Thursday, March 27, 2014

நம்பிக்கை கொள்ளுங்கள். நாராயணனின் திருவடிகளில்.

நம்பிக்கை கொள்ளுங்கள். நாராயணனின் திருவடிகளில்.



ஓவியம்;தி.ரா.பட்டாபிராமன் 

விலங்குகளுக்கும் 
மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு?


மனிதர்களால் மட்டும்தான் தன்னை படைத்த இறைவனை அறிந்துகொண்டு
இந்த கொடிய பிறப்பு இறப்பு துன்பத்திலிருந்து விடுபடமுடியும்

இந்த வரம் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் கூட கிடையாது

ஆனால் என்ன நடக்கிறது ?

தேவர்கள் தெய்வங்கள்,மனிதனை விட அதிக சக்தி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அவர்களை படைத்தது தங்களுக்கு சக்தியளித்த பரம்பொருளை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை

தேவர்கள் போகத்தில் மூழ்கி அவர்கள் பிறப்பை வீணடிக்கின்றனர்

தெய்வங்களும் விருப்பு வெறுப்புக்கு ஆளாகி அங்கும் இங்கும் அலைகின்றன

கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருசிலர் மட்டும் இறைவனை தேடி
ஆன்ம விழிப்பு பெற்று முக்தியடைகின்றனர் 

மற்றவர்கள் எல்லாம் விலங்குகளைப்போல் இரை தேடுவதும், வேறு ஏதாவதொன்றிர்க்கு இரையாவதும் காம இச்சை கொண்டு போகத்தில் மூழ்குவதுமாக வாழ்நாளை வீணே போக்கி மடிந்து போகின்றனர்

தேவர்களும்,தெய்வங்களும் தங்கள் நிலையாமையை உணரும்போதுதான்
இப்பூவுலகிர்க்கு வந்து இறைவனை வழிபாட்டு ஞானம் பெறுகின்றனர்
ஒவ்வொரு புராணங்களும் இதைதான் விவரிக்கின்றன

ஆனால் நாம் எதையும் அதில் உள்ள உண்மையான தத்துவங்களை புரிந்து கொள்ளாமல் கிளிபிள்ளைபோல் படிப்பதும்,ஒதுவதுமாக காலத்தை கழித்து கொண்டிருக்கின்றோம்

காலம் சென்றால் மீண்டும் வராது

காலன் வந்து நம் உயிரை நம்மிடமிருந்து எடுப்பதற்குள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இறைவனை அறிந்து கொள்ள தீவிர முயற்சி செய்ய வேண்டும்

அதற்க்கு எளிய வழி அவனை நினைத்துக்கொண்டே இருப்பதுதான்.

இந்த அண்டத்தை படைத்து காக்கின்ற அவன் அதில் ஒரு அணுவாக இருக்கும் நம்மை காப்பாற்றமலா விடுவான்.

நம்பிக்கை கொள்ளுங்கள். நாராயணனின் திருவடிகளில்.
அனைத்தும் நன்றாக நடக்கும்

6 comments:

  1. "நாராயணா என்னும் பாராயணம்... நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்...தேவாம்ருதம்.."

    அசுர கணங்களுக்கு தவறு செய்வதைத் தவிர வேறு ஒன்றும் வராதாம்... தேவர்களுக்கோ தவறே செய்ய வராதாம்... மனிதர்களுக்குத்தான் அந்த சுதந்திரம் இருக்கிறதாம்! எங்கேயோ சமீபத்தில் படித்தேன்! :))))

    படம் உங்கள் கைவண்ணம் என்று தெரிகிறது. நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அசுரர்களும் தேவர்களும் மனிதர்களின் மனங்களில் தான் குடியிருக்கிரார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அதே போல்தான் விலங்குகளும் .
      ஆனால் எல்லாவற்றின் உள்ளும் தெய்வம் குடியிருக்கும் .அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் எந்த சலனமும் இல்லாது

      Delete
  2. உங்களின் கைவண்ணத்தில் மெய்மறந்து விட்டேன் ஐயா...

    ReplyDelete

  3. //இந்த அண்டத்தை படைத்து காக்கின்ற அவன் அதில் ஒரு அணுவாக இருக்கும் நம்மை காப்பாற்றமலா விடுவான்.
    அருமையான பதிவு! உங்கள் கைவண்ணம் அருமை! நன்றி ஐயா!

    ReplyDelete