கண்ணா மணிவண்ணா !
கண்ணெதிரே நீ இருந்தும்
ஊனக் கண்ணால் காண இயலாது
தவித்தது பக்தர் குழாம்
அந்த தவிப்பை போக்கிடவே
ஆயர்பாடியில் கண்ணனாய்
வந்து அவதரித்தனையோ?
கள்ளமில்லா வெள்ளை உள்ளம்
கொண்டோரைதான் நான்
விரும்புவேன் என்று காட்டவே
வெண்ணிற வெண்ணையை
வேண்டும் மட்டும் உண்டு
களித்தனையோ?
உன்னை நினைத்தால் போதும்
ஐம்புலன் என்னும் நச்சுப்பாம்பு உன்
காலடியில் அடங்கி போன
காளியன் போல் உன்னை துதிக்கும்
மலைபோல் துன்பம் வரினும்
நான் பக்தர்களை காப்பேன் என்பதை
காட்டும் வகையில் குன்றை குடையாய்
ஏந்தி ஆயர்பாடி மக்களையும்
மற்ற உயிர்களையும் காத்தனையோ?
பக்தர்களை காப்பாற்ற தீயவர்கள் மீதும்
கருணை காட்டி அவர்களை
திருத்த முயற்சி செய்தாய்
திருந்தாத அவர்களை பாரதப் போரில்
பூண்டோடு ஒழித்தாய் .
அஞ்ஞானம் அகன்றிடவே யோகங்களை
வகுத்து கொடுத்தாய்.ஸ்லோகங்களாய்
தொகுத்து கொடுத்தாய் கீதையாய்
பொழிந்தாய் இந்த மானுடம் உய்வுற
அனைவரையும் அன்பால் உன்பால்
ஈர்த்துக்கொண்டாய்
அடியவர்களை உன் பால்
சேர்த்துக்கொண்டாய்
கொடியவர்களை
அடியோடு அழித்தாய்.
எண்ணுவார் மனதில் எல்லாம்
ஒளிவீசும் உன் அழகிய முகம் தோன்றும்
செவியில் உன் வேணுகானம்
இனிமையாய் கேட்கும் .
இகபர சுகமனைத்தும் இனிதே அமையும்
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம்
சொர்க்கமாகும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
கண்ணெதிரே நீ இருந்தும்
ஊனக் கண்ணால் காண இயலாது
தவித்தது பக்தர் குழாம்
அந்த தவிப்பை போக்கிடவே
ஆயர்பாடியில் கண்ணனாய்
வந்து அவதரித்தனையோ?
கள்ளமில்லா வெள்ளை உள்ளம்
கொண்டோரைதான் நான்
விரும்புவேன் என்று காட்டவே
வெண்ணிற வெண்ணையை
வேண்டும் மட்டும் உண்டு
களித்தனையோ?
உன்னை நினைத்தால் போதும்
ஐம்புலன் என்னும் நச்சுப்பாம்பு உன்
காலடியில் அடங்கி போன
காளியன் போல் உன்னை துதிக்கும்
மலைபோல் துன்பம் வரினும்
நான் பக்தர்களை காப்பேன் என்பதை
காட்டும் வகையில் குன்றை குடையாய்
ஏந்தி ஆயர்பாடி மக்களையும்
மற்ற உயிர்களையும் காத்தனையோ?
பக்தர்களை காப்பாற்ற தீயவர்கள் மீதும்
கருணை காட்டி அவர்களை
திருத்த முயற்சி செய்தாய்
திருந்தாத அவர்களை பாரதப் போரில்
பூண்டோடு ஒழித்தாய் .
அஞ்ஞானம் அகன்றிடவே யோகங்களை
வகுத்து கொடுத்தாய்.ஸ்லோகங்களாய்
தொகுத்து கொடுத்தாய் கீதையாய்
பொழிந்தாய் இந்த மானுடம் உய்வுற
அனைவரையும் அன்பால் உன்பால்
ஈர்த்துக்கொண்டாய்
அடியவர்களை உன் பால்
சேர்த்துக்கொண்டாய்
கொடியவர்களை
அடியோடு அழித்தாய்.
எண்ணுவார் மனதில் எல்லாம்
ஒளிவீசும் உன் அழகிய முகம் தோன்றும்
செவியில் உன் வேணுகானம்
இனிமையாய் கேட்கும் .
இகபர சுகமனைத்தும் இனிதே அமையும்
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம்
சொர்க்கமாகும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
ஓவியம் பிரமாதம்...
ReplyDeleteவரிகள் இனிமை அருமை ஐயா...
நன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி
Deleteadvance கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
HARE KRISHNA HARE KRISHNA
ReplyDeleteநன்றி
Deleteadvance கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
Sir, Namaskaram..how can I send you gnanapana about Sri Krishna and sung by P.Leela in Malayalam...
ReplyDeletesend as an attachment with your mail.
Deleteபாடலும் படமும் அழகோ அழகு, .கண்ணா மணிவண்ணா போலவே! பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி VGK
Deleteமுடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
ReplyDeleteமூடர்களை அறியவைக்கும் பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளை பேசவைக்கும் பிருந்தாவனம்
(ராமு சினிமா பாடல் ) பிருந்தாவன துக்கே
இத்தனை மகிமை...
கண்ணன் மகிமைக்கு...கேட்கவா வேண்டும்..
நன்றி
கண்ணனின் வடிவங்கள்தான்
Deleteஎத்தனை எத்தனை ?
அவன் மீது பாடப்பட்ட கீர்த்தனைகளும்,
பாடல்களும்தான் எத்தனை எத்தனை?
அவனுக்கென்றே சுகரின்
பாகவதம் தவிர்த்து எத்தனை
பாகவத புராணங்கள்?
அவனை பற்றிய கதைகள்
எத்தனை எத்தனை?
கணக்கிலடங்காது
அவன் புகழ் கூறும் திரைப்படங்களும்
,பாடல்களும்
கோதை ஆண்டாளும்
பக்த மீராவும் ஆழ்வார்களும்,
மற்றும் எண்ணற்ற கவிகளும்
அவன் மீது பக்தி கொண்டு
பாடி பரவியுள்ளனர்.
இன்றும் அவன் புகழ்
வளர்ந்துகொண்டே போகும்
என்றும் மங்காது.
மாயையில் மயங்கி
நாம் இருக்கும் வரை
அதை நீக்கும் மாயக்கண்ணன்
என்றும் நம்மோடு இருப்பான்
அவன் வடிவங்களை
கண்டு இன்புற்று
அவன் லீலைகளில் மயங்கி
மகிழ்ச்சியோடு
வாழ்ந்து கொண்டிருப்போம்.