தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (98)
இராமா !
நீ என்னை இன்னும் காப்பாற்றாமல்
இருப்பதிலிருந்தே நான் செய்த
பூஜையின் பலனை தெரிந்துகொண்டேன்
கீர்த்தனை (208)-தொலி நே ஜேஸின பூஜா பலமு –ராகம் -சுத்த பங்காள - தாளம் - ஆதி
என்னைக் காக்கும் தெய்வமே !
அனேக விதங்களில்
நான் மனமுருகி உன்னை தியானம் செய்தும்
நீ அப்படியும் (பாராமுகமாயும் )நான்
இப்படியும் (எளிய நிலைமையிலும் )
இருப்பதிலிருந்தே
நான் பூர்வ ஜன்மங்களில் செய்த
என் பூஜையின் பலன்களை
தெரிந்துகொண்டேன்
எனக்கு சமமாயிருப்பவர்களுக்கிடையே
என்னை இழிவு செய்து வயிறு
நிரப்புவதையே நோக்கமாக உடையவர்களை
என் அருகில் வைத்து ஹரிதாசர்களே
இல்லாத ஓர் ஊரில் என்னை இருத்தி
ஒரு புகலும் காட்டாமல்
நீ இருப்பதிலிருந்தே
நான் முன்பு செய்த
என் பூஜையின் பலனை
அறிந்துகொண்டேன்
ஒரு பக்தனுக்கு உலக மோகத்தில்
மூழ்கியுள்ள மனிதர்களுடன்
இருப்பதைக் காட்டிலும்
இறை நாட்டமுடைய
பக்தர் குழாத்துடன் இருப்பதுதான்
இன்பம் தரும்
அத்தகைய கூட்டுறவை
பக்தன் தேடி நாடி பெறவேண்டும்
அப்போதுதான்
ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்
இல்லாவிடில் அவனும்
உலக மோகத்தில் மூழ்கி
பக்தி நெறியிலிருந்து வழி தவறி
இதுவரை செய்த முயற்சிகள்
யாவும் வீணாகிவிடும்
All are very very True...Rama Rama
ReplyDeleteRama is also true
Delete