அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம்
அவ்வைப்பாட்டிக்கு தான்தான் அனைத்தையும்
கற்றுவிட்டதாக மண்டை கர்வம்.
அதே பாட்டிதான் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று எழுதி வைத்தாள்
ஆனால் அது ஊருக்குதான் உபதேசம் போலும்.
கல்லாதவரை அவமதிப்பதில்
யாரும் அவளுக்கு நிகரில்லை போலும்.
அவள் ஒரு பாட்டில் கூறுகிறாள்.
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.
ஒரு காட்டில் மயில்கள் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னையும் மயில் போல பாவித்து அது தனக்கு உள்ள சிறகை விரித்து ஆடியதாம்.
அதில் என்ன தவறு.
அதை இழிவாக பேசுகிறாள் அவ்வைப் பாட்டி
இறைவன் படைப்பில் அனைத்துமே அழகுதான்.
அதை ரசிக்கும் பரந்த குணம் அவளுக்கு இல்லை.
இதை எதற்காக உதாரணம் காட்டுகிறாள் என்றால்
கல்லாதவன் கவி எழுதினால்
இதைப்போல் மட்டமாகத்தான் இருக்குமாம்.
கவி எழுதுவது என்பது இதயத்தில் தோன்றும்
உணர்சிகளின் வெளிப்பாடு .
அது ஊற்றுப்போல் வெளிப்படுவது.
அதற்க்கு வரைமுறைகள் கிடையாது
நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர்கள்
எந்த இலக்கணம் கற்றார்கள்?
கவி சக்ரவர்த்தி கம்பனே ஒரு ஏற்றம்
இறைப்பவனிடம் திணறிப் போனான்
என்பது வரலாறு.
க (கவிதைக்கு ) விதை (கலைமகளின் அருள்தான்)
என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். .
தான் கற்றவர் என்ற கர்வம். அவளுக்கு.
ஆனால் இறைவனுக்கு அவனின்
எல்லா படைப்புகளும் ஒன்றுதான்.
அழகே உருவான முருகன். அவ்வைக்கு அளித்த அழகிய வடிவத்தை துறந்து காண்போர் வெறுக்கும் தொண்டு கிழவிபோல் வடிவை வேண்டிப் பெற்ற அவ்வையின் கர்வத்தை ஒடுக்க மனம் கொண்டான்.
அவள் நடந்து வரும் வழியில் ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
பசியினால் களைத்து வந்த அவ்வை அவனைப் பார்த்து சிறுவனே கொஞ்சம் நாவல் மரத்தை உலுக்குகிறாயா ,நான் கொஞ்சம் நாவல் பழம் உண்டு பசியாறுகிறேன் என்றாள்
அப்போது அந்த சிறுவன் ,பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்
அவ்வை திடுக்கிட்டாள் .
பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று வகைகள் இருக்கிறதா என்று திகைத்தாள்
எனினினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுட்ட பழமே போடு என்றாள்
சிறுவன் மரத்தை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன
பழங்களை பொறுக்கி கையில் எடுத்தாள் அவ்வை பாட்டி.
அதில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது.
அதை வாயிற் வைத்து ஊதினாள் மணல்துகள் அகல.
உடனே அந்தசிறுவன் கேட்டான்
என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ வாயால் ஊதி சாப்பிடுகிறாய்.
ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்
தன்னை திணற வைத்துவிட்டானே என்று
அதிசயித்தாள்.
அப்போது சிறுவனே நீ யார் ?
தான் கற்றவள் கல்லாதவர்கள் மூடர்கள்
என்று நினைத்த உன்னை சோதிக்க வந்தவன்.
உன் அகந்தையை விட்டுவிட்டு என்னைப் பார்
,நான் யார் என்பது புரியும்.
அவள் புரிந்துகொண்டாள்
இனி யாரையும் இழிவு செய்யாதே
என்று அறிவுறுத்தி மறைந்துபோனான்
ஞான பண்டிதன். .
அகந்தை கொண்ட மனிதர்களை யாரும் அழிக்கவேண்டாம். அவர்களே அதற்கான வழியை தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.
அந்த அறிவுரை நமக்கும்தான்.
அவ்வைப்பாட்டி சொன்ன பாட்டு தவறு என்பதாக ஆரம்பத்தில் சொல்லி, முடிவில் அழகன் மூலம் உணர்வதாக முடித்தது மிகவும் ரசிக்க வைத்தது ஐயா...
ReplyDeleteநன்றி...DD
Deleteமுதலில் இந்தத் தகவலை சிறுவயதில் எ எஸ் வாசன் தயாரித்த ஔவையார் திரைப்படம் பார்க்கும்போது அறிந்தேன்! :)))
ReplyDeleteமுதலில் இந்தத் தகவலை சிறுவயதில் எ எஸ் வாசன் தயாரித்த ஔவையார் திரைப்படம் பார்க்கும்போது அறிந்தேன்! :)))
Deleteமுதலில் இந்தத் தகவலை எ எஸ் வாசன் தயாரித்த ஔவையார் திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தபோது அறிந்தேன் .என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் எனக்கு தெரிந்து எஸ். எஸ். வாசன்
நன்றாக வயதான பிறகுதான் இந்த படத்தை தயாரித்தார்.
அதற்காக கொத்தமங்கலம் சுப்புவை நியமித்து பல விவரங்களை திரட்டினார்.
:)))))))))))))))))
DeleteSalem Iyer
ReplyDelete8:22 AM (1 hour ago)
to me, amritha, amrithavahini
Write about the great poet saint by forgetting tamil.
Is it ஔவை or what you have typed!
எனக்கு தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.
Deleteஅவ்வளவுதான்.
நான் கற்றது கையளவு கூட இல்லை.
கடலளவு உள்ள தமிழை இலக்கணம் என்று ஒரு சட்டத்திற்குள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை.
அது அதை கற்றுக்கொண்டவ்ர்களுக்கு மட்டும் உதவுமே தவிரே பாமர மக்களுக்கு போய் சேராது. என்பது இவனின் எண்ணம் .
மொழி என்பதே தொடர்பு கொள்ளும் கருவியே தவிர
அது இப்படிதான் இருக்கவேண்டுமென்றால் அது
புத்தகங்களிலேயே தங்கிவிடும்.
தமிழை முழுவதுமாக கற்ற பிறகுதான் நான் எழுதவேண்டுமென்றால் தமிழின் பெருமையைப் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை நான் வெளியிடிருக்கமுடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறைகள் நிறைந்தவன். தான் மனிதன்.
கட்டுரையின் நோக்கம் கற்றதனால் அகந்தை கொண்டு கல்லாதவர்களை இழிவு படுத்தக்கூடாது என்பதை தமழறிந்த மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதே.
தங்களைப் போன்ற அறிஞர்கள். அன்னம்போல் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்த வேண்டுகிறேன்