Monday, December 15, 2014

ஆண்டாள் காட்டும் அருட்பாதை (2)


 ஆண்டாள் காட்டும் அருட்பாதை (2)

  


வையத்து  வாழ்வீர்காள்  நாமும்  நம்பாவைக்கு (ச் )

செய்யும்  கிரிசைகள்  கேளீரோ  பாற்கடலுள்

பைய (த்   )  துயின்ற  பரமனடி  பாடி

நெய்யுண்ணோம்  பாலுண்ணோம்  நாட்காலே  நீராடி

மையிட்டு  எழுதோம்  மலரிட்டு  நாம்  முடியோம்

செய்யாதன  செய்யோம்  தீக்குறளை (ச்  ) சென்றோதோம்

ஐயமும்  பிச்சையும்  ஆந்தனையும்  கை  காட்டி

உய்யுமாறெண்ணி  உகந்தேலோ ரெம்பாவாய்
.


 நாம் பிறந்த இந்த பூமி
அனைவருக்கும்  சொந்தம்

யாரும் வானத்தில் பிறப்பதில்லை.

மனிதர்கள் எந்த மதத்தைச்   சார்ந்தவாராய் இருப்பினும்
மண்ணில்தான் பிறப்பெடுக்க வேண்டும்.
மண்ணுக்குள்தான் போக வேண்டும்.

இருந்தாலும் இந்த உண்மையை
எல்லோருக்கும் தெரிந்தும்
ஏற்றுக்கொள்வதில்லை.

அவரவர் அவரின் கொள்கைகள்தான் உயர்ந்தது,
என்று வீண் வாதம் செய்கின்றனர்.
அதிலேயே மூழ்கி வீணே மடிந்து போகின்றனர்.

ஆனால் பூமிதேவியாகிய ஆண்டாள்
அனைத்து  உயிர்களையும்
தன் குழந்தைகளாகத்தான் பாவிக்கிறாள்.

அனைவரும் இந்த உலகத்தில்
பிறவி எடுப்பது வாழ்வதற்காகவே

அதுவும் வாழ்வாங்கு வாழ்வதற்காகவே.

ஆனால் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம்
அதற்க்கு மாறாகவே உள்ளது

இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள்
தான் மட்டும்தான் வாழவேண்டும்
என்று நினைக்கிறார்கள்.

சிலர் தான் வாழ பிறரை அழிக்கிறார்கள்.

நல்ல உள்ளம், அன்புள்ளம் கொண்டவர்கள் மட்டும்தான் தானும் வாழ வேண்டும் தன்னைப்போல மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இறை நினைவிலே தன்னை ஆட்படுத்திக்கொண்ட
ஒருவர் தன்னை பற்றி சிந்திப்பதேயில்லை.

மற்றவர்களின் நலனைப் பற்றியே எப்போதும் சிந்திக்கின்றனர்.

அவர்களின் எண்ணத்தினால்தான்
இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.
அவர்கள் தெய்வமாகவே  போற்றப்படுகிறார்கள்.

நாம் அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
பிறருக்கு கேடு.  செய்யாமல் இருந்தால் போதும்.

அந்த எண்ணமே  நம்மை அடுத்த  உயர்ந்த நிலைக்கு
நம்மை  அழைத்துச் செல்லும்.

ஆண்டாள் இந்த உலகில் வாழுகின்ற
அனைவருக்கும் சொல்லுகின்றாள்.




பெண் குழந்தைகளை நாம்  போற்றவேண்டும்.
அவர்களை நாம் மதிக்க வேண்டும்.
அவர்களுக்கு நாம் எந்த விதமான
தீங்குகளையும் செய்யக்கூடாது.

ஏனென்றால் அவள்தான் உயிர்களை
பெற்றெடுக்கும் தாயாகிறாள்.

தன் உதிரத்தை பாலாக கொடுத்து வாழ வைக்கிறாள்.
அவள் தன்னை  மறந்து தன் குழந்தைகளுக்காகவும்,
கணவனுக்காகவும், சுற்றங்களுக்காகவும்,
இந்த  சமூகத்திற்காகவும் தன் இறுதி மூச்சு வரை
தியாகம் செய்கிறாள்.

அதனால்தான்பரமசிவன்
பார்வதிக்கு  தன்  உடலின் பாதியைத் தந்தான்.
பிரம்மனோ கலைமகளை தன் நாவில் வைத்தான்,
பரந்தாமனோ இலக்குமியை தன்  இதயத்தில் வைத்தான்.


அதனால்தான் ஆண்டாள் சொல்லுகிறாள்.

நாவில் சரஸ்வதி குடியிருப்பதால்
அந்த நாவைக் கொண்டு தீய சொற்களை பேசக்கூடாது
அதைக்கொண்டு பரந்தாமனின் புகழ் பாடி
நன்மையை அடையவேண்டும் என்று சொல்லுகிறாள்.




பெண்களை காம எண்ணங்களோடு பார்க்கக்கூடாது
என்பதற்காக புற அழகு பூச்சுக்களை இந்த உத்தமமான மாதத்தில் விட்டொழித்து இறை சிந்தனையோடு இருந்து உயரிய நிலையை அடையுங்கள் என்கிறாள். ஆண்டாள்.





ஐயம் என்பது நாம் பிறருக்கு அளிப்பது .
அவ்வை பிராட்டி நாம் உணவை உண்பதற்கு முன்
பசித்த ஒருவருக்கு அளித்தபிறகுதான் உண்ணச் சொல்கிறாள்.
வள்ளுவனோ தனக்கு கிடைத்த உணவை நம்மை சுற்றியுள்ள
உயிர்களுக்கும்   அளித்து எஞ்சிய உணவை உண்ணச்  சொல்கிறார்.
பசித்த உயிருக்கு உணவளிப்பது அந்த பரந்தாமனுக்கே அளிப்பது
என்று திருமந்திரம் கூறுகிறது.
பிரம்மச்சாரிகள், துறவை மேற்கொண்டவர்கள் மட்டும்தான்
பிச்சையெடுத்து உண்ண  வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு செயல்களையும் முறையாக செய்து ஒவ்வொருவரும்
உய்யும் வழியை நாட வேண்டும்.

நாம் அனைவரும் இறைவன் உகக்கும் செயல்களை செய்ய வேண்டும்.
அப்போதுதான் உண்மையான மகிழ்ச்சியை அடைந்து இன்புற முடியும்.


இந்த இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் கூறிய உட் கருத்தை நினைவில் கொண்டு நம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும் பிறர் மகிழ்ச்சியில்தான் தங்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பபதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.




4 comments:

  1. //பிறருக்கு கேடு செய்யாமல் இருந்தால் போதும்.
    அதுவே நம்மை அடுத்த உயர்ந்த நிலைக்கு
    அழைத்துச் செல்லும். //

    அருமை.. ஐயா!..

    (நமது தளத்திலும் மார்கழிக் கோலம்!..)

    ஆண்டாள் திருவடிகளே சரணம்..

    ReplyDelete
    Replies
    1. மார்கழிக் கோலம் கண்டோம்
      உள்ளத்தில் மகிழ்வு கொண்டோம்.

      Delete
  2. அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தனக்கு - ஆயுள் முழுவதும் சுப தினம் தான் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பிறர் மகிழ்ச்சியில்தான் தங்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பபதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.DD

      Delete