Wednesday, December 10, 2014

அரங்கனும் அரக்கனும்

அரங்கனும் அரக்கனும் 






அரங்கனும் அரக்கனும்
இருவருக்கும் ஒரே ஒரு எழுத்துதான்
வித்தியாசம் .அவ்வளவுதான்

ஆனால் செயலில்தான் பெருத்த
வேறுபாடு

அரக்கன் என்பவன் பிறருக்கு
துன்பம் இழைப்பதையே தன்
கொள்கையாகக் கொண்டு
செயல்படுபவன்.

அரங்கனோ அரக்கர்களிடம்  சிக்கி
அல்லல்படுபவர்களை அக்கறையோடு
காப்பாற்றி அரக்கர்களை அழிப்பதையே
தன் உயிர் மூச்சாக கொண்டவன்

உண்மை என்னவென்றால்  அரங்கனும்
அரக்கனும் ஒரே வீட்டில்தான்
வாழ்கிறார்கள்.

அரங்கன் வீட்டின் உள்ளே இருக்கிறான்.
அரக்கன் துவார பாலகன் என்ற பெயரில்
அவன் வீட்டின் வெளியே
காவலுக்கு நிற்கின்றான்.

வைகுண்டத்தில் பரந்தாமனின்
குடிலுக்கு வெளியே காவல் காத்து வந்த
ஜெய  விஜயர்கள்தான் பூலோகத்தில்
ராவணன், சிசுபாலன், போன்ற
அரக்கர்களாய் பிறவி எடுத்து, பிறரை
துன்புறுத்தி பின் அரங்கனின் கையால்
மாண்டனர்.

அதுபோல்தான் நம் இதயத்தின்  உள்ளே
அரங்கன் பள்ளி கொண்டு உள்ளான்.
அவன் வாயில் காப்பாளர்களாக
நல்ல எண்ணங்களாகிய
ஜெயா விஜயர்கள் உள்ளார்கள்.

அந்த வாயில் காப்பாளர்களின் உள்ளத்தில்
அகந்தை குடி கொண்டதும்
அவர்கள் அரக்கர்களாக மாறி பல தீமைகளை
இழைக்கத் தொடங்குகிறார்கள்.
அரங்கனாகிய இறைவன் தண்டனை
அளித்ததும் திருந்தி நல்லவர்களாக
ஆகி விடுகிறார்கள்.

அதுபோல்தான் நாமும் நம் இதயத்தில்
அகந்தை குடி கொள்ள அனுமதித்தால்
நாமும்  அரக்க குணம் கொண்டவர்களாக
மாறி பிறரை துன்புறுத்தி நாமும்
துன்பத்திற்கு ஆளாக நேரிடும்

அவ்வாறு நேராமல் நாம் விழிப்பாக
இருந்துகொண்டால்  நாம் இறைவனின்
அருள் பெற்று  இன்பமாக வாழலாம்.

6 comments:

  1. நல்ல சிந்தனையைப் படித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்.

      படித்துக்கொண்டதை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள் நன்மைகளை அடைய

      Delete
  2. தொடர்பை சொன்ன விதம் அருமை ஐயா...

    ReplyDelete
  3. அருள்வழிகாட்டும் அற்புதமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ராமா (rama) நீ (ni) தான் இவனை பாராட்டியுள்ளாய் நன்றி உனக்கு
      நன்மையையும் செல்வமும் நாளும்
      நல்கும் நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு

      Delete