Sunday, March 30, 2014

கலங்காதிரு மனமே !

கலங்காதிரு மனமே !

கலங்காதிரு மனமே
உன்னை வாட்டி வதைக்கும்
கவலைகளைக் கண்டு
கலங்காதிரு மனமே

கவலைகள் எல்லாம்
கனவுகள் போல்
காணாமல்போய் விடும்
மறு கணமே

நம் வாழ்வில் கண்களில்
நீரை வரவழைக்கும்
இன்பம் துன்பமும் இரண்டும்
ஒன்றேதான் என்பதை உணர்ந்து
மனம் அமைதி கொள்வாய் தினமே

கோடை வெயிலில்
கதிரவனை மறைக்கும் கார்முகில்
இன்பம் தரும் அப்போது


முழு நிலவினை மறைக்கும்
கரு மேகம் பொழுதை இருளாக்கி
துன்பம் தரும் அப்போது



நிலையான கதிரவனை
மறைக்கும் நிலையற்ற கார்முகிலும்
முழு நிலவை மறைக்கும்
காற்றால் கலைந்துபோகும் கருமுகிலும்
ஒன்றேதான் என்ற உண்மையைபோல்
இன்பமும் துன்பமும் நிலையல்ல
என்பதை  உணர்ந்துகொள் மனமே

மறைக்கும் முகிலுக்கு மேலே
ஒளி  வீசும் கதிரவனும், குளிர் நிலவும்
நிலையாய் நின்று இன்பம் தருவது





அதுபோல் நம் மனதிற்கு மேலே
நிலையாய் இதயக் குகையில்
கோயில் கொண்டு அருள்பவன்
கண்ணன் என்னும் கருந்தெய்வம்
என்பதை உணர்ந்திடுவாய்
என்றும் மாறா மகிழ்ச்சியில்
திளைத்திடுவாய்

படங்கள்-நன்றி-கூகிள்


5 comments:

  1. அருமை ஐயா... துன்பம் வந்தால் தானே இன்பத்தின் அருமை தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. தீயை நாமாக தொட்டால் சுடும்
      அது துன்பம்

      விரதம் இருந்து தீயின் மேல் நடந்தால்
      அது இன்பம்

      இப்போது சொல்லுங்கள் எது இன்பம் எது துன்பம்
      இன்பமும் துன்பமும் மனநிலையின்பாற்ப் பட்டதே
      என்பதை உணர்ந்தால் இரண்டும் ஒன்றே எனத் தெரிய வரும்.

      Delete
  2. கலங்காதிரு மனமே..
    கவலைகள் ஏன் தினமே!..

    கருநிறத்து எந்தை
    காலடி பற்று!..

    கவலைகள் எல்லாம்
    கனவுகள் போல
    கலைந்தே போகும்
    மறு கணமே!..

    ReplyDelete
    Replies
    1. காலடியில் அவதரித்தவன்
      கோவிந்தனை பஜிக்கச் சொன்னான்

      சீரடியில் தோன்றியவனோ
      ராமனை நினைக்கச் சொன்னான்

      ஆனால் நாமோ அவனை மறந்துவிட்டு
      அவனை மறைக்கும் மாயையையே
      பற்றிக்கொண்டு மனம் பதறிக் கொண்டிருக்கின்றோம். .

      Delete
    2. ஆஹா.. அருமை..

      இவ்வுலகம் அன்று முதலே - நுரை தின்று பசியாறத் துடித்துக் கொண்டிருக்கின்றது.
      இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே! - என்பார் கவியரசர்.

      தங்களைப் போன்ற பெரியோர்கள் ஏற்றி வைக்கும் திரு விளக்குகளால் உள்ளங்கள் ஒளிர்வதாக!..

      Delete