Saturday, March 1, 2014

கங்கை அன்னையே ..


கங்கை அன்னையே ..

கங்கை அன்னையே
நீ பெருமை வாய்ந்தவள்



நீ உற்பத்தியாகும் இடத்தில்
உனக்கு தீப ஆராதனை



பரந்தாமனிடமிருந்து வந்ததால்
பரிசுத்தமாய் இருக்கின்றாய்

உன்னை சிவபெருமான் தன் தலையில் தாங்கி
உன்னைப் பெருமைப் படுத்துகின்றான்.



காசியில் வந்து நீராடுபவர்களின்
பாவங்களை போக்குகின்றாய்.

தீபாவளி அன்று நீ எல்லா நீர்நிலைகளிலும்
ஆவிர்ப்பவித்து நீராடுபவர்களின்
பாவங்களைப் போக்குகின்றாய்.




பாதகம் செய்பவர்களைக் கண்டால்
அவர்களை மோதி மிதித்து விடு
பாப்பா என்றான்  பாரதி.

இப்படிப்பட்ட புண்ணிய நதியை
பாழ் பண்ணுபவர்களை யார்  தடுப்பது?
யார் தண்டிப்பது?

அந்த கங்கை மாதாதான்
அதற்க்கு வழி காண வேண்டும்





3 comments:

  1. சுத்தமாவது இனி சந்தேகம் தான் ஐயா...

    ReplyDelete
  2. கங்கையினைக் கூட அசுத்தப்படுத்திவிட்ட பாவிகள் நாம்

    ReplyDelete
  3. இருந்தும் அவள் ஒவ்வொரு ஆண்டும்
    தன் கல் போன்ற (பனிக்கட்டிகளை ) மனதை
    இளகி வெள்ளமெனப் பாய்ந்து தன்னை சுத்தப் படுத்திக்கொள்கிறாள்.

    நீரை பாழ்படுத்துபவன்
    கிழிந்த நாராய்ப் போவான்
    எதற்கும் பயனின்றி.

    ReplyDelete