மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்
இந்த உலகில் பிறக்கும்
முன் மதம் இல்லை.
ஒரு உயிர் மண்ணில் விழுந்தவுடன் அதை
கையில் எடுப்பவனால் மத சாயம் , பூசப்படுகிறது.
அந்த உயிர் மீண்டும் மண்ணுக்குள் போகும்வரை
அந்த சாயம் போவதில்லை.
ஆனால் மதம் நுழையாத சில தருணங்களும்
இருக்கத்தான் செய்கின்றன.
ஒருவன் பல நாள் பட்டினி கிடந்து
நினைவு தப்பும் வேளையில் ஒருவன்
அவன் உயிரைக் காக்க உணவு அளிக்கும்போது
மதத்தை பற்றி சிந்திபதில்லை.
ஒருவன் கொடிய நோயினால் துன்பப்படும்போது ஒரு
மருத்துவரிடம் செல்லும்போது அவர் எந்த மதம், எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை.
தன் நோய் குணமானால் போதும் என்று மட்டுமே
என்னும் அந்த நேரத்தில்
அவரை மருத்துவராகவே மட்டும் அந்த நேரத்தில் அனைவரும் பார்க்கின்றனர்.
அதுபோல் அந்த மருத்துவரும் வருபவரை
ஒரு நோயாளியாக மட்டுமே பார்க்கின்றார்
உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை.
இறைவனும் அப்படித்தான் அனைத்து
உயிர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கும்முன்பே தாயின் மூலம் பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமன் அமிர்தமான பாலை தயாராக வைத்திருக்கிறான்
ஆனால் உணவை உண்டு உடலில் சக்தி வந்தபின் அவனிடம் கர்வமும், தலை தூக்கி விடுவதால், தான் என்ற ஆணவமும், சுயநலமும் மிகுந்து சக உயிர்களிடம் பேதம் கண்டு தீமைகளை செய்கின்றான்.
இறைவன் பல இயற்க்கை இடர்பாடுகள், நோய்கள்,
அழிவுகள், ஏமாற்றங்கள் இழப்புகள் என எச்சரிக்கைகளை அளித்தும் மனிதர்கள் மனம் திருந்துவதில்லை.
தில்லை நாதனை சிந்தை செய்வதில்லை. திருவேங்கடனாதனை வணங்குவதில்லை திமிர் பிடித்து அழிகிறார்கள்.
மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.
அதை விடுத்து அதை பிறர் மீது திணித்தால்
அழிவைத்தான் சந்திக்க வேண்டி நேரிடும்.
அதைதான் இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment