நாடுவோம் நாராயணனை
பாடுவோம் அவன் புகழை .
ஆதிமூலமே
அரவணைப்பள்ளியானே
அனைத்துயிரிலும் ஆன்மாவாய்
ஒளி வீசுபவனே !
இவ்வுலக வாழ்வில் எதிர்ப்படும்
துன்பங்களை தீர்த்து
வைக்கும் துணைவனே
என்றும் உன் நினைவாய்
காண்பதனைத்தையும் உன் வடிவாய்
கண்டு இன்புறும் பக்தர்களுக்கு
அனைத்துமாய் விளங்குபவனே
நன்மையையும் செல்வமும்
நல்லதோர் மக்களும்
சுற்றமும் நானிலத்தில்
தட்டாது வழங்கிடும் நாரணனே
நாளும் கோளும் தரும் இடர்ப்பாடுகள்
இந்த உடலையும் உலகையும்
நினைப்போர்க்கன்றி
உன்னை நினைப்போர்க்கேது ?
என்றும் மாறாத பேரின்ப ஊற்றாய் நீ
என் உள்ளத்தில் சுரக்கும்போது
சில கணமே தோன்றி
மறையும் இவ்வுலக
இன்பங்கள் எனக்கெதற்கு ?
என் உள்ளம் பால்போல்
வெண்மையாய் இருப்பின்
நீ அங்கு வந்து
சயனிப்பதர்க்கு தடையேது ?
இனிக்கும் உன் நாமம் என் நாவில்
எப்போதும் இருக்கையில்
அது எவ்வாறு வேறு சுவையை
நாடுதல் கூடும் ?
பரம்பொருளே , பரிபூரணனே
பக்தவத்சலனே உன்னை
பணிவதை தவிர
வேறு ஏது பணி எனக்கு ?
பிறவி பிணிக்கே மருந்தாய் விளங்கும் உன்
நாமத்தை உட்கொண்டபின் தோன்றி மறையும்
இந்த உடலின் பிணிகளுக்கு எதற்கு மருந்து ?
என் உள்ளத்தில் எப்போதும்
ஒலிக்கட்டும் உன் நாமம்
என் கண்கள் உன்
தெய்வீக வடிவங்களை
கண்டு மகிழட்டும்
என் செவி உன்
லீலா விநோதங்களை
கேட்கட்டும்
என் உடல் உன் அடியார்களுக்கு
அன்போடு தொண்டு செய்யட்டும்
என் மனம் எப்போதும்
உன்னையே நாடட்டும் .
ஓம் நமோ நாராயணாய
பாடுவோம் அவன் புகழை .
ஆதிமூலமே
அரவணைப்பள்ளியானே
அனைத்துயிரிலும் ஆன்மாவாய்
ஒளி வீசுபவனே !
இவ்வுலக வாழ்வில் எதிர்ப்படும்
துன்பங்களை தீர்த்து
வைக்கும் துணைவனே
என்றும் உன் நினைவாய்
காண்பதனைத்தையும் உன் வடிவாய்
கண்டு இன்புறும் பக்தர்களுக்கு
அனைத்துமாய் விளங்குபவனே
நன்மையையும் செல்வமும்
நல்லதோர் மக்களும்
சுற்றமும் நானிலத்தில்
தட்டாது வழங்கிடும் நாரணனே
நாளும் கோளும் தரும் இடர்ப்பாடுகள்
இந்த உடலையும் உலகையும்
நினைப்போர்க்கன்றி
உன்னை நினைப்போர்க்கேது ?
என்றும் மாறாத பேரின்ப ஊற்றாய் நீ
என் உள்ளத்தில் சுரக்கும்போது
சில கணமே தோன்றி
மறையும் இவ்வுலக
இன்பங்கள் எனக்கெதற்கு ?
என் உள்ளம் பால்போல்
வெண்மையாய் இருப்பின்
நீ அங்கு வந்து
சயனிப்பதர்க்கு தடையேது ?
இனிக்கும் உன் நாமம் என் நாவில்
எப்போதும் இருக்கையில்
அது எவ்வாறு வேறு சுவையை
நாடுதல் கூடும் ?
பரம்பொருளே , பரிபூரணனே
பக்தவத்சலனே உன்னை
பணிவதை தவிர
வேறு ஏது பணி எனக்கு ?
பிறவி பிணிக்கே மருந்தாய் விளங்கும் உன்
நாமத்தை உட்கொண்டபின் தோன்றி மறையும்
இந்த உடலின் பிணிகளுக்கு எதற்கு மருந்து ?
என் உள்ளத்தில் எப்போதும்
ஒலிக்கட்டும் உன் நாமம்
என் கண்கள் உன்
தெய்வீக வடிவங்களை
கண்டு மகிழட்டும்
என் செவி உன்
லீலா விநோதங்களை
கேட்கட்டும்
என் உடல் உன் அடியார்களுக்கு
அன்போடு தொண்டு செய்யட்டும்
என் மனம் எப்போதும்
உன்னையே நாடட்டும் .
ஓம் நமோ நாராயணாய
ஐம் புலன்களும் 'ஓம் நமோ நாராயணாய'
ReplyDeleteஅருமை ஐயா... வாழ்த்துக்கள்...
நன்றி DD
Delete//என் மனம் எப்போதும் உன்னையே நாடட்டும் .//
ReplyDeleteஓம் நமோ நாராயணாய !
படமும் ஒவ்வொரு வரிகளும் அருமையோ அருமை.
பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா.
நன்றி VGK
Delete