Sunday, March 16, 2014

குருவாயூரப்பன் தத்துவம்

குருவாயூரப்பன் தத்துவம் 




























ஓவியம்-தி   ரா.பட்டாபிராமன் 


கிருஷ்ணாவதாரம் முடிந்தவுடன் 
துவாரகை கடலில் மூழ்கியது 

அப்போது அங்கு மக்களால் 
பூஜிக்கப்பட்டுவந்த கிருஷ்ண   மூர்த்தி 
குரு மற்றும் வாயு தேவரால் 
அக்காலத்தில் பரசுராம ஷேத்ரம் 
என்றழைக்கப்பட்ட இன்றைய 
கேரளாவில்  பிரதிஷ்டை செய்யப்பட்டது 

குரு மற்றும் வயுதேவரால் பிரதிஷ்டை 
செய்யப்பட்டதால் அவ்விடம் குருவாயூர் என்றும் 
இறைவனை அப்பன் என்றழைக்கும் வழக்கம் 
அப்பகுதியில்  இருந்தமையால் அந்த 
மூர்த்தி குருவாயூரப்பன்  என்றழைக்கப்பட்டார். 

உண்மையில் கிருஷ்ணபரமாத்மா பகவத்கீதை 
என்னும் ஞானக் கருவூலத்தை இந்த அகிலத்திற்கு 
உபதேசம்  செய்தமையால்  ஜகத் குரு 
என்று அழைக்கப்படுகிறார்.
(வாசுதேவ சுதம் தேவம்.....கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் )

இரண்டாவதாக பகவான்தான் நம்மை எல்லாம் 
இயங்க வைக்கும் பிராண சக்தியாக(வாயுவாக) விளங்குகிறான் 

மூன்றாவதாக அனைத்திற்கும் அவன்தான் மூலம், தந்தை 
அதனால் தான் அவன் அப்பன் என்றழைக்கப்படுகிறான். 

அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த குருவாயூரப்பனை 
அனுதினம் வணங்குபவர்களை துன்பங்கள் அணுகாது 
என்பது சத்தியம். .




8 comments:

  1. சமீபத்தில்தான் இந்தத் தகவலை ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் தளத்திலும் விளக்கமாகப் படித்தேன்.

    படமும் அழகு.

    ReplyDelete
  2. அப்படியா!
    உண்மை அவ்வப்போது யார் மூலமாவது
    வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.

    படமும் அழகு
    நன்றி ஸ்ரீராம்

    பாராட்டுக்கள் அவனுக்கே
    இவன் கருவியே
    இவன் அவனை சிறு வயதுமுதலே
    உள்ளத்தில் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான்.
    அவனும் இவனை என்றும் எந்த நிலையிலும்
    கைவிட்டது கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்ன பதிவின் லிங்க்..

      http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_20.html

      Delete
    2. படித்தேன்.நன்றி ஸ்ரீராம்

      Delete
  3. அருமை ஐயா... படம் அற்புதம்...

    ReplyDelete
  4. பகவான்தான் நம்மை எல்லாம்
    இயங்க வைக்கும் பிராண சக்தியாக(வாயுவாக) விளங்குகிறான்//

    மிக நேர்த்தியான படம் ..பிரத்யட்சமாக குருவாயூரப்பனை வரைந்தமைக்கு நமஸ்காரங்கள்..!

    ReplyDelete