இன்று ஆடி கிருத்திகை
முருகப்பெருமானுக்கு உகந்த நாள்
வாழ்வில் ஆடாத ஆட்டமெலாம் ஆடி
நாடியெல்லாம் தளர்ந்து போகுமுன்னே
நாடுவீர் மால்மருகன்
முருகப்பெருமானின்
திருவடிகளை
முருகனுக்குகந்த இந்நாளில் நம்
உள்ளத்தில் புகுந்துகொண்டு
நம்மையெல்லாம்
ஆட்டிவைக்கும்
காம குரோத பேய்களை
அவன் திருநாமத்தை
உட்கொண்டு
விரட்டியடிப்போமாக
துன்பமும் துயரங்களும் நம்மை
பற்றாதிருக்க முருகனின்
திருவடிகளை பற்றிக்கொண்டு
அனைவரும் உய்வோமாக
அற்ப பலன்களுக்காக
அழியும் மனிதர்களின் புகழ்
அனுதினமும் பாடி அலைந்து
திரிவதை விட்டுவிட்டு
அகிலாண்டகோடி ப்ரம்மாண்டநாயகனை
அரோஹரா !அரோஹரா!என்று
புகழ்ந்து திருப்புகழ் பாடி
இகபர சுகங்களை
அடைந்து மகிழ்வோமாக
வினைகள் நம்மை பற்றாது
கோள்கள் நம்மை சுற்றாது
இன்பம் நம்மை விட்டு அகலாது
மரணம் என்றும் நம்மை அணுகாது
மாயை நம்முன் நில்லாது
மனமே நீ என்றென்றும்
முருகனின் திருவடிகளை விட்டு
அகலாது நின்றால்
ஓம் சரவணபவ
முருகப்பெருமானுக்கு உகந்த நாள்
வாழ்வில் ஆடாத ஆட்டமெலாம் ஆடி
நாடுவீர் மால்மருகன்
முருகப்பெருமானின்
திருவடிகளை
முருகனுக்குகந்த இந்நாளில் நம்
உள்ளத்தில் புகுந்துகொண்டு
நம்மையெல்லாம்
ஆட்டிவைக்கும்
காம குரோத பேய்களை
அவன் திருநாமத்தை
உட்கொண்டு
விரட்டியடிப்போமாக
துன்பமும் துயரங்களும் நம்மை
பற்றாதிருக்க முருகனின்
திருவடிகளை பற்றிக்கொண்டு
அனைவரும் உய்வோமாக
அற்ப பலன்களுக்காக
அழியும் மனிதர்களின் புகழ்
அனுதினமும் பாடி அலைந்து
திரிவதை விட்டுவிட்டு
அகிலாண்டகோடி ப்ரம்மாண்டநாயகனை
அரோஹரா !அரோஹரா!என்று
புகழ்ந்து திருப்புகழ் பாடி
இகபர சுகங்களை
அடைந்து மகிழ்வோமாக
வினைகள் நம்மை பற்றாது
கோள்கள் நம்மை சுற்றாது
இன்பம் நம்மை விட்டு அகலாது
மரணம் என்றும் நம்மை அணுகாது
மாயை நம்முன் நில்லாது
மனமே நீ என்றென்றும்
முருகனின் திருவடிகளை விட்டு
அகலாது நின்றால்
ஓம் சரவணபவ
நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஓம் சரவணபவ
சச்சிதானந்த ஸ்வரூபன்
Deleteசரவணபவன் முருகன்
மலைமேலும் இருப்பான்
அடியார் மனங்களிலும் இருப்பான்
அவனை நினைத்து
உருகுவோர்க்கு
அனல்மேலிட்ட மெழுகாகி
அருள் செய்வான்
அவனை நினையாது அசட்டையாய்
இருப்போர்க்கு அகப்படான்.
அவன் நாமம் உரைக்கும் நாக்கு
இனிக்கும் அமிர்தம்
அதற்க்கு பயன்படா நாக்கு
எதற்கும் உதவா ஆலகால நஞ்சு
நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html
ReplyDeleteதாங்கள் வரைந்துள்ள படங்களில் வேலும் மயிலும் முருகனும் முருகனைப்போன்றே அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபகுதி-31 மட்டும் அண்ணாவின் வருகைக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறது.
நன்றி VGK
Deleteசில நாட்களாக
பதிவொன்றும் போடவில்லை
மனதில் ஏதோ
இனம் புரியாத பாரம்
ஆனால் முருகன் இன்று
என்னை அழைத்தான்.
உன் பாரத்தை சுமக்க நானிருக்கிறேன்
என்பதை மறந்துவிட்டாயா என்றான்
எனக்காக
ஒரு பதிவிடு என்றான்
என் கவலைகளை அவனிடம்
விட்டு விட்டு பதிவிட்டேன்