சீதையும் ஹனுமனும்
நமக்கு காட்டும் வழி . (பகுதி-1)
என்ன ஆச்சரியம் பாருங்கள் !
மனித வடிவிலான சீதை
(ஜீவன் )விலங்கு
வடிவிலான மாய மான்
மாரீசன் மீது
மோகம் கொண்டாள்
அதனால் சோகத்தில்
சிக்கிகொண்டாள்
நம்மோடு எப்போதும் நம் இதயத்தில்
இருக்கும் இறைவனை கண நேரம் மறந்து
ஆசை வயப்பட்டதால் இறைவனிடமிருந்து
ஞானேந்திரியங்கள் ஐந்தும் மற்றும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் சேர்ந்த
பத்து தலை ராவணனால் பிரிக்கப்பட்டு
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள்
இறைவனை பிரிந்த பிறகுதான்
மனம் உணருகிறது
அருகிலேயே இருந்து நம்மை காக்கும்
இறைவனை பிரிந்துவிட்டோமே என்று
ஏங்கி தவிக்கிறது
அவன் வந்து நம்மை காக்கமாட்டானோ
என்று மனம் உருகுகிறது
இறைவனைவிட்டு
நாம் பிரிந்திருப்பதாக நாம்
நினைத்தாலும் இறைவன்
நம்மை விட்டு
என்றும் அவன் பிரிவதில்லை .
ஏனென்றால் நாம் அவனில்
ஒரு பகுதியன்றோ !
ஆன்மாவின் தாபக் குரலை
இறைவன் கேட்கின்றான்
ஆன்மாவை காப்பாற்ற
குரு வடிவில் (ஹனுமானை )
தன்னை உணர்ந்த அடியவர்களை
ஜீவனிடம் அனுப்புகிறான்
குரு வருகிறார் .
ஆறுதல் கூறுகிறார்
கவலைபடாதே இறைவன்
வந்து உன்னை காப்பாற்றுவான்
உன்னை தன்னிடம்
அழைத்துக் கொள்வான் என்று
நம்பிக்கையூட்டி செல்கிறார்
(ஹனுமான் சீதையை
அசோக வனத்தில் கண்டு
அவள் சோகத்தை போக்குகிறான் .
நம்பிக்கை ஊட்டுகின்றான் )
இன்னும் வரும்
pic.courtesy -google images
நமக்கு காட்டும் வழி . (பகுதி-1)
என்ன ஆச்சரியம் பாருங்கள் !
மனித வடிவிலான சீதை
(ஜீவன் )விலங்கு
வடிவிலான மாய மான்
மாரீசன் மீது
மோகம் கொண்டாள்
அதனால் சோகத்தில்
சிக்கிகொண்டாள்
நம்மோடு எப்போதும் நம் இதயத்தில்
இருக்கும் இறைவனை கண நேரம் மறந்து
ஆசை வயப்பட்டதால் இறைவனிடமிருந்து
ஞானேந்திரியங்கள் ஐந்தும் மற்றும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் சேர்ந்த
பத்து தலை ராவணனால் பிரிக்கப்பட்டு
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள்
இறைவனை பிரிந்த பிறகுதான்
மனம் உணருகிறது
அருகிலேயே இருந்து நம்மை காக்கும்
இறைவனை பிரிந்துவிட்டோமே என்று
ஏங்கி தவிக்கிறது
அவன் வந்து நம்மை காக்கமாட்டானோ
என்று மனம் உருகுகிறது
இறைவனைவிட்டு
நாம் பிரிந்திருப்பதாக நாம்
நினைத்தாலும் இறைவன்
நம்மை விட்டு
என்றும் அவன் பிரிவதில்லை .
ஏனென்றால் நாம் அவனில்
ஒரு பகுதியன்றோ !
ஆன்மாவின் தாபக் குரலை
இறைவன் கேட்கின்றான்
ஆன்மாவை காப்பாற்ற
குரு வடிவில் (ஹனுமானை )
தன்னை உணர்ந்த அடியவர்களை
ஜீவனிடம் அனுப்புகிறான்
குரு வருகிறார் .
ஆறுதல் கூறுகிறார்
கவலைபடாதே இறைவன்
வந்து உன்னை காப்பாற்றுவான்
உன்னை தன்னிடம்
அழைத்துக் கொள்வான் என்று
நம்பிக்கையூட்டி செல்கிறார்
(ஹனுமான் சீதையை
அசோக வனத்தில் கண்டு
அவள் சோகத்தை போக்குகிறான் .
நம்பிக்கை ஊட்டுகின்றான் )
இன்னும் வரும்
pic.courtesy -google images
/// நம்மை விட்டு என்றும் அவன் பிரிவதில்லை ... ///
ReplyDeleteஉண்மை... நாம் புரிந்து கொள்வதும் இல்லை... உணர்வதும் இல்லை...
தொடர்கிறேன் ஐயா...
உணர்ந்து அனைவரும் உய்யவேண்டும்
Deleteஎன்பதே இவன் வேண்டுகோள்.
வாட்டம் தீரவேண்டுமென்று
அனைவரும் ஆசைபடுகிறார்கள்.
ஆனால் அவர்களின் நாட்டம்
ஆட்டம் பாட்டத்தில்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
ஆமாம் அய்யா..ஒரு விலங்கின் (மான்)மீது ஆசை பட்டு துயரத்தில் சிக்கிய சீதைமாதாவை,ஒரு விலங்கை (ஹனுமானை )கொண்டே ஆறுதல் அளித்த
ReplyDeleteஸ்ரீ ராமச்சந்திர பிரபுவை ஞாபகபடுத்திய தங்களுக்கு "நன்றி"என்ற ஒரு வார்த்தை போதாது...இன்னும் அதிகமாக சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.
நன்றி
Deleteஇந்த அற்பனை விடுங்கள்
என் அப்பனை தேடுங்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteக்ஷண நேர [மாயமான] சுகத்திற்காக எவ்வளவு கஷ்டங்கள் பாவம் அந்த ஸீதா தேவிக்கு. குரு ஸ்தானத்தில் ஹனுமன் வந்து ஆறுதல் சொல்வது, மனதுக்கு ஆறுதலாக உள்ளது. தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா
ReplyDeleteநன்றி VGK
Deleteசீதைக்கு மட்டும்தானா துன்பம்?
Deleteநம்மை போன்ற பேதலிக்கும் புத்தி
உடையவர்களும் படும் துன்பம் ஏட்டிலடங்கா
இருந்தும் நாம் எந்த பாடமும்
கற்றுக்கொள்வது கிடையாது.
மீண்டும் மீண்டும் பார்த்த
படங்களையே பார்த்துக்கொண்டு
வாழ்நாளை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்
நம் படத்தை ப்ரேம் போட்டு
சுவற்றில் மாட்டும் வரை.
Delete//மீண்டும் மீண்டும் பார்த்த படங்களையே பார்த்துக்கொண்டு வாழ்நாளை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்//
ஆஹா, அண்ணா. நான் அது போன்ற படங்களையெல்லாம் பார்ப்பதே கிடையாது. ஸ்ரீ ராம பட்டாபிஷேகப்படம் மட்டுமே ஃப்ரேம் செய்து வைத்துள்ளேன். பார்த்துப்பார்த்து ரஸிக்கிறேன்.
ஸ்ரீ பட்டாபிராமருக்கு மட்டுமே இது விஷயம் தெரியும்.
//நம் படத்தை ப்ரேம் போட்டு சுவற்றில் மாட்டும் வரை.//
;))))) Superb!
VGK
சுவற்றில் நம் படம் மாட்டப்படுவதர்க்குள்
Deleteவிழித்துக்கொண்டால் சரி.
ஆனால் மக்கள் படம் பார்த்துக்கொண்டே
உறங்கிவிடுகிரார்கள்
மீண்டும் விழித்தவுடன்
படம் பார்க்க
படம் பார்த்துக்கொண்டே தூக்கம்.
Deleteதூங்கி எழுவதே மீண்டும் படம் பார்க்க.
அடடா அப்படி என்னவொரு படமோ?
நீலமோ, பச்சையோ, கருப்போ, சிவப்போ !
மீண்டும் மீண்டும் பார்த்தால் அலுத்துப்போய் எரிச்சல் ஏற்படாதோ ?
சிவ சிவா !! ராம ராமா!! ஈஸ்வரோ ரக்ஷது ! ;)
கண் போனாலும் கூட
Deleteகண்ணுக்குள் லென்ஸ்
வைத்துக்கொண்டு படம் பார்க்க வந்துவிடுகிரார்களே!
இந்த மானிடர்கள்