ஆண்டாள் காட்டும் அருட் பாதை (1)
கோவிந்தனுடன் கலந்துவிட்ட
கோதை மொழிந்த திருப்பாவைதன்னை
அதிகாலை தன்னில் துயிலேழுந்து
அரங்கனின் சன்னதிதியில்
அவனடியார்களோடு கூடி
ஆனந்தமாய் இசைப்போர் வாழ்வில்
அற்புதங்கள் நிகழும் அவனருளும் கிடைக்கும்
நோய்க்கு இடமில்லா நல்வாழ்வு அமையும்
சான்றோர்களின் வாழ்வே இதற்க்கு சாட்சி
அரங்கனின் அடியார்கள் ஆவலுடன்
எதிர்பார்த்த மார்கழி திங்கள் வந்துவிட்டது
அனைவரின் மனதிலும் பக்தி பரவசத்தை
ஏற்படுத்த 16.12.2014 அன்று.
கடந்த ஆண்டு கோதையின் அருளினால்
அருட்பாவை தந்த திருப்பாவைக்கு இவன்
புரிந்துகொண்ட வகையில் கண்ணனின்
அருளைப் பெறுவது பற்றி எழுதினேன்.
31.12.2014 அன்று காலையில் காலன் என் காலை பற்றி
என் காலத்தை முடிக்க பற்றினான்.
ஆனால் நானோ அவன் இரு பாதங்களைப் பற்றிய
பக்தன் என்பதை அவன் மறந்து போனான் போலும்!
கோதையின் பாசுரங்களுக்கு விளக்க உரை எழுதி வந்த இவனை
அந்த கோதை போற்றும் கண்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைக் காப்பாற்றினான்.
விபத்திலிருந்து மீண்ட மூன்றாம் நாளே மற்ற பாசுரங்களுக்கும் விளக்க உரையை எழுதி முடிக்கும் பாக்கியத்தை பாக்கிய லக்ஷ்மி கோதை அளித்தாள்
தரணியில் எத்தனையோ பேரறிஞர்கள், ஆசான்கள் திருப்பாவைக்கு உரை செய்துள்ளனர். அவர்களிடையே இந்த மூடனின் முயற்சியையும் .நல்ல உள்ளங்கள்,பல ரசித்தன பாராட்டின .நன்றிகள் அவர்களுக்கு
ஓராண்டு ஓடிவிட்டது.காலில் பட்ட அடி என்னை முடவனாக்கிவிடுமோ என்று பயந்தனர் என்மீது பாசம் கொண்டோர்.
ஆனால் நம்பியவர்களை நட்டாற்றில் விடுபவனல்லவோ நம் நாராயணன் இன்று இவன் நடக்கின்றான் மெதுவாக. விரைவில் முன் போல் நன்றாக நடப்பேன். நம்பிக்கை எனக்கிருக்கிறது .தும்பிக்கையான் அதை நிலை நிறுத்தவேண்டும். சக்திஅருளும், சங்கரனின் ஆசியும், குகனின் சக்தியும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாண்டும் கண்ணுக்கு இனியானை, கருத்துக்கு பொருளாய் உள்ளானை சிந்திப்பது பெரு மகிழ்ச்சியை தரும் என்ற காரணத்தினால் எழுத உள்ளேன்.
பக்தர் குழாம் பரமனைப் பாடி
பரம சந்தோசம் அடைந்திடவே
பாரெங்கும் எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்ந்திடவே
அன்பு நெறி தழைத்திடவே
அனைவரும் அரங்கனின் திருவடிகளில்
பிரார்த்தனை செய்வோமாக.
முதல் பாசுரம்.
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் !
போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன்
நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி கதிர் மதியம்
போல் முகத்தான் நாராயணனே
நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ எம்பாவாய்
மழைக்காலம் முடிந்தது.
காணுமிடமெல்லாம். பச்சை மா மலைபோல்
படுத்திருக்கும் பரந்தாமனின் தோற்றத்தை
நினைவு படுத்தும் பசும் புல்வெளிகள்.
நிரம்பி நிற்கும் நீர் நிலைகள்
அதைக் காணும் நம் மனமும்
மகிழ்ச்சியால் நிரம்பி தளும்பும்
இன்ப அலைகள்.
ஆதவன் எழும் முன்னே யாதவனின் தலைவனாக
விளங்கிய மாதவனை கோயிலில் கண்டு தரிசித்து
அவன் புகழ் பாடி பரவசமூட்டும் மார்கழி மாதத்தின்
பனி படர்ந்த காலை வேளை .
பிறவியெடுத்த நாம் பிறவிப்பயனை அளிக்கும்
பிரம்மனும் ஆராதித்த பேரருளாளனை கண்டு
தரிசித்து அவன் புகழ் பாடாவிடில் முகத்தில்
அவன் நமக்கு அளித்த கண்கள் எதற்கு?
பிறர் முன் நடித்து நடித்து நாம் யார் என்பதையே
மறந்துபோனோம்.பல பிறவிகளில்
இப்பிறவியிலும் அந்த தவற்றைச்
செய்யலாமா?
நம்மையெல்லாம் உய்விக்கவே அவனே
மார்கழி மாதமாக ஆனான் .அப்படியிருக்க
அவனை அதிகாலையில் தொழாது உறங்குவதால்
யாது பயன்?
இறந்த பிறகு ஒன்றும் செய்யாமல்
மறு பிறவி கிடைக்கும் வரை வீணே
உறங்கத்தானே போகிறோம்?
அதிகாலைக் குளிரில் ஆனந்தமாக நீராடி அவன் நினைவாய்
புற சின்னங்கள் தரித்து அவன் குடி கொண்டுள்ள கோயிலுக்கு சென்று
வழிபட புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவன் கதிர் மதியம் போன்றவன் என்கிறாள் ஆண்டாள்
நாம் குளிரில் நடுங்கி அங்கு சென்றால் அவனைக் கண்டதும் உடலில் வெப்பம் உண்டாகியதால் குளிர் அகன்று விடும். அவன் மதி போன்ற முகத்தை கண்டதும் உள்ளம் குளிர்ந்துவிடும்.
நாராயணன் மட்டும் தான் நாம் கேட்பதை
எல்லாம் தருவான் என்கிறாள் ஆண்டாள்.
மற்ற தெய்வங்கள் எல்லாம் அவரவர்கள் சக்திக்கும்
எல்லைக்கும் உட்பட்ட வரங்களை மட்டும்தான் தர இயலும்.
ஆனால் நாராயணன் மட்டும்தான் கொடுப்பதற்கென்றே தன்னை ஆட்படுத்திக்கொண்டிருகிறான். அதற்காக ஒரு முழு மாதத்தையே ஒதுக்கி விட்டான். அப்படியிருக்க நாமெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?
நம் மூச்சு காற்றுள்ளவரை அவன் நாமத்தை ஓதி வந்தால்
நஞ்சைக் கக்கும் அரவத்தின்மேல் சயனம் கொண்டிருக்கும் நம்
பெருமான் நம் நெஞ்சில் தேக்கி வைத்துள்ள
நச்சுக்களை நீக்கி விடுவான்
விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த நாம்
அந்த மண் மடந்தையாம் கோதை நமக்கு தந்த
அருட்பாவையை பாடி அரங்கனின் அருளைப் பெறுவோம்
வாருங்கள். அனைவரும்.
படங்கள்-நன்றி-கூகிள்
படித்து இன்புற்றேன்.
ReplyDeleteஉங்கள் கால் முற்றிலும் குணமாக நாராயணன் நல்லருள் புரியட்டும்.
என் 84 வயதுத் தந்தை இடுப்பெலும்பு உடைத்துக் கொண்டு மதுரையில் நடக்க முடியாமல் படுக்கையில் இருப்பதால் நிம்மதியற்றிருந்த எனக்கு காலையில் கண்ணில் பட்ட இந்தப்பதிவு கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.
நன்றி ஸ்ரீராம்.
Deleteஅடியார்களின் அனுபவங்கள்தான் பக்தனுக்கு பாடங்கள் ஆகின்றன. அவனுக்கு பகவான் மீது அதிக நம்பிக்கையை தூண்டுகின்றன.
நம்பிக்கைதான் அனைத்திற்கும் ஆணிவேர். உங்கள் தந்தை குணமாக அடியேனின் பிரார்த்தனைகள்.அவருக்கு இவனின் அன்பு வேண்டுகோள்.உடலை மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு, உள்ளத்தை அவர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் கண்ணனிடம் விட்டுவிட சொல்லவும். திருப்பாவை பாசுரங்களை முடிந்தால் எப்போதும் பாடிக்கொண்டிருக்க சொல்லவும் இல்லையேல் கேட்கச் செய்யவும்.உடலிலும் வலி நீங்கி வலிமையை அந்த கோதையும் கண்ணனும் அளிப்பது சத்தியம். 25-வது பாசுரமான "ஒருத்தி மகனைப். பிறந்து என்ற பாசுரத்தை யும் 29-வது பாசுரமான 'சிற்றம்சிறுகாலே " என்ற பாசுரத்தை யும் மீண்டும் மீண்டும் கேட்டால் பலன் உண்டாகும்
உங்களுக்கு என்றும் அருள் உண்டு ஐயா...
ReplyDeleteஸ்ரீராம் அவர்களின் தந்தையும் விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்...
உங்களுக்கு என்றும் பகவான்அருள் உண்டு DD
DeleteUmajayaraman
ReplyDelete7:46 AM (7 minutes ago)
to me, ஸ்ரீராம்., amritha, Sudha, Dr
Dear sir
Ur words of consolation to Sri sriram, miga miga arputham, esp,
"Surrender physical body to doctor, ullam to bhaghavan kannan"
brought tears to my eyes. Our sincere prayers for Sri sriram family.
Ungal arpudhamana oviyam, kavithai manathirkku miga miga
Idhamaga irrukkiradhu.
Regards
Umajayaraman
Hyderabad
நன்றி உமா ஜெயராமன் அவர்களுக்கு.
ReplyDeleteபகவன் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். பகவானின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எவர் கண்களிலிருந்து பக்தியினால் கண்ணீர் பெருகுகிறதோ அவர்களுக்கு அதுதான் இறுதிப் பிறவி என்கிறார். அப்படிப்பட்ட இதயம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.