகளைக் கேட்டு தீர்த்து வைக்கின்றான்.
இன்னும் போதாதென்று தெய்வீக புருஷர்களாக
இவ்வுலகத்தில் உலவி நம்மை வழி நடத்தி
நம்மை எல்லாம் நல் வழி சேர்க்கின்றான்.
என்னே அவன் கருணை!
கண நேரமும் நம்மைப் பிரியாமல்
நம்முடனேயே இருந்து நம்மை
கண்ணிமைபோல் காக்கும்
அந்த கருணா மூர்த்தியை நாம் மறக்கலாமோ?
கர்மத்தை விட்டொழித்து
காமத்தில் திளைத்து உடல் இளைத்து ,
நம்மைக் காக்கும் கண்ணனை மறந்து
அரிதாய் கிடைத்த மானிட பிறவியை
பயன் இல்லாமல் வீணடிக்கலாமோ?
கூடவே கூடாது அவனைப் பழிக்கும்
மூடர்களின் கூட்டத்தில் சேரவே கூடாது
அவர்களின் பேச்சை கேளவும் கூடாது.
மழை பெய்தால்தான் நீர் நிலைகள் நிரம்பும்
இவ்வுலக உயிர்கள் வாழும் .
இதற்க்கெல்லாம் காரணமான நீர் வண்ணனை,
நெடுமாலை, கார்மேக வண்ணனை, தாமரைபோல் கண்ணானை
தரணி எல்லாம் காக்கும் பெருமானை ,நாம் தஞ்சம் அடையாமல், வாழ்த்தாமல் ,அற்ப பலன்களுக்காக சுயநலம் கொண்ட மனிதர்களை
நாடிச் சென்று அனுதினமும் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்,
நம்மை எல்லாம் தாழ்த்திக் கொண்டு
பிறரின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பித்தனாகிய பெருமானுக்கு அடிமை செய்யாமல்
எத்தர்களுக்கு நம் வாழ்வை அர்பணித்துக் கொண்டு
அல்லல் படுகிறோம்.
என்னே பேதைமை?
இனியாவது இந்த உண்மையை உணர்ந்து கொண்டு
தெய்வீக கவி பாரதி கூறியது போல் ,பூமியில் எவர்க்கும் அடிமை
செய்யாமல் பரிபூரணனான பரந்தாமனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.
இகழ்வைத் தரும் மனிதர்களின் புகழ் பாடுவதை விடுத்து ஆண்டாளும் ஆழ்வார்களும் போற்றி பரவிய அரங்கனின் புகழ் பாடி ஆனந்தம் அடைவோம்.

என்னே அவன் கருணை...!
ReplyDeleteஅரங்கனின் புகழ் பாடி ஆனந்தம் அடைவோம்.DD
Delete