மலையப்பா! மலையப்பா! மனம் கனிவாய்
மலைமேல் சிலையாய்
நிற்கும் மாலவனே
என் மனதில் நிலையாய்
நின்றருளும் நாள் எந்நாளோ?
என் இதயம் உலைபோல் கொதிக்குதப்பா
மலையப்பா உந்தன் தரிசனம்
காணாது
கோக்களை காக்க கோகுலத்தில்
அவதரித்தவா என் போன்ற
மாக்களைக் காக்கவே
கோவிந்தனாய் வந்தவா
கேளாமல் எதை எதையோ
அள்ளித் தருகின்றாய்.
கேட்பதை மட்டும்
நீ தர மறுப்பதேனோ?
நீ தந்தாலும் தர மறுத்தாலும்
நான் என்றும் மறவாது இருப்பது
உன் திருவடிகளைத்தான்
என்பதை நீ மறவாதே.
மலைமேல் சிலையாய்
நிற்கும் மாலவனே
என் மனதில் நிலையாய்
நின்றருளும் நாள் எந்நாளோ?
ஓவியம் :தி ரா.பட்டாபிராமன்
என் இதயம் உலைபோல் கொதிக்குதப்பா
மலையப்பா உந்தன் தரிசனம்
காணாது
கோக்களை காக்க கோகுலத்தில்
அவதரித்தவா என் போன்ற
மாக்களைக் காக்கவே
கோவிந்தனாய் வந்தவா
கேளாமல் எதை எதையோ
அள்ளித் தருகின்றாய்.
கேட்பதை மட்டும்
நீ தர மறுப்பதேனோ?
நீ தந்தாலும் தர மறுத்தாலும்
நான் என்றும் மறவாது இருப்பது
உன் திருவடிகளைத்தான்
என்பதை நீ மறவாதே.
படமும் அழகு.
ReplyDeleteபாடல் அருமை ஐயா...
ReplyDeleteபடம் அற்புதம்...!