ஆனை முகனே! ஆனை முகனே!
ஆனை முகனே
அனைவரையும் அன்பால்
ஆளும் அருள்நேயனே!
கவலைகள் எல்லாம்
காணாமல் போய்விடும்
உன்னை கண்டவுடனே
மலை முகட்டிலும் இருப்பாய்
மக்களோடு மக்களாய் மவுனமாய்
மரத்தடியிலும் வீற்றிருப்பாய்
கோயில் உள்ளேயும் குடியிருப்பாய்
வானமே கூரையாய் வெட்ட வெளியிலும்
அமர்ந்திருப்பாய்
பக்தியுடன் மோதகம் படைப்போம் உனக்கு
அனைத்தும் எங்களுக்கு சாதகமாய்
அமைந்திட நீ அருள்வாய்
ஒன்றும் செய்யாமல் கம்மென்று
கிடக்கின்றாய் ஆனால் அதுவே
"கம் கணபதயே நமஹ " என்று உன்னை
துதிக்கும் மந்திரமாயிற்று.
உன் வடிவம் பின்னமானாலும்
உன் அருட்சக்தி குறையாது
அது ஒன்றே போதும் நீ பரப்ரம்மம்
என்பதை பறைசாற்ற .
நீ சந்தியில் இருந்தாலும்
கோயில் சந்நிதியில் இருந்தாலும்
மறவாமல் எப்போதும் என் புந்தியில்
வந்தமர்ந்து என்னைக் . காத்திடுவாய்.
கம் கணபதயே நமஹ...
ReplyDeleteபடம் மிகவும் அழகு ஐயா...
நன்றி...DD
ReplyDeleteவிக்ன விநாயக பாத நமஸ்தே...
ReplyDeleteஅரசமரத்தடி என்றாலே ஆனைமுகத்தான் இடம் பிடித்து விடுகிறாரே... ஏன்?
அரச மரத்தைச் சுற்றுபவர்கள்
ReplyDeleteஅப்படியே தன்னையும் சுற்றிவிட்டு
அருள் பெற்று செல்லட்டுமே என்ற
கருணையினால்தான்
விநாயகர் ஆலயம் முழுவதும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது என்ற விவரத்தை கவனிக்கவில்லையா?
கவனித்தேன். என் கேள்வி விநாயகரைப் பற்றிப் பொதுவான கேள்வியாகத்தான் கேட்டேன்! :)))
ReplyDelete