Sunday, March 9, 2014

அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?




















இவ்வுலகில் பிறந்தவுடன்
தாயுடன் சில காலம்
ஒரு பகுதியாய் இருந்து
தனியே வெளியே வந்தவுடன்
அதன் பிரிவைத் தாங்காமல்
அழுகின்றோம்.

ஆனால் தாய் நாம் பசியால்தான்
அழுகின்றோம் என்று அணைத்து
பாலமுதை தருகின்றாள்.நாம்
பாலனாக இருக்கும் வரையில்

உடனே அனைத்தையும்  மறந்து
உறங்குகின்றோம்.

அடுத்த பிரிவு தாயைப் பிரிந்து
பள்ளிக்கு செல்கின்றோம்
அப்போது அழுகின்றோம்.

பள்ளி உறவுகளுடன் தொடர்பு
ஏற்ப்பட்டவுடன் தாயுடன் ஏற்ப்பட்ட
உறவுகளின் நெருக்கம் மங்கத் தொடங்கி
மனைவி மக்கள் என முடிவில் தொடர்பே அற்றுப்போகிறது.

இன்பத்தை பொருட்களிலும், அழியும் மனிதர்களிடமும்,
கணத்திற்கு கணம் மாறும் குணம் கொண்ட  உறவுகளிடமும்
தேடி  மனம் அமைதியில்லாமல் அலைந்து திரிகின்றோம்.

அழியா ஆனந்தம் நமக்குள்ளே இருப்பதை அறியாது
புறத்தே அலைந்து களைத்துப்போய் உறக்கம் பாதி மயக்கம் பாதி
என வாழ்க்கை கனவுகள் ஒருநாள் கலைந்து  போகிறது

நம் கனவுகள் கலைந்து  நாம் காணமல் போனபின்
சுற்றியிருக்கும் உறவுகள் அழுகின்றன.

அழியாப் பதம் தரும் ஆடல்வல்லான்
உள்ளும் புறமும் நிறைந்திருக்க
அவன் அருளை நாடாது
குரங்குபோல் அங்குமிங்கும்
திரியும் மனதின் பின்
சென்றால் அதோகதிதான்.

இவ்வுலகில் எந்த செயலில் ஈடுபட்டாலும்
மனம் எப்போதும்  காந்த ஊசிபோல்
பேரம்பலத்தில் ஆடும் பேரானை  
எண்ணிக்கொண்டிருந்தால் போதும்
கவலைகளும், காமப்பேய்களும்
நம்மை ஒன்றும் செய்யாது


2 comments:

  1. /// இவ்வுலகில் எந்த செயலில் ஈடுபட்டாலும்
    மனம் எப்போதும் காந்த ஊசிபோல் ///

    அருமை ஐயா...

    ReplyDelete
  2. ஆம், 'காந்த ஊசி போல' நல்ல உவமை. DD யை ஆமோதிக்கிறேன். :))

    ReplyDelete