Sunday, July 14, 2013

பகவான் ரமணரின் சிந்தனைகள் (3) (1)

பகவான்  ரமணரின்  சிந்தனைகள்  (3) (1)


சுப்பு தாத்தா கமெண்ட்ஸ் 

on பகவான்  ரமணரின்  சிந்தனைகள்  (3) 

ஆனா நீங்களோ மத்தவங்க என்ன செய்யறாங்க 
அப்படின்னு பாத்துண்டு இருக்கீக...


இவன் பதில் 

நானும் அதைத்தான் 
செய்துகொண்டிருக்கிறேன்

நீங்களும் அதைத்தான் 
செய்துகொண்டிருக்கிறீர்கள்

இரண்டுபேரும் அதைத்தான் 
செய்துகொண்டிருக்கிறோம்

நீங்கள் சொல்வதுபோல்
நான்மற்றவர்கள் செய்வதை 
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

நான் என்ன செய்கிறேன் 
என்பதை நீங்கள்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் 

இல்லாவிடில்
பல கோடி பேர்கள் வாழும் இந்த உலகில் 
மற்றவர்கள் எல்லாம் அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது 
இந்த பதிவிற்கு நீங்கள் மட்டும் வந்து 
முதலில் வந்து கருத்து சொல்வீர்களா?

Both are sailing
in the same boat 

என்றாவது ஒருநாள் 
இருவரும் கரை சேருவோம்


அதெல்லாம் இருக்கட்டும் சாரே...

உண்மையிலே ...

நான் யார் அப்படிங்கரதுலே நான் அப்படிங்கறது யாரு ?

சுப்பு தாத்தா பல கேள்விகளை கேட்டுவிட்டார்.

அவர் இது போன்ற கேள்விகளை
கேட்டதற்கு காரணம் பதிவில் கூறப்பட்ட
 பல கருத்துக்கள் அவருடன் ஒத்துப்போவதாக
இருப்பதால்தான் அவர் கோபப்பட்டு
மேற்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்

அவர் கேள்வி.
அதெல்லாம் இருக்கட்டும் சாரே...
உண்மையிலே ...
நான் யார் அப்படிங்கரதுலே நான் அப்படிங்கறது
 யாரு ?

இவன் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு
உடன் மறுப்பு தெரிவிக்குமாறு சுப்பு தாத்தாவை
பதில் எழுத தீண்டியதே அந்த எண்ணம் தான் "நான்" என்பது

ஆனால் அந்த "நான்" தான்  என்ற
அகந்தையுடன் கூடியது.

இவன் யார் மற்றவர்களை பற்றி குறை கூற என்றும்,
நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ
என்று சொல்வதுபோல் எழுதவைத்ததும்
அந்த 'நான்" என்னும் அகந்தை கொண்ட எண்ணம்தான்.

ரமணர் சொல்லும் "நான் "இவன் எழுதியதை பார்த்தும்
மனதில் எந்த எண்ணமும் எழாமல்
அமைதியாக இருக்கும் "நான்" தான்
உண்மையான நான்.

அந்த நிலையை அடையும்வரை
மனதில் அமைதி இருக்காது

அமைதியற்ற  மனதினால்
எந்த சாதனைகளையும் 
தொடரமுடியாது.

அடுத்து அவர் கேட்கிறார்?

சாரி சார். 
நான் யார் ? அப்படிங்க விசாரத்தை 
நான் இன்னிக்கு செய்யணும். 
ஒரு பைவ் மினிட்ஸ் ஆவது அட் லிஸ்டு.
லேட் ஆயிடுத்து..


ஆத்ம விசாரம் என்பது தொடர்ந்து
நடைபெறவேண்டிய ஒன்று.

அவர் அடங்கா மனதை பிடித்து கூண்டில்
அடைப்பதுபோல் பைவ் மினிட்ஸ் அல்லது
சிக்ஸ் மினிட்ஸ் செய்வது எந்த பலனும் தராது.
அவ்வாறு அடக்கப்பட்ட மனம் நம்மை ஒருநாள்
ஏமாற்றிவிட்டு வெளியே ஓடிவிடும்.

அது நம்முடைய மற்ற வேலைகளுடன்
தொடர்ந்து செய்யப்படவேண்டிய ஒன்று .

நாளைக்கு வந்து நம்ம 
குஜாய்ச்சன்டையை தொடங்கலாம்.

சுப்பு தாத்தா அவர் மனதில் உள்ள எண்ணங்களோடு
போராடி அவைகளை வெற்றிகொண்டால் பயனுண்டு.

என்னிடம் போராடுவதால் பயன் ஒன்றும் இல்லை
என்பதை புரிந்துகொண்டால் நலம் .

9 comments:

  1. நாங்கள் நிறைய அறிந்து கொள்கிறோம்... நன்றிகள்...

    ReplyDelete
  2. பெரியோர்களாகிய உங்கள் இருவரின் அருமையான சொற்போரிலிருந்து, திரு DD அவர்கள் சொல்வது போல நாங்கள் பல விஷயங்களை அறிய முடிகிறது.

    அருமையான தங்கள் இருவரின் வாதம் + விவாதங்கள் தொடரட்டும்.

    ”ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்று சொல்வார்கள். ’நான்’ இங்கு எதிர்பார்ப்பது அதுவல்ல.

    சொல்லாற்றல் + எழுத்தாற்றல் நிறைந்தால் தான் பல்வேறு விஷயங்களை நாங்கள் அறிய முடியும். ஒரு முடிவுக்கும் வரமுடியும். தெளிவு பிறக்கும். ;)

    ReplyDelete
    Replies
    1. நான் பெரியவனும் அல்லன்
      நீங்கள் சிறியவருமல்லர்.

      இந்த உலகில் எல்லா கருத்துக்களுக்கும்
      எதிர் கருத்துக்கள் நிச்சயம் உண்டு.
      அதுபோல ஒன்றுதான் இதுவும்.

      இருவரும் தான் யார் என்று உணரும் வரையில்
      நமக்குள் இருக்கும் நான் எனும் அகந்தை
      இப்படித்தான் நடந்துகொண்டிருக்கும்.
      அது தவிர்க்கமுடியாதது.

      அதற்காக பயந்து நம் கருத்தை
      வெளியிடாமலும் இருக்க முடியாது.

      மனம் என்று ஒன்று இருக்கும்வரை
      எண்ணங்கள்
      தோன்றிக்கொண்டேதான் இருக்கும்

      தோன்றிய எண்ணங்கள்
      வெளிப்பட்டுக்கொண்டே இருக்கத்தான் செய்யும்.

      மனதில் இருக்கின்ற எண்ணங்கள் முழுவதையும் காலி செய்யும் வரையிலும், மனதில் புதிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்க செய்யும் வரையிலும் இந்த நிகழ்வு இடைவிடாமல் நடந்துகொண்டேதான் இருக்கும்

      நாம் தொடர்ந்து
      பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

      Delete
  3. சாரி சாரி
    சாரே.

    நீங்க மத்தவங்க என்ன செய்யறாங்க அப்படின்னு நான் சொன்னதை வச்சுண்டு, நீங்களும் அதே தானே செய்யறீங்க அப்படின்னு, பேச்சுக்கு பேச்சு , வீச்சுக்கு வீச்சு போதரிக.

    நான் இல்லைன்னு சொல்லலையே ...

    நான் நீங்க மட்டுமல்ல,

    எல்லோருமே மத்தவங்க சொல்றது, அல்லது என்ன சொல்வாங்க அப்படின்னு எதிர்பார்த்து நிக்கறது, இப்படி சொல்லனுமே அப்படின்னு ஆசைப்படறது, அப்படி சொல்லலேன்னா ஏமாற்றம் அடையறது, அந்த ஏமாற்றத்தின் பிறகு கோபம் அடையறது, கோபம் உச்சகட்டத்தை அடையும்போது புத்தி பிரமை ஏற்படறது,

    எல்லாமே ஒரு எதிர்பார்ப்பு ...

    இந்த எதிர்பார்ப்புகளுக்கு அடிப்படையே ஆசை, ஆவல்,
    இந்த ஆவலை, ஆசையை, எதிர்பார்ப்பை நம்மால், துறந்து இருக்கமுடியுமா

    இப்பவும் பாருங்க, நீங்க எழுதினதுக்கு நான் ஒரு கொக்கி போட, அதுக்கு நீங்க ஒரு பதில் கொக்கி போட, அதுக்கு நான் மறுப்பு அப்படின்னு சொல்லாதபடி, சொல்ல,

    கிட்டத்தட்ட ஒன்னுக்குமே பிரயோசனம் இல்லாத வாதம் இல்லையா இது ?

    இந்த வார்த்தைகள் ஜாலம் எல்லாமே ( கதை, கவிதை இன்க்லூடட் )
    எல்லாமே மாயை. இந்த மாயை பின்னாடி போயிட்டே நம்ம எல்லாமே பாயை சுரண்டிண்டு ஒரு பைத்தியக்காரன் போல இருக்கின்றோம்.

    இந்த மாயை லேந்து விலகனும் அப்படின்னா, ஒரு நிமிசமாவது
    வாயை கட்டிபோடணும். ( உங்க மட்டும் அல்ல, என்னோட வாயையும் )

    வாயை கட்டணும் அப்படின்னா எண்ணங்களை கட்டணும்.

    எண்ணங்கள் வராதபடி இருக்கமுடியுமா ??

    முடியும்/ முடியாது.

    ஏதாவதை ஒண்ணை டிக் அடிங்க.

    இரண்டும் முடியாதா...

    அப்ப சும்மா இருங்க..

    அட !!

    அதாங்க...
    அந்த ரமண மகரிஷி சொன்னாரு.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ரமணரின் கொள்கைக்காக
      நீங்களும் நானும் எதற்கு
      மோதிக் கொள்ளவேண்டும்?

      ரமணர் தொடர்பாக
      என் பார்வையில்
      பட்ட கருத்தை சொல்கிறேன்.
      அவ்வளவுதான்.

      நீங்கள் அவரை பற்றி
      புரிந்து கொண்டதை
      சொல்கிறீர்கள்.

      யார் கருத்து சரி என்பதை
      அந்த ரமணரே
      முடிவுக்கு விட்டுவிடுவோம்.

      Delete
    2. ரமணர் எதுவும் முடிவு சொல்வாரு அப்படின்னு எதிர்பார்காதீக.

      அவர் சொல்வதெல்லாம் ஒன்று தான்.

      சும்மா இரு.

      அது சரி.

      நீங்களும் நானும் சண்டை போடுவதாக நீங்கள் ஏன் நினைத்து கொள்கிறீகள் ?

      உங்களை ஒரு வாதத்தில் வெல்வது என் குறிக்கோள் அல்ல.

      உங்களையே வெல்வதுதான் என் இலக்கு. ஒரு அறிந்தவரின் அறிமுகம் பெறுவது பாக்கியம்.

      சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்.
      நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்.
      நிர்மோஹத்வே நிச்ஸ்சசல தத்வம்.
      நிச்சல தத்வே ஜீவன் முக்திஹி.

      சுப்பு தாத்தா
      www.pureaanmeekam.blogspot.com
      www.subbuthatha.blogspot.com

      Delete
    3. நாளைக்கு வந்து நம்ம
      குஜாய்ச்சன்டையை தொடங்கலாம்.என்று சண்டை என்ற வார்த்தையை பயன்படுத்தியது நீங்கள்தான் .

      குஜாய் சண்டை என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை?
      அதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

      நான் யாருடனும் பகைமை பாராட்டுவது கிடையாது என்மீது பகைமை பாராட்டுபவர்கள் மீதும் கூட

      அந்நிலையில் தங்களை போன்ற தெளிவாக சிந்திக்ககூடிய ஒரு நண்பரிடம் சண்டை போடுவேனா?

      எனக்கு அதற்கெல்லாம் நேரமே கிடையாது.

      நன்றி.

      Delete
  4. Comments after 7 years. I have stopped writing long back . anyhow thank you

    ReplyDelete