Friday, July 12, 2013

ஜகத் குரு

ஜகத் குரு









அட்சரம் லட்சம் பெரும்..அனைத்தும் சத்யம்..அந்த கருணாமூர்த்தியின் கடாக்ஷத்தை பெற்றுவிட்டால்....சாந்தி...சாந்தி...சாந்திதான்.ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர.
(.வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி )


சாத்திரங்கள் பல கற்றவர்களின்
சபையைக் கூட்டினான்
சன்மானம் அளித்தான் அதோடு
தன் சமரச நோக்கையும்
நிலைநாட்டினான்

கலாசாரத்தை தொன்று தொட்டு
காப்பாற்றி வரும் கலைகளையும்
கலைஞர்களையும்
ஆதரித்து வளர்த்தான்

ஆத்திரம் கொண்டோரின்
அறியாமையை நீக்கி
அவர்களை திருத்தி
அடிமைகொண்டான்
தன் அடியவனாக
விளம்பரமில்லாது

அற்புதங்கள் பல செய்தான்
பல ஆயிரம் பேர்களின்
வாழ்வு மேம்பட


அனைத்தும் நீயே
என்று அவன் பாதம்
பற்றினால்
அணைத்துக் காப்பான்

அகந்தை கொண்டோரை
அண்ட விடான்.
அகந்தையை விடுத்து
அவனை நாடும் வரை

வைராக்கியம் கொண்டு
குடும்ப பாரத்தைத்
துறந்தான்

மனமுவந்து வையகத்தில்
உள்ள அனைவரின்
மனச் சுமையை
ஏற்றுக்கொண்டான்

தீராத வினைகளை
தீர்த்து வைத்தான்
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் போல்

இனி   இவர்போல் யார்
அவதரிப்பார்   அவனியிலே
அறியாமையிலும்  மாயையிலும்
மூழ்கிவிட்ட மக்களை கரை சேர்க்க?


4 comments:

  1. ஒவ்வொரு வரியும் அருமை... உண்மை ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ”ஜகத்குரு” வுக்கு சரணம். சரணம். சரணம். சரணம்.

    படமும் பாடலும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா..

    ஜகத்குரு அழைக்கிறார் ...... வாங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:
    http://gopu1949.blogspot.in/2013/07/24.html

    ReplyDelete