Monday, February 10, 2014

அபிராமி அந்தாதி (10)( பாடல்(3)

அபிராமி அந்தாதி (10)

அபிராமி அந்தாதி (10)

பாடல்(3)

3: அறிந்தேன்எவரும் அறியா மறையைஅறிந்துகொண்டு
செறிந்தேன்நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

இந்த பாடலை கீழ்கண்டவாறு
வரிசைப்படுத்துவோம் 

எவரும் அறியா மறையை,அறிந்தேன்,
அறிந்துகொண்டு செறிந்தேன்,
நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாயமனிதரையே.
வெருவிப் பிறிந்தேன்,
திருவே. நினது திருவடிக்கே,

இந்த உலகில் அனைத்திற்கும்
ஆதாரம் பரம்பொருள்.

அது எதுவும் செய்யாமல் 
சும்மா கிடக்கும்போது சிவம்

அது செயல்படும்போது சக்தி

ஆனால் சிவமும் சக்தியும்
என்றும் பிரிவதில்லை 


ஒன்றோடொன்று சிவன்பார்வதிபோல்
இணைந்தே இருக்கின்றன 

உலக வழக்கில்சக்தி இல்லையேல் 
சிவமென்னு சும்மா கிட 
என்று சொல்வார்கள் 

ஆனால் ஜீவன்கள் உடலில்
இருந்து சக்தி வெளியேறிவிட்டால்
அது சவமாகிவிடும். 

அதனால்தான் உடலில் உயிர் 
என்னும் சக்தி இருக்கும்போதே 
சிவத்தை அறிந்து கொண்டுவிடவேண்டும் 

அந்த அறிவை நமக்கு உணர்த்துவது
ஒவ்வொரு ஜீவன் உள்ளும் 
மறைபொருளாக இருந்துகொண்டு
நம்மை இயக்கும் அந்த மறைபொருளை
உணர வழி வைக்கும் மறைகள். 

அவைகளை பிழையறக் கற்றேன்
கற்றதோடு மட்டுமல்லாமல்
அதன் உட்பொருளையும் அறிந்துகொண்டேன்,
என்கிறார் அபிராமி பட்டர் 


அடுத்து கூறுகிறார் 
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களும்
வினைகளை அனுபவித்து தீர்க்கவே இந்த 
உலகில் வந்துள்ளன.

அவைகளின் மனம்  முழுவதும்
வினைகளை அனுபவிப்பதும் ,
அதனால் விளையும் இன்ப துன்பங்களில் 
சிக்கி மாள்வதும் மீண்டும் 
ஏதாவது புதிய வினைகளைச் செய்து 
அறியாமையில் மூழ்குவதுமாகவே
இருக்கின்றனவே  அன்றி 
உன் அடியார்களின் பெருமையை 
அதனால் அறிய இயலாது 

இந்த  உண்மையை அறியாது தவறு 
செய்யும் மனிதர்கள்
மீண்டும் நரகிலே
போய் விழுவார்கள்.

அவர்களின் கூட்டுறவை வெறுத்து 
நான் விலகிவிட்டேன்.


அன்னை இலக்குமிபோல் பொருட்செல்வம்,
அருட்செல்வம் போன்ற செல்வங்களை
அள்ளி தரும் அபிராமியே 

உனது திருவடிகளே 
எனக்கு அடைக்கலம்
அதுவே என்னை துன்பங்களிலிருந்து
காக்கும் படைக்கலம் என்று
போற்றிப் பாடுகின்றார்
அபிராமி பட்டர் 

நாமும் அபிராமியின் திருவடிகளில்
அடைக்கலம் புகுவோம்.

அன்னையை மறந்து 
இவ்வுலக போகங்களில்
மூழ்கி கிடக்கும் மனிதர்களை 
விட்டு விலகுவோம்.

அவள் புகழ் பாடும் அடியார்கள்
கூட்டத்தில் இணைந்து நம் வாழ்வை
இன்ப மயமாகச் செய்து கொள்ளுவோம் 

2 comments:

  1. // வினைகளை அனுபவித்து தீர்க்கவே //

    இதை உணர்ந்தால் போதும் ஐயா... மேலும் விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete