Friday, March 28, 2014

ராமாயணத்தில் தசரதனும் கைகேயியும்

ராமாயணத்தில் தசரதனும் 
கைகேயியும்

இராமாயண கதை ஒரு. புறம் இருக்கட்டும்.
அது காட்டும் சில நல்ல கருத்துக்களை
சிந்தை செய்வோம்.



ராமாயணம் படிப்போர் கைகேயி
பாத்திரத்தை வெறுப்போடு பார்க்கிறார்கள்.

காரணம் அவள் தன் மகன் பரதன்
அரசாளவேண்டுமேன்று நினைக்கிறாள்
ஏன் அவ்வாறு நினைக்கிறாள்?


ராமன் முடிசூடினால் அவளும் அவள் மகனும்
அவனுக்கு அடிமைகளாக ஆகிவிடுவார்கள்  என்று
கூனி அவளுக்கு அறிவுரை கூறுகிறாள்


பெண்கள் பேதலிக்கும் புத்தி உடையவர்கள்
நல்ல மனம் உடைய கைகேயியின் மனதை
பிள்ளைப் பாசம் கெடுத்துவிட்டது.

ஒரு குடம் நல்ல பாலைக் கெடுக்க
ஒரு சொட்டு நஞ்சு போதும்.

பல நூறு ஆண்டுகள் வளர்ந்த மரத்தை வெட்ட
ஒரு கோடரி போதும்

சிறுவயது முதலே இணை பிரியாமல்
இருந்த நண்பர்கள் பிரிவதற்கு
ஒரு அற்ப காரணமே போதும்.
நண்பர்கள் பகைவர்களாகிவிடுவார்கள்.

அதனால்தான் ஒரு மனிதன் சத்சங்கத்தில்
நித்தியமாக, நிரந்தரமாக் தன்னை
இணைத்துக்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு தீயவர்களோடு
இணைந்தால் நம்முடைய நல்ல பண்புகளும்,
மன அமைதியும் சர்வ நாசமாகிவிடும்.

தீயாரை காண்பதும் தீதே என்கிறார்கள்.
அப்படி இருக்க தீய சிந்தனை கொண்ட
மந்தரையை தன்னோடு  வைத்துக்கொண்டிருந்த
கைகேயின் மனம் மாசடைந்ததில்
வியப்பு ஒன்றுமில்லை.

ஆதி சங்கரர் சத்சங்கத்தில் இணைந்தால்தான்
நம்மை துன்பத்தில் சிக்கவைத்து  காமம் , மோகம்
முதலிய தீய குணங்கள் நம்மை பற்றாது என்கிறார்.

மோகம் தொலைந்தால்தான் இறைவனின்
உண்மையான தத்துவம் புரியும்.
மனம் அமைதி அடையும்.

அப்போதுதான்

ஜீவன் விடுதலை பெற முடியும்

நல்லநலம் தரும்  சத்சங்கத்தில் இணைவோம்.
நல்ல கதியை அடைவோம்.




ராம நாமத்தை இரவும் பகலும்
இடைவிடாது ஜெபிப்பதே
நல்ல சத்சங்கம்

  

4 comments:

  1. கைகேயினால் ராமரின் சிறப்பை உலகம் அறிய முடிந்ததே ஐயா...

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையின் நோக்கம் அதுவல்லவே

      Delete
  2. மண்ணுலகில் -
    நாம சங்கீர்த்தனம் ஒன்றே - நம்மை நல்வழிப்படுத்துவது!..
    சிந்தையில் நிறையும் இனிய பதிவு!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே .
      வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்தமைக்கும் நன்றி

      Delete