Sunday, December 21, 2014

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்




இதயத்தில் அறியாமை என்னும்
இருள் சூழ்ந்துவிட்டால்
இறைவன் என்னும் விளக்கு
அணைந்துவிடும்

உதயத்தில் ஞாயிறு
உதித்தாலும் உறங்கித்தான்
கிடப்பர் சோம்பி திரியும்
வழியைத்தான் நாடும்
மனம் கொண்டோர்.

அரங்கனுடன் கலந்துவிட்ட
ஆண்டாள் நாச்சியார்
நம் அறியாமையைப் போக்கிடவே
பரிமுகனாம் ஹரி என்னும்
ஒளியை நாடும் வழிசொன்னாள்

உறக்கத்தை விட்டொழித்து
உவராழியிளிருந்து உலகிற்கு வந்து
உயரிய தர்மத்தை போதித்த
உடுப்பி கண்ணனை ,
உலகளந்த உததமனை
உள்ளத்தில் கள்ளம் தவிர்த்து
உள்ளம் என்னும் கோயிலில் அவனை
நிறுத்தும் முகமாக கோயிலில் சிலையாய்
நிற்கும் அவன் முன்பு சென்று அவன்
புகழ் பாட அழைக்கின்றாள்.தன் அந்தப்புரத்தை
விட்டு வெளியே  வருகிறாள் ஆண்டுதோறும்

ஹரி என்னும் தெய்வத்தை
அறிவதற்குத்தான் மனித உயிர்களுக்கு
அறிவைக் கொடுத்தது அந்த பரம்பொருள்.

ஆனால் பொருள் தேடுவதற்கும்
பிறர் அந்தரங்கம் அறிவதற்கும் மட்டுமே அறிவை அடைந்து
ஆயுள்  முழுவதும் அலைந்து ஓய்ந்து  வீணே மடிந்து
போகிறது மனிதர் கூட்டம்

தனக்குள்ளே குடி  கொண்ட தெய்வத்தை தேடாமல்
காட்டிலும் ,மேட்டிலும், காவி உடை உடுத்திய பல்
போலிகளிடம் சென்று தேடுகிறது காலமெல்லாம்.

உண்மைதான் தெய்வம் என்பதை அறிந்து
உண்மை பேசாமல் பொய்மையினால்
அவனை அடைந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு
போடுகிறது தற்புகழ்ச்சி பேசி தலைக்கனம் கொண்டு
தறுதலைகளைப் போல் தரணியில்
சுற்றித் திரியும் கூட்டம்.

அன்புதான் இறைவன் என்பதை உணராது
சுயநலத்தில் சிக்குண்டு பிறரின் நிலை கண்டு
ஏசித் திரிந்து ,சினந்து, துன்பம் இழைப்பதில்
இன்பம் கொண்டு இழிவான வாழ்க்கை
வாழுகிறார்  பெரும்பாலான மூடர்கள்.

சென்ற ஒவ்வொரு கணமும் எக்காலமும்
திரும்பி வரப்போவதில்லை.

இருக்கின்ற ஒவ்வொரு கணத்தையும்
தில்லை நாதனின் புகழ் பாடுவோம்.

திருவேங்கட நாதனின் திருவடிகளைப்
பற்றி சிந்திப்போம்.

உள்ளத்தில் குடி கொண்ட குகனின்
வடிவை நினைப்போம்.

நம்மையெல்லாம் படைத்தும் இயக்கும் அம்பிகையையும்,
நன்றாக வாழ்ந்து நல்லறம் செய்ய உதவும் அஷ்ட லக்ஷ்மீகளையும்
நாராயணனின் நாமம் நாவில் எப்போதும் நிலைத்திட
செய்யும் நாமகளையும். நாம் வாயார பாடுவோம்.

வேத வித்துக்களே ஓத இயலும் வேதத்தின் சாரத்தை
இனிமையான தமிழில் வடித்துத் தந்து நம்மையெல்லாம்
நாரணன் புகழ் பாடி நற்கதியை அடைய வழிகாட்டிய
ஆண்டாளின் திருப்பாவையை ஓதுவோம்.

ஓங்காரப் பொருளை உணர்ந்து நிலையான பதத்தை
பெற்று மகிழ்வோமாக

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்





2 comments:

  1. சென்றுவிட்ட ஒவ்வொரு கணமும் இனி எக்காலமும்
    திரும்பி வரப்போவதில்லை.

    இருக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் சிந்தை மகிழ
    தில்லைநாதனின் புகழ் பாடுவோம்!..
    திருஅரங்கனின் பேர் பாடுவோம்!..

    ReplyDelete