தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (99)
சோபையுடன் கூடிய மனமென்னும்
பொற்ப்பீடத்தில் இராமச்சந்திர மூர்த்தியை
பிரதிஷ்டை செய்து கொண்டு சிறப்புற
சிவா ராம நாமங்களேன்னும் மலர்களால்
அர்ச்சனை செய்யும் நர ஜன்மமே ஜன்மமாகும்
கீர்த்தனை(219)-நாம குசுமுலசே பூ சிஞ்சே
ராகம்-ஸ்ரீராகன்- தாளம்-தேசாதி
நாதம் , ஸ்வரம் ,முதலிய நவரத்தினங்கள்
இழைக்கப்பெற்ற மேடையின் மீது
பல திருவிளையாடல்கள் புரியும்
பரமாத்மாவும் தியாகராஜன் உள்ளத்தை
அலங்கரிக்கும் தெய்வமுமாகிய ஸ்ரீராமனின்
திருவடிகளை எழுந்தருளச் செய்து பூஜை
செய்யும் ஜன்மமே ஜன்மமாகும்
அரிது அரிது மானிடராய் பிறத்தல்
அரிது என்றாள் அவ்வைப்பிராட்டி
விலங்காய் பிறவாது இறைவன்
மீது பக்தி கொண்ட மானிட பிறவி
கிடைப்பதற்கு பெரும் புண்ணியம்
செய்திருக்கவேண்டும்
அதிலும் பூசலாரடிகள் போல்
தன் உள்ளத்தில் சிவபெருமானுக்கு
ஆலயம் கட்டுவித்து அதற்க்கு கும்பாபிஷேகம்
செய்தமைக்கு புறவுலகில் பெருஞ்செலவில்
அரசன் கட்டுவித ஆலய கும்பாஷேகத்திர்க்கு
செல்லாமல் சிவபெருமான் சென்று அருள் செய்ததை
பக்தர்கள் இங்கு நினைவில் கொள்ளுதல் சாலப் பொருத்தமாகும்
எனவே பெரும்புண்ணியத்தினால்
கிடைத்த இப்பிறவியை விலங்குபோல
வாழ்ந்து வீணடிக்காமல்
ஸ்வாமிகள் கூறுவதுபோல் இராமபிரானை
உள்ளத்தில் பிரதிஷ்டை செய்து
அன்புடனும் பக்தியுடனும் ஆராதித்து
பெற்ற இப்பிறவியை பயனுள்ளதாக
ஆக்கிக்கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment