Monday, March 3, 2014

இறை நம்பிக்கை வேண்டும்


இறை நம்பிக்கை வேண்டும் 


மனதை கண்காணிக்க வேண்டும்.

அது எதை நாடி ஓடுகிறது

எங்கு செல்கிறது
எதற்க்காக செல்கிறது.



என்பதை கண்காணிக்கவேண்டும்.

கண்காணிக்காவிடில் என்ன நடக்கும் ?



என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

மனதிற்கு துணை செய்ய
ஆறு அயோக்கியர்கள்  இருக்கிறார்கள்.

முதல் அயோக்கியன் ஆசை.

அவனைத்தான் நாம்
முதலில் கண்காணிக்கவேண்டும்.

ஏனென்றால் அவனை நாம்  கண்காணிக்காமல்
விட்டுவிட்டால் நம்மை அறியாமல்
மற்ற ஐந்து அயோக்கியர்களையும்
நம் மனம் என்னும் வீட்டில் குடி வைத்துவிடுவான்.
அதற்குப் பிறகு. மனம் குடியிருக்கும் வீடு
அழியத் தொடங்கி விடும்.

நாம் மனிதப் பிறவி எடுத்ததே மீண்டும்
பிறவாது ,இறவாது அமரத் தன்மை எய்துவதர்க்கே

அதற்குரிய வழிகளை நாடாமல்
குழிகளைத் தேடி போய் அதில்  விழுந்து
மீளா நரகத்தில்  விழுவதற்கா
நாம் மனிதப் பிறவி எடுத்தோம்
என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலக வாழ்க்கையையும்
ஆன்மீக வாழ்க்கையையும் ஒன்றாகச் சேர்த்து
குழப்பிக் கொள்ளக் கூடாது .

இரண்டையும் ஒன்றை ஒன்றில்
குறுக்கிடாமல் புத்திசாலிதனமாக
வாழ்க்கை நடத்தவேண்டும்.

ஆன்மீகத்தில் மனம் நன்றாக நிலைபெறும் வரையில்
அவரவர் உதித்த குல மரபுகள் படி ஆன்மீக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடனும், பண்புடனும்,
கடமைகளை தவறாமல் செய்வதுடன்
தீயோர்களின் கூட்டுறவை தவிர்த்து
நல்லோர்களின்  கூட்டுறவுடன் இணைந்து ,
மனதில் தோன்றும் விபரீத ஆசைகளைக்
கட்டுப்படுத்தி வாழவேண்டும்.


இறைவன் மீது முழுமையான
நம்பிக்கை வைக்கவேண்டும்.

நமக்குள் இருந்து நம்மை இயக்கும்
இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவன்
வாழ்க்கை பயனற்றது

அவனிடம் கோடிக்கணக்கில்
செல்வம் இருப்பினும் அது வீணே

உயிரில்லாத சடலத்தை  லட்சகணக்கில் செலவு செய்து
அலங்கரித்தாலும் அது வெறும் சடலமே

புறத்தே இறை வடிவத்தின் மீது
ஒருதுளசி  அல்லது  வில்வ தளமோ அல்லது
ஒரு சிறு மலரோ இட்டு வழிபட்டாலும்
அதன் மகிமை அளவிடற்கரியது
என்பதை இறை நம்பிக்கை
உடையவர்கள் மட்டும்தான் உணரமுடியும்.



அதுபோல் உள்ளத்தில் உறையும் இறைவனை
அன்பென்னும் உணர்வால் பூசிக்கவேண்டும்

படங்கள்-நன்றி-கூகிள்


4 comments:

  1. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...!

    ReplyDelete
    Replies
    1. பிரேக் இல்லாத வண்டிக்கு என்ன ஆகும்?
      அதுதான் ஆகும் மனம் போன போக்கில் போவதும்

      Delete
  2. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா... பல பகிர்வுகளில் எழுதியது சரி தான்...

    ReplyDelete
    Replies
    1. உள்ளிருப்பவனைஇந்த
      உடல் களைத்து
      உளுத்துப் போவதற்குள்
      உணர்ந்து கொள்ளவேண்டும்

      வாய்ப்பை விட்டால்
      மீண்டும் மனித பிறவி பெற்று
      "ராம ரசம்" பதிவினைப் படிக்கும்
      வாய்ப்பு கிடைக்குமா ?

      எத்தனை நூற்றாண்டுகள்
      ஆகும் என்று யாருக்கும் தெரியாது

      Delete