Monday, March 24, 2014

நரகமும் சொர்க்கமும் எங்கே உள்ளது ?



நரகமும் சொர்க்கமும் எங்கே உள்ளது ?

சில மதங்கள் சொல்லுகின்றன,புண்ணியம் செய்தால்
சொர்க்கத்திற்குப் போவாய் என்றும் பாவங்கள் செய்தால்
நரகத்திற்குப் போவாய் என்று.



சில மதங்கள் சொல்லுகின்றன ,நீ யாக யக்ஞங்கள் செய்தால் சொர்க்கத்திற்குப்போகலாம் என்று

சில புராணங்கள் ஒரு பட்டியலே வைத்திருக்கின்றன
என்னென்ன புண்ணியங்கள் செய்தால் என்னென்ன சுகங்கள் கிடைக்கும் என்றும், என்னென்ன பாவங்கள் செய்தால் என்னென்ன துன்பங்கள் நிறைந்த நரகங்கள் கிடைக்கும் என்று.



ஆனால் புண்ணியங்கள் தீர்ந்துவிட்டாலும், நரகத்தில் துன்பங்களை அனுபவித்து தீர்த்துவிட்டாலும் மீண்டும் இந்த உலகில்தான் பிறக்க வேண்டும் என்றும் மீண்டும் பிறவாமல் இருக்கும் வழியை தேடவேண்டும் என்றும் ஞானிகள் காலம்  காலமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

நமக்கு வழி காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எப்படி இருந்தாலும்  அழியும்
இந்த உடலின் துணை கொண்டுதான்
அழியாப் பதத்தை பெறவேண்டும்.

நரகத்திற்கும், சொர்கத்திற்கும்
செல்லும் ஒரே வாயில் நம்முடைய வாய்தான்

அதிலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது
நம்முடைய நாவு என்னும் நாக்குதான்.

அந்த நாக்கை நாம் நல்ல வழியில் பயன்படுத்தவில்லை எனில்
அது நம்மை காவு வாங்கி விடும். என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அதே நாக்குதான் நல்லவற்றைப்  பேசினால் நன்மையையும், தீயவற்றை பேசினால் தீமையையும் வரவழைக்கிறது

பேசாமல் மவுனமாக இருந்தாலோ பெரும் சக்தியை நமக்கு சேர்த்துக் கொடுக்கிறது.

பசிக்காக உண்ணாமல் நாவு கேட்கிறதே என்று கண்டதையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தால் நாம் ஆகிவிடுவோம் ரோகி




ஆனால் அதே நாவை நாம் ராம நாமம் சொல்லப் பழக்கிவிட்டால் நாம் ஆகிவிடுவோம்  யோகி.





மிக எளிதான ராம நாம் ஜபத்தை கைக்கொள்ளுவோம்
மரணமில்லா வாழ்வு பெறுவோம்.




6 comments:

  1. யாகாவாராயினும்....

    ReplyDelete
    Replies
    1. நா காக்க
      இல்லாவிடில் எல்லோரும் பாடி எப்போது எடுப்பார்கள் என்று கேட்க தொடங்கிவிடுவார்கள்

      Delete
  2. உலகத்திலே பயங்கரமான ஆயுதம்...

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா சொன்னார்கள்.
      ஆறு அங்குலமே உள்ள நாக்கு
      ஆறடி உயரம் உள்ள மனிதனைக்
      கொன்றுவிடுமென்று !

      Delete
  3. நாவை நாம் ராம நாமம் சொல்லப் பழக்கிவிட்டால்
    நாம் ஆகிவிடுவோம் யோகி.

    ராம நாமத்தின் அற்புதம்..!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ராம நாமத்தின் அற்புத ஆற்றல்

      Delete