உயிர் வளர்த்தேனே! (பகுதி-1)
உடம்பு நம் உயிர் சில காலம்
இந்த உலகில் தங்கும் ஒரு வீடு
இந்த வீட்டை
நாம் கட்டுவது கிடையாது.
இது இறைவனால் கட்டப்பட்டு
நமக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது
மேலும் அதை பராமரிக்கும்
வேலையும் நமக்கு கிடையாது.
உடலின் பெரும்பாலான பகுதிகளை
அதில் செயல்படும் இயக்க சக்திகளே
பராமரித்துகொள்ளுகின்றன
இது உறுதியான எலும்புகளால்,
அதே நேரத்தில் தேய்மானங்களை அதுவே
புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும்,
நரம்புகளினால் நன்கு இழுத்து கட்டப்பட்டு
அதே நேரத்தில் எப்படி வேண்டுமானாலும்
நாம் இஷ்டப்படி பயன்படுத்தும் வகையிலும்,
அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் முழுவதும் சக்தியை பாய்ச்சியும்,
கழிவுகளை அகற்றியும், பாதுகாப்பும் அளிக்கும்
இரத்தக் குழாய்களும் உடலின் ஒவ்வொரு
அணுக்களிலும் பாயும் வகையில்
அமைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதம்.
எல்லாவற்றிற்கும் மேலாக
ஏராளமான தானியங்கி கருவிகள்
பொருத்தப்பட்டு,
தசைகள், சதைகள் மற்றும்
தோலால் மூடப்பட்டு அழகின் வடிவமாக
காட்சி தரும் சொல்லவொண்ணா அற்புதம்
இறைவன் கொடுத்த இந்த உடல்
இந்த உடலில் நமக்கு தெரிந்து
ஒன்பது பிரதான வாயில்கள் உள்ளன.
அவைகளுக்கு காவலாளிகள் கூட கிடையாது
எல்லாம் தானியங்கி கதவுகள்.
தேவைப்படும்போது திறக்கும்.
வேலை முடிந்ததும் தானே மூடிக்கொள்ளும்
வகையில் இறைவனால் வடிவமைக்கப்பட்ட
ஒரு அற்புதம்.
இந்த உடலில் உள்ள கருவிகளில் ஏற்ப்படும்
தேய்மானங்களை அதுவே சரி செய்து கொள்ளும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உடலில் சக்தி தேவைப்படும்போது
நமக்கு உணர்த்தும் கருவிகள்
அமைக்கப்பட்டுள்ளதால்
அப்போது நாம் உணவை எடுத்து
வாயில் போட்டால் போதும்
மற்றவற்றையெல்லாம்
நம் வயிறு பார்த்துக்கொள்ளும்.
அதை ஜீரணித்து சத்துக்களை
எடுத்து சென்று உடலின் அனைத்து
பகுதிகளுக்கும் கொண்டு அளித்துவிடும்
மட்டுமல்லாது தேவையற்ற கழிவுகளை
எடுத்து சென்று அதுவே அதற்கென்று
உள்ள கருவிகள் மூலம் வெளியேற்றிவிடும்.
நம் உடலில் உள்ள இதயமும்
தான் கரு உருவானதிலிருந்து
இந்த உடலில் உயிர் நீங்கும் வரை
மயக்க நிலையிலும் கூட இடைவிடாமல்
இயங்கி உடல் முழுவதும் குருதியாய்
பல்லாயிரம் கிலோமீட்டர் பாய்ந்து
ஓடி இந்த உடலை உறுதியுடன் வைக்கின்றது.
மூளையிலிருந்து நரம்புகள் கோடிக்கணக்கில்
உடல் முழுவதும் பரவி மின் சக்தி மூலம்
இந்த உடலை பாதுகாக்கின்றது.
இன்னும் இந்த உடலில்
அதிசயங்கள் எத்தனையோ?
யாரறிவார்?
அந்த இறைவனே அறிவான்.
இப்படிப்பட்ட ஒரு விலை மதிக்கமுடியாத
பொக்கிஷத்தை நமக்கு இலவசமாக அளித்து
நாம் மகிழ்ச்சியாக வாழ வழி வகை செய்த
இறைவனை எவ்வளவு முறை
போற்றிதுதித்தாலும்
நன்றியுடன் நினைத்தாலும்
அதற்க்கு எதுவும் ஈடு ஆகாது.
ஆனால் நாம் அவ்வாறு
நடந்து கொள்கிறோமோ
என்பதுதான் கேள்விக்குறி
(இன்னும் வரும்) .
pic. courtesy-google images.
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
ReplyDeleteவிஷயங்கள் அடங்கிய பதிவின்
துவக்கமே மிக மிக அருமை
ஆவலுடன் தொடர்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்
Deleteவழக்கம்போல் அதில் ஆன்மிகம்
கலந்து கொடுக்கலாம் என்று ஒரு முயற்சி
இவன் முயற்சி
வெற்றிபெற வாழ்த்துங்கள்.
தங்களின் பதிவு வந்திருகிறது என்பதை பார்த்தாலே ஒரு படபடப்பு வருகிறது..(அதாவது விடுப்பில் இருக்கும் போது அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தால்...என்ன ஓலையோ..என்ற தவிப்போடு பிரித்தால் loan sanction..increment..அப்பாடா என இருப்பதுபோல்)நேற்று மாலைதான் நினைத்து பார்த்தேன்...தலைவலி,சிறிய காயம்..மருந்து போடாமலேயே சரியாகிறதே,உடலுக்குள் என்ன workshop இருக்கிறது...இன்று அதை பற்றிய பதிவுகள்...டெலிபதியா...அன்புடன்...நமஸ்காரம்.
ReplyDeleteடெலிபதிஎல்லாம்
Deleteஎன்று ஒன்றுமில்லை
இவன் கடைபிடிக்கும்
ராமா பதிதான்
இவன் சீதாபதியின்சேவகன்
உமாபதியின் பக்தன்
சுரபூபதியை வணங்குபவன்
படபடப்பு இல்லாமல்
வாழ்வை நடத்த
முயற்சி செய்யும் போராளி.
அவ்வளவுதான்
பொக்கிஷம் என்று அறிந்து கொள்வதே பெரிய விசயமாகி விட்டது இன்றைக்கு...!
ReplyDeleteஅருமையான விளக்கத்தை தொடர வாழ்த்துக்கள்...
நன்றி ஐயா...
//எல்லாவற்றிற்கும் மேலாக ஏராளமான தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டு,
ReplyDeleteதசைகள், சதைகள் மற்றும் தோலால் மூடப்பட்டு அழகின் வடிவமாகக் காட்சி தரும் சொல்லவொண்ணா அற்புதம் இறைவன் கொடுத்த இந்த உடல்//
ஆம். இறைவன் நமக்களித்த் மிக அருமையான அற்புதமான சொத்து. அவனை என்றும் போற்றி நன்றியுடன் நடந்து கொள்ளத்தான் வேண்டும், நாம். ப்கிர்வுக்கு நன்றிகள்.
நாம் நன்றியுடன் நடக்கவில்லை என்பதை விளக்க முயற்சிக்கும் பதிவுதான். இனி வரும்
Delete