சிந்தனைகள் (96)
இராம !
ஒருவன் ஜீவன் முக்தி நிலையை
அடையவேண்டுமாயின்
சங்கீத ஞானத்தை அவன்
பிறக்கும் பொழுதே அவனுடைய
நெற்றியில் பிரம்மன் எழுதவேண்டும்
கீர்த்தனை (355)சீதாவர சங்கீத ஞானமு
ராகம் -தேவகாந்தாரி -தாளம் -தேசாதி
சீதையின் நாயகனே !
கீதை முதலிய சகல உபநிஷத்துக்களின்
சாரமாக (பொருளாக ) விளங்கும் இராமா !
ஒருவன் ஜீவன் முக்தி நிலையை
அடையவேண்டுமாயின் சங்கீத ஞானத்தை
அவன் பிறக்கும்பொழுதே அவனுடையே
நெற்றியில் பிரம்மன் எழுதவேண்டும் ;
பிரம்மத்திற்கு (பரமாத்மாவிற்கு )
ஆகாசமே சரீரம் என்பதையும்
அவ்வாகாசத்தில் உலகங்கள் சின்மயமாக
(சேதன வஸ்துக்களாக விளங்குகின்றன
என்பதையும் அறிந்து இவற்றை
தன் ஆத்மாவாக விளங்கும்
ஆத்மராமனுடன் சரியாக கண்டு
(ஒன்றாக பாவித்து ) கூடிய
நாதோபாசனையின் மூலம்
(ஜீவன் முக்தனாவதர்க்கு
சங்கீத ஞானத்தை பிரம்மன்
நமது நெற்றியில் எழுதவேண்டும்
பாத்திரத்தில் உணவு இல்லாமல்
அகப்பையில் எதுவும் வராது
என்பதுபோல் இசை ஞானமும்
பிறவியிலிருந்தே வரவேண்டும்
அதுவும் இறைவனை நோக்கி
நாதோபாசனையாய் மலர வேண்டும்
அதற்க்கு
அவன் அருள் வேண்டும் ;.
No comments:
Post a Comment