Friday, March 28, 2014

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் 



ஞானத்தின் பலன் (1)

ஞானம் பிறக்கும்போது
அன்பு மலருகிறது

உண்மை ஞானம் பிரபஞ்ச
அன்பிலிருந்து பிரிக்கமுடியாது

அன்பை  செயலில்
வெளிப்படுத்துவது தொண்டு ஆகும்

அன்பும் தொண்டும்
பிரிக்கமுடியாதவை

அன்பு அஹிம்சையின் வெளிப்பாடு
அன்பின்  பயனாகத் தொண்டு திகழ்கிறது

துன்பப்படும் மனிதர்களுக்கு
தொண்டு செய்வதே
அனைத்து மதங்களின்
அடிப்படைக் கொள்கையாக அமைந்திருக்கிறது

மனித குலத்திற்குத் தொண்டு செய்வதை விட
சிறந்த குணம் வேறில்லை

மனித குலத்திற்கு நலம் சேர்ப்பவன் ,
மனிதருள் சிறந்த மனிதன் ஏழையிடத்திலும் ,
ஆடைக்கு வழியின்றி அவதிப்படுபவனிடத்திலும்
அடக்குமுறைக்கு உள்ளாகி துன்பப்படுபவனிடத்திலும்
நோயால் வேதனைப்படுபவனிடத்திலும் ,
ஆதரவற்றவனிடத்திலும்
கதியற்றவனிடத்திலும் 
கடவுளைக் கண்டு வழிபட
முதலில் கற்றுக்கொள்.

உண்மையான ஆன்மீக வாழ்க்கையின்
அடையாளம் ஏழைக்குத் தொண்டு செய்வதுதான்

இன்னும் வரும் 

2 comments:

  1. // ஏழைக்குத் தொண்டு செய்வதுதான் // இதைப் பற்றி ஒரு பகிர்வு எழுத வேண்டும் என்று எண்ணி உள்ளேன் ஐயா... ம்...

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்களை
    நாம் விதைத்துக் கொண்டே இருப்போம்

    அறுவடை செய்து கொள்பவர்கள் .
    செய்து கொள்ளட்டும்.

    நல்ல கருத்துக்களை
    நாம் விதைத்துக் கொண்டே இருப்போம்

    அறுவடை செய்து கொள்பவர்கள் .
    செய்து கொள்ளட்டும்.

    எழுதுவதை விட உங்களால் முடிந்த தொண்டை
    விளம்பரமில்லாமல் நீங்கள் இருக்கும் இடத்திலேயே தொடங்குங்கள்.

    அது உங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரும்.

    ReplyDelete