ஆசைதான் பிறவிக்கு காரணம்
Metal foil art-T.R.Patabiraman
ஆசைதான் பிறவிக்கு காரணம்
ஆசைகள் முழுவதும்
நீங்கிவிட்டால் மறுபிறவி இல்லை
ஒவ்வொரு உயிரும் நிறைவேறாத
ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்காக
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன
ஒவ்வொரு பிறவியிலும்
புதியதாக ஆசைகளை பற்றிகொள்கின்றன
ஆசைகளை நிறைவேற தடைகள் உண்டாகும்போது
கோபம் உண்டாகி பாவ செயல்களில் ஈடுபட்டு
தொடர்ந்து துன்பத்தில் மாட்டிகொண்டு தவிக்கின்றன
முடிவே இல்லாத இந்த சுழலில்
இருந்து தப்புவதற்கு வழி
இறைவனை சரணடைதலே ஆகும்.
ஆனால் அதற்கு மனம்
ஒத்துழைக்க வேண்டும்.
உடல் ஒத்துழைக்கவேண்டும்
மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
ஆசைகள் படிப்படியாக குறைந்து
மனம் அமைதியடையும்போது
மனம் ஆன்மாவை நோக்கி திரும்பும்.
ஆன்மாவை அறிந்துகொண்டால்
இந்த பிறப்பு இறப்பு வளையத்திலிருந்து
விடுபடும் வழி புலனாகும்
மிக சுலபமான வழி இவ்வுலக
காரியங்களை செய்துகொண்டே
பிறருக்கு கேடு நினைக்காமல்
துன்பம் விளைவிக்காமல்
ராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தால் போதும்.
நிச்சயம் வழி பிறக்கும்.
விடுபடும் வழி சிறப்பான வழி...!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
முயற்சி செய்வோம்
Deleteமுழுமை அடைய
இவ்வுலகில் வாழும்
காலம்வரை
மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
ReplyDeleteஆசைகள் படிப்படியாக குறைந்து
மனம் அமைதியடைந்து
ஆன்மாவை நோக்கி திரும்பும்!..
- வேத சாரம். சிந்தையில் கொள்ள வேண்டிய வரிகள்.
அகந்தை கொண்டு
Deleteபிறரை நிந்தை செய்வதை
நிறுத்திக்கொண்டால்போதும்
எந்தை இராமனின் திருவடியில்
சிந்தை நிலையாய் நின்றுவிடும்.
வருகைக்கு நன்றி
மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
ReplyDeleteஆசைகள் படிப்படியாக குறைந்து
மனம் அமைதியடையும்போது
மனம் ஆன்மாவை நோக்கி திரும்பும்.//
நல்ல கருத்து ஐயா! நன்றி!
நன்றிess
Deleteஆசையே துன்பத்திற்குக் காரணம்
ReplyDeleteநன்றி ஐயா