Sunday, December 21, 2014

ஹனுமத் ஜெயந்தி (21.12..2014)

சென்ற ஆண்டு அனுமத் ஜெயந்தி அன்று எழுதப்பட்ட அனுமன் புகழ் மாலை. (மீள்பதிவு)

ஹனுமத் ஜெயந்தி (1.1.2014)


Art-T.R.Pattabiraman 

அஞ்சனை மைந்தன் 
அடியவர்களின் நேயன் 

ஆற்றல் மிக்கவன்
ஆறுதல் தருபவன்

நெடியோனின் பக்தன் 
கொடியோரை வதைப்பவன் 

வாயு குமாரன் 
வாதை தீர்ப்பவன் 

புலன்களை வென்றவன் 
புகழ்ச்சிக்கு அடிமையாகாதவன் 

பணிவுடன் இருப்பவன்
துணிவுடன் செயல்படுபவன் 

அன்னை சீதையின் 
சோகம் போக்கியவன்

தன்னை நாடிவருபவர் 
ரோகம் நீக்குபவன் 

ராம நாமத்தை 
நெஞ்சினில் கொண்டவன் 

பஞ்சு போல் காற்றில் 
பறந்து கடலைக் கடந்தவன்  

வாலியின் தம்பிக்கு 
வாழ்வளித்தவன் 

வணங்குவோருக்கேல்லாம் 
வரங்களை அள்ளித் தருபவன் 

ஆதவன்போல் ஒளி வீசுபவன் 
முழு நிலவு போல் 
குளிர்ந்த பார்வையுடைவன் 

வாலையின் சக்தியை தன் 
வாலில் கொண்டவன். 

வாழ்த்தி பாடினால் 
வளம் கொண்ட
வாழ்வை அருள்பவன் 

காண்பார் யாரையும் 
கரம் கூப்புவான் 
அவர்களின் இதயத்திலே 
உறையும் 
ஆத்ம  ராமனை கண்டு 

புத்தியையும் தருவான்
சக்தியையும் தருவான் 
துணிவையும் தருவான் 

பயமற்ற வாழ்வும் தருவான் 
வாக்கு வன்மையையும் தருவான் 

அன்போடு அவன் நாமம் சொல்லி
பணிவோடு அனுதினமும் 
வழிபடுவோர்க்கே 

2 comments:

  1. படமும் பதிவும் அருமை.

    ஆஞ்சநேயர் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete