பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)
நாடி வந்த அனைவரையும்
கேட்க சொன்னார்
ஒருவர்
அவர் பகவான் ரமண மகரிஷி என்று
அவரை பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு தெரியும்.
அவர் அதை சொல்லி
பல ஆண்டுகள் கடந்துவிட்டன
ஆனால் அவர் சொல்லியதை
யாரும் கேட்டதாக தெரியவில்லை
கேட்டிருந்தால் பிற்கால சந்ததிகள்
மற்றொரு ரமணரை சந்தித்திருக்க வாய்ப்பு
கிடைத்திருக்கும்.
ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று.
தோன்றவில்லை.
அவர் நான் யார் என்று அவரவர்
தனக்குள்ளே தேட சொன்னார்.
ஆனால் இந்த உலகத்து மனிதர்களோ
ரமணாஸ்ரமத்தில் ரமணரை
தேடிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய
அவர்களுக்குள் அந்த நான் என்ற
ஆன்மஸ்வரூபனை தேட முயற்சி
செய்வதில்லை
இன்னும் எவ்வளவு காலம்தான்
அவரை பற்றிய கதைகளையும்
அவரை பற்றி மற்றவர்கள் விடும்
கட்டுக்கதைகளையும்
படித்துக் கொண்டிருப்பது?
கேட்டுக்கொண்டிருப்பது?
வியாக்கியானம் பண்ணிக்கொண்டிருப்பது?
அவர் படத்தை வைத்துக்கொண்டு பூஜை
புனஸ்காரம்,நமஸ்காரம் விழாக்கள்
கொண்டாடிக்கொண்டிருப்பது?
ரமணர் பல
வழிகளை சொன்னார்
அவற்றில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து
அந்த வழியில் செல்லவேண்டுமே அல்லாது
மீண்டும் புத்தகங்களில் உள்ள செய்திகளை
மீண்டும் மீண்டும் உருப்போடுவதால்
உருப்படமுடியுமோ ?
நிச்சயம் முடியாது.
தண்ணீரில் குதித்தால்தான்
நீந்த கற்றுக்கொள்ள முடியும்
கரையிலே உட்க்கார்ந்து கொண்டு தண்ணீரை உற்றுப்பார்த்துகொண்டிருந்தால்
நீச்சல் வராததுபோல்
ரமணரின் படத்தை
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தால்
மட்டும் ஞானம் பிறக்காது.
இந்த உடல்தான் நாம் என்று
நினைத்துக்கொண்டிருக்கும்
இந்த உடல் எப்போது வேண்டுமானாலும்
காணாமல் போய்விடும்.
அப்புறம் ஒன்றும் செய்யமுடியாது
மீண்டும் இறைவன் மற்றொரு
உடல் நமக்கு அளிக்கும்வரை.
எனவே அவர் காட்டிய வழியில்
ஆத்ம விசாரம் செய்ய தொடங்குங்கள்.
ஒரு விதை ஒரே நாளில் முளைத்து
மரமாகி கனிகளை ஈன்று விடுவதில்லை.
அதற்க்கு பல மாதங்களோ அல்லது
ஆண்டுகளோதான் ஆகும்.
அதுவரை முயற்சிகளை
தொடரத்தான் வேண்டும்.
அதுபோல்தான்
ஆன்ம சாதனையும்.
அதற்க்கு நம்பிக்கையும்,
விடாமுயற்சியும் வேண்டும்.
கோழைகளும் சோம்பேறிகளும்
ஆன்ம சாதனைக்கு தகுதியானவர்கள் அல்லர்
என்று பகவான் கண்ணன் கீதையில்
சொல்லியிருப்பதை இங்கு நினைவு
கூறுதல் அவசியம்.
.
//அவர் நான் யார் என்று அவரவர்
ReplyDeleteதனக்குள்ளே தேட சொன்னார்.
ஆனால் இந்த உலகத்து மனிதர்களோ
ரமணாஸ்ரமத்தில் ரமணரை
தேடிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய
அவர்களுக்குள் அந்த நான் என்ற
ஆன்மஸ்வரூபனை தேட முயற்சி
செய்வதில்லை
இன்னும் எவ்வளவு காலம்தான்
அவரை பற்றிய கதைகளையும்
அவரை பற்றி மற்றவர்கள் விடும்
கட்டுக்கதைகளையும்
படித்துக் கொண்டிருப்பது?
கேட்டுக்கொண்டிருப்பது?
வியாக்கியானம் பண்ணிக்கொண்டிருப்பது?
அவர் படத்தை வைத்துக்கொண்டு பூஜை
புனஸ்காரம்,நமஸ்காரம் விழாக்கள்
கொண்டாடிக்கொண்டிருப்பது?
//
இப்ப நீங்களும் அதையே தானே செய்து கொண்டு இருக்கிறீகள் ?
நான் யார் ? அப்படிங்கற சிந்தனை யை நீங்க முதல்லே தொடங்குங்க..
மத்தவங்க என்ன பண்றாங்க.. அப்படிங்கற சிந்தனைய விட்டுட்டு
நீங்க உங்களுக்குள்ளேயே ...
நான் யார் அப்படிங்கர விசாரத்தை தொடர்ந்து செய்யுங்க..
அவங்க எல்லாருமே ரமணர் படத்தை வெச்சு பூசை பண்றாங்க.
உண்மைதாங்க.
ஆனா நீங்களோ மத்தவங்க என்ன செய்யறாங்க அப்படின்னு பாத்துண்டு இருக்கீக...
சாரி சார்.
நான் யார் ? அப்படிங்க விசாரத்தை நான் இன்னிக்கு செய்யணும். ஒரு பைவ் மினிட்ஸ் ஆவது அட் லிஸ்டு.
லேட் ஆயிடுத்து.
நாளைக்கு வந்து நம்ம குஜாய்ச்சன்டையை தொடங்கலாம்.
அதெல்லாம் இருக்கட்டும் சாரே...
உண்மையிலே ...
நான் யார் அப்படிங்கரதுலே நான் அப்படிங்கறது யாரு ?
சுப்பு தாத்தா
நானும் அதைத்தான்
Deleteசெய்துகொண்டிருக்கிறேன்
நீங்களும் அதைத்தான்
செய்துகொண்டிருக்கிறீர்கள்
இரண்டுபேரும் அதைத்தான்
செய்துகொண்டிருக்கிறோம்
நீங்கள் சொல்வதுபோல்
நான்மற்றவர்கள் செய்வதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான் என்ன செய்கிறேன்
என்பதை நீங்கள்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்
இல்லாவிடில்
பல கோடி பேர்கள் வாழும் இந்த உலகில்
மற்றவர்கள் எல்லாம் அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது
இந்த பதிவிற்கு நீங்கள் மட்டும் வந்து
முதலில் வந்து கருத்து சொல்வீர்களா?
Both are sailing
in the same boat
என்றாவது ஒருநாள்
இருவரும் கரை சேருவோம்
/// கரையிலே உட்கார்ந்து கொண்டு தண்ணீரை உற்றுப்பார்த்துகொண்டிருந்தால் நீச்சல் வராததுபோல்... /// உட்பட நல்ல விளக்கம்... நன்றி ஐயா...
ReplyDeleteநான் யார்...? என்பதை தான் நம்மை முதலில் அறிய வேண்டும் என்று என்னை நானே மனச்சாட்சி மூலம் பல பகிர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா...
வாழ்த்துக்கள்...
நன்றி DD
Delete//ஒரு விதை ஒரே நாளில் முளைத்து மரமாகி கனிகளை ஈன்று விடுவதில்லை.அதற்க்கு பல மாதங்களோ அல்லது ஆண்டுகளோதான் ஆகும்.
ReplyDeleteஅதுவரை முயற்சிகளை தொடரத்தான் வேண்டும்.
அதுபோல்தான் ஆன்ம சாதனையும் அதற்க்கு நம்பிக்கையும், விடாமுயற்சியும் வேண்டும்.//
ஆஹா, அழகாகப் பல விஷயங்களைப்புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள் அண்ணா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கு நன்றிகள்.
http://gopu1949.blogspot.in/2013/07/24.html க்கு வாங்கோண்ணா.
நன்றி VGK
DeleteBoth are sailing in the same boat
ReplyDeleteஎன்றாவது ஒருநாள் இருவரும் கரை சேருவோம்//
அடடா, கடைசியில் எங்களை அம்போன்னு விட்டுட்டீங்களே?
நானும் திரு. திண்டுக்கல் தனபாலன் சாரும் எப்போ கரை சேர்வது? ;)
நீண்ட நாட்களாக நீங்கள் இருவரும்
Deleteஇவனோடு பயணம் செய்துகொண்டிருக்கிறீர்கள். .
அதை விடாமல் தொடருங்கள்.
இவனோடு நீங்களும் கரை சேர்ந்துவிடுவீர்கள்.
கவலைப்படவேண்டாம்.
Pattabi Raman July 14, 2013 at 5:04 AM
Delete//நீண்ட நாட்களாக நீங்கள் இருவரும் இவனோடு பயணம் செய்துகொண்டிருக்கிறீர்கள். .அதை விடாமல் தொடருங்கள்.
இவனோடு நீங்களும் கரை சேர்ந்துவிடுவீர்கள். கவலைப்படவேண்டாம்.//
ஆஹா தன்யனானோம். மிக்க நன்றி.
அண்ணன் காட்டிய வ்ழி .... அச்சா, ப்ஹூத் அச்சா.
मुझे सच बोल रहा हूँ
Deleteयाथ रकिये