வளம் சேர்க்கும் வள்ளி
வணங்குவோர் வாழ்வில்
வளம் சேர்க்கும் வள்ளியே
குமரனின் மனத்தைக்
கொள்ளைகொண்ட கள்ளியே
எங்கள் வாழ்வு இனிதாகப் போகும்
எப்போதும் உந்தன் திருவடியை எண்ணியே
அன்போடும் அருளோடும் அனைவருடனும்
அனுசரித்து வாழ்வோம் உன்னிடம்
பக்தி பண்ணியே
நான் பாமரனாய் இருந்தால் என்ன?
மெத்த படித்தவனாய் இருந்தால் என்ன?
பசித்தோருக்கு பசியாற்றும் மனமும்
துன்புற்றோர்க்கு உதவிக் கரம் நீட்டும்
உள்ளமும் தந்திடுவாய் அம்மணி
செல்வத்தை சேர்த்து தர்ம சிந்தனையற்று
அகந்தையுடன் அகிலமெங்கும் திரிந்து
வீணே மடியும் மாந்தர்களின்
கூட்டுறவை யான் வேண்டேன்
தன்னிடம் இருப்பதை பகிர்ந்துண்டு
உன் திருவடிகளில் அன்பு செலுத்தி
உன் புகழை பாடி மகிழ்ச்சியுடன்
வலம் வரும் அடியார்களின்
கூட்டுறவையே வேண்டுகிறேன்.
வணங்குவோர் வாழ்வில்
வளம் சேர்க்கும் வள்ளியே
குமரனின் மனத்தைக்
கொள்ளைகொண்ட கள்ளியே
எங்கள் வாழ்வு இனிதாகப் போகும்
எப்போதும் உந்தன் திருவடியை எண்ணியே
அன்போடும் அருளோடும் அனைவருடனும்
அனுசரித்து வாழ்வோம் உன்னிடம்
பக்தி பண்ணியே
நான் பாமரனாய் இருந்தால் என்ன?
மெத்த படித்தவனாய் இருந்தால் என்ன?
பசித்தோருக்கு பசியாற்றும் மனமும்
துன்புற்றோர்க்கு உதவிக் கரம் நீட்டும்
உள்ளமும் தந்திடுவாய் அம்மணி
செல்வத்தை சேர்த்து தர்ம சிந்தனையற்று
அகந்தையுடன் அகிலமெங்கும் திரிந்து
வீணே மடியும் மாந்தர்களின்
கூட்டுறவை யான் வேண்டேன்
தன்னிடம் இருப்பதை பகிர்ந்துண்டு
உன் திருவடிகளில் அன்பு செலுத்தி
உன் புகழை பாடி மகிழ்ச்சியுடன்
வலம் வரும் அடியார்களின்
கூட்டுறவையே வேண்டுகிறேன்.
// தன்னிடம் இருப்பதை பகிர்ந்துண்டு //
ReplyDeleteஅருமை ஐயா...
வள்ளிக்கென்று தனிக் கோவில் இருக்கிறதா ஸார்? முருகனைக் கொண்டாடுவோம். வள்ளி, தெய்வானையை யாரும் கொண்டாடியதாக நான் அறிந்திருக்கவில்லை.
ReplyDeleteகீழ்கண்ட இணைப்பில் வள்ளியைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
Delete. http://us5.campaign-archive2.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=5510360786