உயிர் வளர்த்தேனே! (பகுதி-2)
சரி இந்த உடம்பை பற்றி ஆராய புகுந்தால்
இது மருத்துவ கல்லூரி பாடமாக ஆகிவிடும்.
அதை கற்று தருவதற்காக
தனியார் மருத்துவ கல்லூரிமுதலைகள்
கோடிக்கணக்கில் செலவு செய்து கல்லூரி நடத்துகிறார்கள்.
அதில் சேரும் மாணவர்கள் நன்கொடையாக
40 லட்சம்முதல் 80 லட்சம் வரை தந்து
மருத்துவ கல்வி பயிலுகிறார்கள்
அவர்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும்.
அந்த பாவம் நமக்கு வேண்டாம்.
நம் பிரச்சினைக்கு வருவோம்.
இந்த உடல் தனக்குள் எந்த பிரச்சினையானாலும்
தனக்கு தானே தீர்த்துகொண்டாலும்
தீர்த்து கொள்ள முடியாத பிரச்சினைகளை
நமக்கு பல சமிஞ்ஞைகள் மூலம்
உணர்த்தவும் செய்கிறது.
அதை நாம் கண்டு கொள்வதில்லை.
அடம் பிடித்து அழும் குழந்தையின்
அழுகைக்கான காரணத்தை அறிந்து கொள்ளாமல்
அதை இரண்டு சாத்து சாத்தி தூங்க வைப்பது போல்
ஏதாவது மாத்திரைகளை உள்ளே தள்ளி
அந்த நேரத்திற்கு தப்பித்துகொல்கிறோம்.
ஒரு கால கட்டத்தில் ஒரு மாத்திரைகளும்
வேலை செய்யாது வலி தாங்க முடியாமல்
போய் மருத்துவரிடம் போனால்
பல லட்சங்களுக்கு செலவு வைப்பதுடன்
வாழ்நாள் முழுவதும் உணவிற்கு
பதிலாக மாத்திரைகளையும்,
சிறப்பு உணவாக சிரப்புகலையும்
நம் தலையில் கட்டுவது மட்டுமல்லாமல்
நம்மை அடிக்கடி உடம்பிலிருந்து வெளியாகும்
அத்தனை கழிவுகளுக்கான பரிசோதனை,
உடலில் உயிரோடு உள்ள கருவிகளை
உயிரற்ற கருவிகளைக் கொண்டு பரிசோதனை,
என நிரந்தர நோயாளிகளாக்குவதுடன்
பல பேர்களுக்கு வேலை வாய்ப்பும்
ஏற்படுத்தி தருகிறார்.
இப்படி நாம் வாழ்நாள் முழுவதும் உழைப்பதும் உழைத்த காசை இந்த உடலுக்காக வீணடிப்பதும் புலம்புவதுமாக போய்க்கொண்டிருக்கிறது.
இன்று நோய்வாய்ப் படாதவர்களோ
அல்லது உடலில் ஏதாவது ஒரு அறுவை சிகிச்சை
செய்யப்படாதவர்களோ ஒருவரும் கிடையாது.
உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளுக்கும்,
அத்தனை கருவிகளுக்கும் என தனி தனி
சிறப்பு மருத்துவர்கள் இருந்தும்
அனைவரும் நிரந்தர நோயாளிகளாகவே
இருக்கின்றனர்.
என் இந்த அவல நிலை?
இதற்காகவா இறைவன்
மனிதர்களை படைத்தான்?
நிச்சயம் இருக்காது.
எல்லாம் அவரவர்களே
பாடுபட்டு வரவழைத்துக்கொண்டது.
(இன்னும் வரும்)
pic. coutesy-google images
அருமை ஐயா...
ReplyDeleteபாடுபட்டு வரவழைத்துக் கொண்டதா...? ஆசை பட்டு பட்டு வரவழைத்துக் கொண்டதா...?
தொடர வாழ்த்துக்கள்...
இரண்டாலும்தான்
Delete//இப்படி நாம் வாழ்நாள் முழுவதும் உழைப்பதும் உழைத்த காசை இந்த உடலுக்காக வீணடிப்பதும் புலம்புவதுமாக போய்க்கொண்டிருக்கிறது.//
ReplyDeleteபரிதாபம் தான்.
//இன்று நோய்வாய்ப் படாதவர்களோ அல்லது உடலில் ஏதாவது ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படாதவர்களோ ஒருவரும் கிடையாது.//
அச்சச்சோ ;( அப்படியா ?
உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளுக்கும், அத்தனை கருவிகளுக்கும் என தனி தனி சிறப்பு மருத்துவர்கள் இருந்தும் அனைவரும் நிரந்தர நோயாளிகளாகவே இருக்கின்றனர். //
அதானே!
நல்ல பகிர்வு. யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.
யோ (sick)க வேண்டும்
Deleteஅடம் பிடித்து அழும் குழந்தையின்
ReplyDeleteஅழுகைக்கான காரணத்தை அறிந்து கொள்ளாமல்
அதை இரண்டு சாத்து சாத்தி தூங்க வைப்பது போல்
ஏதாவது மாத்திரைகளை உள்ளே தள்ளி
அந்த நேரத்திற்கு தப்பித்துகொல்கிறோம்./
/மிகச் சரியாகச் சொன்னீர்கள்
பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்