Thursday, July 11, 2013

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (பகுதி-6)


உடம்பை வளர்த்தேன் 
உயிர் வளர்த்தேனே (பகுதி-6)


நம் உடலில் இன்னும்
ஏராளமான அதிசயங்கள் உள்ளன

அவைகளில் பல உடலில்
உள்ள சுரப்பிகளாகும்.

உடலில் உள்ள ஒவ்வொரு  சுரப்பிகளும்
இந்த உடலை நன்றாக சக்தியுடன்
இயங்கவைப்பதிலும் அதை பாதுகாப்பதிலும்,
அசுரத்தனமான வேலைகளை அனாயாசமாக அமைதியாக ,ஆர்பாட்டமில்லாமல். செய்து கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் அதன் செயல்பாடுகளில்
தலையிடாதவரை '

ஆனால் மனிதர்கள் அதன் இயக்கங்களில்
தலையிட்டு அவைகளை செயல்படாமல்
தொல்லை அளித்தால் அவைகள் உடலின்
இயக்கத்தை நிலைகுலைய வைத்தும்,
அபரிமிதமாக செயல்பட்டும்
பலவிதமான ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத்தி
மனிதர்களை நிலை குலைய வைப்பதுடன்
அவர்களை நிரந்தர நோயாளிகளாகி
அவர்களின் நிம்மதியையும்
மகிழ்ச்சியையும்
கேள்விக்குறியாக்கிவிடும்.

நம் உடலிலே உள்ள
மிக அளவில் பெரிய சுரப்பி
என்றால் அது ஈரல்தான் (liver)


The Liver


அதன் வேலை என்னவென்றால்
உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும்
தேவையான அனைத்து பொருட்களையும்
உற்பத்தி செய்வதும் அதை
அவைகளுக்கு அனுப்புவதும்தான் .

அது உடலின் இயக்கத்திற்காக
பலவிதமான திரவங்களை சுரப்பது
மட்டுமல்லாமல்  சுமார் 5000 விதமான
வேலைகளை செய்கிறது என்று
மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
பராமரிப்பதும்,
நோய் தாக்கும் கிருமிகள், வைரஸ்
போன்றவைகளை எதிர்த்து போராடி
அவைகளை அழித்து உடலை பாதுகாப்பதும்
உடலில் உள்ள தேவையான கழிவுகளை அகற்றுவதும்
உடலை திடமாக வைத்திருக்க உதவுவதும்.
உடலுக்கு தேவையான சக்தியை
சேமித்து வைப்பதும் போன்ற
பல முக்கியமான பணிகளாகும்.

அதனால்தான் அதற்கு லிவர் (வாழ வைப்பவர்)
என்று பெயர் வந்ததோ?

ஆனால் மனிதர்கள் இந்த முக்கியமான
உயிர் காக்கும் சுரப்பிக்கு செய்யும்
கொடுமைகள் ஏட்டிலடங்கா

இருந்தும் அது இறுதிவரை மனிதர்களின்
முட்டாள்தனத்தை எதிர்த்து போராடுகிறது.

அப்படியும் மனிதர்கள்
அது வெளியிடும் அபாய அறிவிப்புக்களை
கண்டுகொள்வதுமில்லை.
புரிந்துகொண்டு திருந்துவதுமில்லை.

காலம் கடந்தபின் மரணம்
நெருங்கும்போதுதான்.
உண்மை தெரிகிறது.

அப்போது என்ன செய்ய?

(இன்னும் வரும்) .

4 comments:

  1. வாழ வைப்பதை தான் தினம் தினம் சிறிது சிறிது கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்...

    அப்போது என்ன செய்ய...? தொடர்கிறேன் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  2. மிகவும் அருமையாகச் செல்கிறது, இந்தத்தொடர். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. My beloved wife passed away due to liver disease on 4th October 2019 inspite of my best all possible efforts.

    ReplyDelete