Sunday, March 9, 2014

அஞ்செழுத்து

அஞ்செழுத்து 

அஞ்செழுத்தை அனுதினமும்
அல்லும் பகலும் மறவாது
ஓதுபவருக்கு பிரம்மன்
எழுதிய தலையெழுத்தைப்
பற்றி எதற்கு கவலை?






















ஆதி சிவனின்
அம்சமாய்த் தோன்றிய
அனுமனை வணங்குபவருக்கு
வாழ்வில் வெற்றியைத்
தவிர வேறென்ன கிடைக்கும்?
















ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும்
அன்னை கருமாரியின்
திருவடிகளை எந்நேரமும்
நினைப்பவர்க்கு ஐம்பூதங்களால்
ஆபத்துக்கள் உண்டோ?






சிவ சிவ என்கிலர் தீவினையாளர் 
சிவ சிவ என்றிட தீவினை மாளும் 
சிவ சிவ என்றிட தேவருமாவார் 
சிவ சிவ என்ன?
சிவ கதிதானே

ஆமாம் உண்மைதான் 

ஓம் நமசிவாய 

5 comments:

  1. நமச்சிவாய வாழ்க... நாதன் தோள் வாழ்க...

    முதல் ஓவியம் உங்கள் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. 'தாள் வாழ்க' என்று அடிக்க தோள் வாழ்க என்று டைப்பி விட்டேன்! :)))

    ReplyDelete
    Replies
    1. திருவாலங்காட்டு ஆடல்வல்லானின் ஓவியமும்
      அவன் அம்சமான நங்கநல்லூர் அனுமனின் மெடல் பாயில் வடிவமும் இவன் கைவண்ணம்தான்.

      தோள் கண்டார் தோளே கண்டார்..அதனால் தவறில்லை.

      Delete
  3. அப்பாடா...! எனக்கு ஒரு கவலை இப்போது தீர்ந்தது...

    உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இவன் கவலையில்லாதவன்
      வலையில் DD போன்றவர்களுடன்
      எப்போதும் வலம் வருவதால்

      Delete