என்னே பேதைமை?
நம்மை படைத்த தெய்வமே
நம்மோடு வந்து
வாழ்ந்து இந்த உலகிற்கு
வழிகாட்டி மனமெல்லாம்
மகிழ்ச்சியை தந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தா வனத்தில் கண்ணன்
வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
என்று பாடினாள் பக்த மீரா
ராம ராஜ்ஜியம்தான் என்
கனவு என்றார்
மகாத்மா காந்தியடிகள்
எல்லா உயிரும்
இன்புற்று வாழுக
கொல்லா விரதம்
குவலயம்
எல்லாம் ஓங்குக
கண் மூடி பழக்கம்
மண்மூடி போக
என்ற வள்ளலாரின்
வாக்கு பலிக்கட்டும்
சாத்திர சண்டையிலே
கோத்திர குப்பையிலே
புரளும் மக்களை
மீட்டேடுக்கபோவது யார்?
மலர்களிலே பல
சாதிகள் உண்டு
ஒவ்வொன்றும்
வெளியிடுகின்றன
மனதிற்கு சுகம் தரும்
நறுமணங்களை.
வெவ்வேறு நிறங்கள்,
வடிவங்கள்
இருப்பினும் அவைகள்
நாருடனே இணைந்து மாலையாகி
மனிதர்களுக்கு இன்பம் தருகின்றன
மாலவனின் கழுத்திலும் அலங்கரிக்கின்றன
மகேஸ்வரியின் பாதங்களிலும்
தன்னை அர்ப்பணிக்கின்றன.
மனிதர்கள் மட்டும்
உடலின் உள்ளே ஒன்றாயிருப்பினும்
உருவத்தில், வடிவில். இனத்தில்,
நிறத்தில்,சார்ந்த மதங்களின் கொள்கைகளில்
நிலவும் வேறுபாட்டை
பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி
உயர்ச்சி தாழ்ச்சி செய்து வீணே மடிகின்றனர்.
என்னே இவர்களின் பேதைமை!
என்று தீரும் இவர்களின் மடமை !
அனைத்தும் விழலுக்கு
இறைத்த நீராயிற்றே
எண்ணற்ற ஞானிகளின் போதனை
என்று திருந்துமோ
இந்த மானிட சமுதாயம்?
வேற்றுமையில் ஒற்றுமை
என்று வாய் கிழிய
பேசுகின்றார்
ஆனால் குணங்கெட்டு
ஒருவரைஒருவர் ஏசி
மதிகெட்டு மாய்கின்றார்.
அனைத்து உயிரிலும்
அந்த வாசுதேவன்தான்
உள்ளொளியாய்,
ஆன்மாவாய் இருக்கின்றான்
அவனை நான் தொழுகின்றேன் என்று
மெத்த சாத்திரம் படித்த மேதைகள்
மேடைகள் தோறும் முழங்குகின்றார்.
ஆனால் மேடையை விட்டு கீழிறங்கியதும்
நான் மேல்சாதி நீ கீழ்சாதி தள்ளி நில் என்று
பாங்குடனே பகருகின்றார்.
உள்ளொரு வைத்து
புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டாம்
என்றார் வள்ளலார்
அப்படிப் பார்த்தால் இன்று
அனைவரும் தனி தனி தீவாக
அல்லவோ நின்றிடுவோம்.!
நம்மை படைத்த தெய்வமே
நம்மோடு வந்து
வாழ்ந்து இந்த உலகிற்கு
வழிகாட்டி மனமெல்லாம்
மகிழ்ச்சியை தந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தா வனத்தில் கண்ணன்
வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
என்று பாடினாள் பக்த மீரா
ராம ராஜ்ஜியம்தான் என்
கனவு என்றார்
மகாத்மா காந்தியடிகள்
எல்லா உயிரும்
இன்புற்று வாழுக
கொல்லா விரதம்
குவலயம்
எல்லாம் ஓங்குக
கண் மூடி பழக்கம்
மண்மூடி போக
என்ற வள்ளலாரின்
வாக்கு பலிக்கட்டும்
சாத்திர சண்டையிலே
கோத்திர குப்பையிலே
புரளும் மக்களை
மீட்டேடுக்கபோவது யார்?
மலர்களிலே பல
சாதிகள் உண்டு
ஒவ்வொன்றும்
வெளியிடுகின்றன
மனதிற்கு சுகம் தரும்
நறுமணங்களை.
வெவ்வேறு நிறங்கள்,
வடிவங்கள்
இருப்பினும் அவைகள்
நாருடனே இணைந்து மாலையாகி
மனிதர்களுக்கு இன்பம் தருகின்றன
மாலவனின் கழுத்திலும் அலங்கரிக்கின்றன
மகேஸ்வரியின் பாதங்களிலும்
தன்னை அர்ப்பணிக்கின்றன.
மனிதர்கள் மட்டும்
உடலின் உள்ளே ஒன்றாயிருப்பினும்
உருவத்தில், வடிவில். இனத்தில்,
நிறத்தில்,சார்ந்த மதங்களின் கொள்கைகளில்
நிலவும் வேறுபாட்டை
பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி
உயர்ச்சி தாழ்ச்சி செய்து வீணே மடிகின்றனர்.
என்னே இவர்களின் பேதைமை!
என்று தீரும் இவர்களின் மடமை !
அனைத்தும் விழலுக்கு
இறைத்த நீராயிற்றே
எண்ணற்ற ஞானிகளின் போதனை
என்று திருந்துமோ
இந்த மானிட சமுதாயம்?
வேற்றுமையில் ஒற்றுமை
என்று வாய் கிழிய
பேசுகின்றார்
ஆனால் குணங்கெட்டு
ஒருவரைஒருவர் ஏசி
மதிகெட்டு மாய்கின்றார்.
அனைத்து உயிரிலும்
அந்த வாசுதேவன்தான்
உள்ளொளியாய்,
ஆன்மாவாய் இருக்கின்றான்
அவனை நான் தொழுகின்றேன் என்று
மெத்த சாத்திரம் படித்த மேதைகள்
மேடைகள் தோறும் முழங்குகின்றார்.
ஆனால் மேடையை விட்டு கீழிறங்கியதும்
நான் மேல்சாதி நீ கீழ்சாதி தள்ளி நில் என்று
பாங்குடனே பகருகின்றார்.
உள்ளொரு வைத்து
புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டாம்
என்றார் வள்ளலார்
அப்படிப் பார்த்தால் இன்று
அனைவரும் தனி தனி தீவாக
அல்லவோ நின்றிடுவோம்.!
மலரின் விளக்கம் அருமை ஐயா... சிந்திக்க வேண்டிய கருத்துகள்...
ReplyDeleteநன்றி... தொடர வாழ்த்துக்கள்...
வரையப்பட்டுள்ள படங்கள் இரண்டும் நன்றாக உள்ளன.
ReplyDeleteசொல்லப்பட்டுள்ள் கருத்துக்கள் யாவும் சூப்பரோ சூப்பர்.
//வெவ்வேறு நிறங்கள், வடிவங்கள் இருப்பினும் அவைகள் நாருடனே இணைந்து மாலையாகி மனிதர்களுக்கு இன்பம் தருகின்றன. மாலவனின் கழுத்திலும் அலங்கரிக்கின்றன. மகேஸ்வரியின் பாதங்களிலும் தன்னை அர்ப்பணிக்கின்றன.//
மணம் வீசும் செய்திகள் மனதை மகிழ்விக்கின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
பாராட்டிற்கு நன்றி. VGK
Deleteஎந்தன் பார்வை
உந்தன் பார்வை
என்று நம்மை சொக்க வைக்கும்
கண்ணன் மட்டும் இவன் வரைந்தது
மற்ற இரண்டும் பதிவிற்காக வலையிலிருந்து எடுக்கப்பட்டது