Monday, July 15, 2013

பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)(2)

பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)(2)



சுப்பு தத்தா சொல்கிறார். 
ரமணர் சொல்வதெல்லாம் ஒன்று தான்.

சும்மா இரு.


சும்மா இரு என்பதற்கு
பல அர்த்தங்கள் உண்டு

உயிருடன் இருக்கும்போதே
ஒன்று எதுவும் செய்யாமல் சும்மா
சவம்போல் கிடப்பது.
(அவ்வாறு இருந்தால் உங்களை பிணம்
என்று நினைத்து புதைத்து விடும் இந்த உலகம்)

அதனால்தான் சாமியார்கள் தங்கள்
உடலை பாதுகாக்க சீடர்களை பக்கத்தில்
வைத்துக் கொள்ளுகிறார்கள் போலும்.

இல்லாவிடில் இந்த உலகம்
ஆதி சங்கரரின் உடலை சுடலைக்கு
கொண்டு சென்றதுபோல் நடந்துவிடும்.

மற்றொன்று மனதில் எந்த
 எண்ணங்கள் தோன்றினாலும்
அதை செயல்படுத்தாமல்
அதை சாட்சியாக பார்ப்பதுடன்
நின்றுவிடுவது.

அவ்வாறு மனதில் தோன்றும்
ஒவ்வொரு எண்ணத்தையும்
கண்காணித்துக்கொண்டே வந்தால்
அவைகள் செயலிழந்துபோகும்.

தான் என்னும் அகந்தையை
முற்றிலுமாக ஒழித்துவிடுவது.

யாராவது நம் உணர்வுகளை
தூண்டினாலும்
நாம் அதற்காக நாம் ஆட்படாமல்
இருப்பது
(அது ரொம்ப கஷ்டம்-முடியாத காரியம் )

நான் சூடு சொரணை உள்ளவன்,

நான் உப்பு போட்டு சாப்பிடறவன் ,
எவனாவது எங்களை எதிர்த்து கை நீட்டி பேசினான்னா,
அவன் கையையே எடுத்த மான மிக்க குடும்பம்
என்று மார் தட்டுவது,

தனக்கு மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது
என்று எண்ணும் மனமுடையவ்ர்களுக்கு

எல்லாவற்றிற்கும்
பிறரின் புகழ்ச்சியை எதிர்பார்ப்பது

பிறர் இகழ்ந்தால் வருத்தப்படுவது
, பழி வாங்குவது,
தேவைக்கு மேல் ஆசைப்படுவது ,
பொறாமைப்படுவது, பயப்படுவது,
போன்ற மனதின் விளையாட்டுகளுக்கு
பலியாகும் மனிதர்களுக்கு
இவர் கொள்கை ஒத்துவராது.

இந்த ரமணர் கொள்கை
நடைமுறையில் கடைபிடிப்பது
மிகவும் கஷ்டம்தான்
(இருந்தாலும் கஷ்டங்களிலிருந்து
நிரந்தரமாக் விலக வேண்டுமானால்
சில கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
அதற்கு தயாராக இருப்பவர்கள் முயற்சி செய்யலாம்)

இந்த உடல் உயிர் உள்ளவரை
இயங்கி கொண்டுதான் இருக்கும்.

அதற்க்கு வேண்டிய சரக்குகளை மட்டும்
கொடுத்துக்கொண்டு (சில சாமியார்கள் சாப்பிடும்
கஞ்சா போன்ற போதை பொருட்கள் அல்ல)
அதை இயங்க வைத்துக்கொண்டு
எந்த உயிரின் மீதும் உடைமைகள் மீதும்
பற்றுக்கள் வைக்காமல் ,
கிடைத்ததை திருப்தியுடன்
பிறருடன் பகிர்ந்து கொண்டு ,
இறை சிந்தனையோடு
ரமணர் போல் போல்
அகந்தையின்றி
வாழ்க்கை நடத்தலாம்

வாழ்நாள் முழுவதும் மனம் சொல்லும்
இடத்திர்க்கெல்லாம் இந்த உடலை
விரட்டிகொண்டு அங்கும் இங்கும்
 கடவுளை தேடி
அலையும் வேலை மிச்சம்

ஏனென்றால் கடவுள் (கடம்- இந்த உடல் )
(உள்-உள்ளே இருக்கின்ற ஆத்ம வஸ்து)
நம்முள்ளேயே இருப்பது.

மனம் அழிந்தால் அந்த வஸ்து புலப்படும்.
(ஆனால் மனிதர்கள் அந்த வஸ்துவுக்கு
பயப்படுகிறார்களோ இல்லையோ
வாஸ்துவுக்கு பயந்து கட்டிய வீட்டை
இடித்து இடித்து கட்டுகிறார்கள்
அவர்கள் வாழும் இந்த உடல் ஒவ்வொரு
கணமும் அழிந்துகொண்டிருப்பதை கவனியாமல்.)

ஆனால் தற்காலத்தில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை மூலம் இந்த உடலின் தோற்றத்தையே மாற்றிகொள்கிறார்கள் என்பது வேறு விஷயம்)

 பற்றுக்களை விட்டாலும் பிற உயிர்கள் மீது
அன்பு செலுத்தலாம்,பகைமை பாராட்டாமல் இருக்கலாம்,
பலன் எதிர்பாராது தொண்டு செய்யலாம்,
 பிறருக்கு உதவலாம் )

7 comments:

  1. நல்ல விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. விளக்கங்கள் எல்லாம் மிக அருமை.

    //கடவுள் (கடம்- இந்த உடல் )
    (உள்-உள்ளே இருக்கின்ற ஆத்ம வஸ்து)
    நம்முள்ளேயே இருப்பது.//

    சூப்பர். ;)

    ReplyDelete
    Replies
    1. மனிதனாய் பிறந்தும் அந்த
      வஸ்துவை அறிந்துகொள்ள
      முயற்சிக்காதவன் விலங்கை விட
      இழிந்தவன்.

      ஏனென்றால் சிலந்திபூச்சியும்
      யானையும், பசுவும், கூட
      இறைவனை வணங்கி
      முக்தி பெற்றிருக்கின்றன.

      வாழ்நாள் முழுவதும்
      காம கேளிக்கைகளில்
      மூழ்கி கிடக்கும்மனிதர்களுக்கு
      இறைவனை பற்றி சிந்திக்க
      ஏது நேரம்?

      விழித்ததுமுதல்
      விழி மூடும் வரை
      காசு காசு காசுதான்

      அதனாலேதான் காசாலேசா
      என்றார்கள் மூடர்கள்
      அதன் உண்மை பொருள் புரியாமல்

      காசாலேசா என்பதன் பொருள்
      காசாலே சா
      பணம் பணம் என்று பிணமாகும் வரை
      அலைந்து திரி. என்று பொருள்



      Delete
  3. //”காசா லேசா என்பதன் பொருள்
    காசாலே சா[வு]
    பணம் பணம் என்று பிணமாகும் வரை
    அலைந்து திரி” என்று பொருள் //

    ஆஹா, அருமையாகச் சொல்லீட்டீங்க, அண்ணா ! ;)))))

    மிகவும் ரஸித்’தேன்’

    ReplyDelete
  4. ரமணரின் உபதேசங்கள் மனதை சுற்றியே வழங்கப்பட்டுள்ளன .ஆத்ம விசாரம் தன்னையே தான் உணர்தல் !இதுதான் அவரின் அடிப்படை உபதேசம்!நீ யார் என்ற கேள்விக்கு விடை தேடு ,அதிலேயே சகல ஞானமும் ஒளிந்திருக்கிறது .அடிப்படை சாதாரண மனிடர்களுக்கு விளங்காத ஆத்ம விசாரம் ,நுட்பமானது !சகலத்தையும் உள்ளடக்கி ,நிதர்சனமாய் பரவி நிற்பது !

    ReplyDelete
    Replies
    1. மனதின் துணை கொண்டுதான்
      மனதை கடக்கவேண்டும்

      அதற்க்கு மனதில் உள்ள
      எண்ணங்களை காலி செய்ய வேண்டும்.

      மீண்டும் எண்ணங்கள்
      நிரம்பாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

      கடந்தகால பதிவுகள்
      முற்றிலுமாகநீக்கப்படவேண்டும்.

      எதிர்பார்ப்பிலாமல் நிகழ்காலத்தில்
      வாழ மட்டும்
      மனதை பழக்கப்படுத்த வேண்டும்.

      ஆன்ம விசாரணை என்பது
      தொடர்ந்து நமக்குள்
      நடைபெற வேண்டிய ஒன்று.

      அதன் நன்மையை அவரவர்
      தனக்குள் அனுபவித்துதான்
      அறிந்துகொள்ளமுடியுமே அன்றி
      பிறர் விவரித்து
      அறிந்துகொள்ளமுடியாது.

      மனதை கடந்தவன் எதற்கும்
      பதட்டப்படமாட்டான்,பயப்படமாட்டான்
      எதற்கும் வருந்தமாட்டான்.

      மனதில் ஆசைகள் தானே
      குறைந்து கொண்டே
      வரும்.
      எல்லாவற்றின் மீதும் கொள்ளும் மோகம்
      படிப்படியாக குறைந்துகொண்டே வரும்

      மனம் எந்த சூழ்நிலையிலும்
      அமைதியாய் இருக்கும்.
      இதெல்லாம் நாம் ஆன்ம
      விசாரணையை தொடர்ந்து
      செய்து வந்தால் கிடைக்கும்
      நன்மைகளாகும்.

      Delete