ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை(பாசுரம்(13)
புள்ளின்
வாய்க் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை
பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து
விழாயனும் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக்
குழைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ ? பாவை நீ நன்னாளால் கள்ளம்
தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்
விளக்கம்
புள் என்றால் மனித உயிர். அதற்க்கு வாய் என்றொரு கருவி இருக்கிறது
புள் என்றால் மனித உயிர். அதற்க்கு வாய் என்றொரு கருவி இருக்கிறது
அதன் மூலம் அது உணவையும் உட்கொள்ளும். அதன் உள்ளே அசைந்துகொண்டிருக்கும் நாக்கு அவனுக்கு நன்மையையும் செய்யும் சொல்லணா தீமைகளையும் செய்து விடும். தீமைக்கும் நன்மைக்கும் காரணம் மனதில் தோன்றும் எண்ணங்களே. அந்த எண்ணங்கள் தூய்மையாக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை.பறவை பறப்பதற்கு இறக்கைகள் தேவை. ஆனால் எண்ணங்கள் இறைக்கையில்லாம்ல் ,சத்தமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டு மானாலும் பறந்து சென்று தன நோக்கத்தை நிறைவேற்றிவிடும். எனமே நாம் இந்த மனதிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதான் துன்பம் நேராமல் இருக்கவேண்டுமென்றால் நம் மனதை கண்ணனிடம் ஒப்படிது விட வேண்டும். அப்படி செய்துவிட்டால் நாம் அனைத்து துனப்ங்களிளிருந்து காப்பாற்றப்படுவோம்.
மனம் உறங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கும். அதை நல்வழியில் செலுத்திடவே ஆண்டாள் கண்ணனின் நாமத்தை சொல்லிக்கொண்டு .அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டு பக்தர் குழாத்துடன் அவன் சன்னதிக்கு செல்ல சொல்கிறாள்.
வானிலே ஆதவன் உதிக்கும் நேரத்தை அறிவிக்கும் முகமாக வெள்ளி என்னும் சுக்கிரனும் விழாயன் என்னும் குருவும் உறங்குவதுபோல் கண்ணிலிருந்து மறையத் தொடங்கி விட்டன.
பறவைகளும் தன் கூட்டை விட்டு பறந்து இரை கிளம்பும் முகத்தான் சத்தம் போடத் தொடங்கிவிட்டன. காலைப் பொழுது புலர்வதை அறிந்தும் நீ கண்களை திறந்து எழுந்து வந்து குளிர்ந்த நீரில் நீராடாமல் படுக்கையில் கிடப்பது முறையோ? உறங்குபவர்களை அன்பாக எழுப்புகிறாள்.
இறைவனுக்காக ஏற்பட்டது மார்கழி மாதம். அதில் அனைத்து நாட்களும் நல்ல நாட்களே. அதுபோல் இந்த நன்னாளில் மற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு கண்ணனை நினைத்து அவனுடன் கலக்க வந்திடுவாய். என்கிறாள் ஆண்டாள்.
ஆனாலும் ஆண்டாள்
அவர்களை விடுவதாயில்லை.
சில நேரங்களில் தீமை செய்யப் புகுந்தாலும்
பறவை வடிவில் வந்த அரக்கனுக்கு பகவான்கண்ணன் கையினால்மாளும்
பாக்கியம் கிடைத்தது.
மனதில் ஆயிரம் தீய சிந்தனைகள் இருந்தாலும்
அனுதினமும் நாம் பகவானை சிந்தித்துக் கொண்டே வந்தால்
அவைகள் மறைந்து
நம் மனம் முழுவதும் இறை சிந்தனையால்
ஒருநாள் நிரப்பட்டுவிடும்
அப்போது நாமும் நரகத்தில்
விழாமல் காப்பாற்றப்படுவோம்.
அதற்க்கு நல்லவரோடு
இணங்கவேண்டும்.
தானே இயங்கமுடியாத
பல ரயில் பெட்டிகளை ஒரு இஞ்சின்
இழுத்து சென்று நாம் சேருமிடத்தில் கொண்டு சேர்ப்பதுபோல
பகவானின் ஒரு நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டோமானால்
நாம் அவன் இருக்குமிடத்தை ஒரு முயற்சியுமின்றி எளிதாக அடைவது திண்ணம்.
அதற்கு தான் என்ற அகந்தையற்று அவன் தாள்களை சரணடையவேண்டும்
சரணடைந்ததுபோல் நடிப்பது பயனளிக்காது.

விளக்கம் மிகவும் சிறப்பு ஐயா...
ReplyDelete