Monday, July 1, 2013

கண்ணன் என்னும் அன்பு தெய்வம்

கண்ணன் என்னும் 
அன்பு தெய்வம் 

ஆயிரம்  நாமம் கொண்டவனே
ஆருயிர்க்கெல்லாம்
ஆயர் குல சிறுவனாய் தோன்றி
அருள் செய்த வித்தகனே






பாற்கடலில்
அரிதுயில் கொண்டவனே
பாரிலுள்ளோர் தரிசித்து
மகிழ்ந்திடவே கோகுலத்தில்
கண்ணனாய் அவதரித்தவனே

வேதமோத அறியாரும் சாத்திரம்
பயில இயலாரும் கடைத்தேற
கீதை அளித்து வழிகாட்டிய
விமலனே

இன்னல் தரும் இழிபிறவிகளை
இவ்வுலகத்திலிருந்தே அழித்து
ஒழித்து இவ்வுலகஉயிர்களைக்
காத்த கருணை தெய்வமே

கீதையை படித்து உணர இயலா
மாந்தரும் கடைத்தேற உன்
நாமமே போதும் என்று உலகிற்கு
உரைத்திட்ட அன்பின் வடிவமே

என்றும் என் நாவில் நடமிடும்
உன் நாமம்
அழிந்தொழிந்து மறையும்
பிறவிதோறும் செய்த பாவம்






3 comments:

  1. //கீதையை படித்து உணர இயலா மாந்தரும் கடைத்தேற உன் நாமமே போதும் என்று உலகிற்கு உரைத்திட்ட அன்பின் வடிவமே//

    கேட்டதும் கொடுப்பவ்னே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா !!

    நல்ல பகிர்வு. நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமை... படமும் அழகு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete