Wednesday, July 24, 2013

நிம்மதியை பெரும் வழி

நிம்மதியை பெரும் வழி 

உள்ளத்திலே நிம்மதி வேண்டும் 
வாழ்வில் ஆனந்தம் வேண்டும் 


இந்த இரண்டும் 
இருந்துவிட்டால்  போதும் 
பிறகு வேறென்ன வேண்டும்? 

அது சரி இவை இரண்டும்
எங்கே கிடைக்கும் ?

சத்குருவின் பாதங்களில் 
மட்டுமே கிடைக்கும் 
உலகில் வேறெங்கும் கிடைக்காது 

அது நம்மை தேடி வருமா?

அது வராது .நாம்
நம் அகந்தையை விட்டுவிட்டு 
ஆசைகளை துச்சமென 
விலக்கிவிட்டு 
சத்குருவை நாடவேண்டும். 

நாடினால் அப்புறம்
நாம் எதற்கும் பயப்படவேண்டாம். 
இவ்வுலகமே சுவர்க்கம்தான். 

கீழ்கண்ட பாடல் 
அதை விளக்குகிறது.

கேட்டு பாடி மகிழுங்கள். 


நிம்மதி அடைந்தேன்
உலகை மறந்தேன்
ஆனந்தம் தான் அடைந்தேன்


ஸத்குரு பாதுகை குஞ்சலம்
என் மேல் பட்ட பொழுது தானே
நானே (நிம்மதி)

குருவின் மலரடியை என்றும் என்
கண்ணால் பார்த்து நின்றேன்
மற்றெல்லாம் மாயை
பொய்யென்னும் கனவில் 
கண்ட பொருள் போல் உணர்ந்தேன்
அதனால் (நிம்மதி)


மலையை  குடையாய்  தாங்கிய 
கோகுலம்  காத்த  கோவிந்தனை  நான் 
சரணமாய்  அடையவே  அவன்  
என்  பார்வையை  உட்புறம்  ஆக்கிவிட்டான்  
அதனால்  (நிம்மதி )


பிறப்பிறப்பாம்  பவமென்னும்  கடலில்  
ஜலம்முழுதும் வற்றிப்போச்சு 
அதை  தாண்டும் உபாயம் தேடும் 
கவலையும் என்னை  விட்டு   போச்சு 
அதனால் ( நிம்மதி ) 

பாடல் லிங்க். http://www.freemp3go.com/track.php?id=andzM1hMYmVaVjQ=

6 comments:

  1. தரவிறக்கம் செய்து கொள்கிறேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நிம்மதியைப்பெற அருமையான பாடலுடன் அழகான பதிவு.

    நிம்மதியாப்போச்சு.

    பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நிம்மதியை போகவிடக்கூடாது
      அதை நிரந்தரமாக நம்மிடம்
      தக்க வைத்துகொள்ள வேண்டும்
      அதற்க்கு தக்க உபாயத்தை
      நாடவேண்டும்.

      Delete
  3. அருமையான பாடல் அழகான விளக்கத்துடன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் பெற்ற இன்பம்
      பெறுக இவ்வையகம்
      வருகைக்கு நன்றி

      Delete