கடவுளைக் காணும் வழி
கடவுள் நம்பிக்கை உடையவர்கள்
கடவுளை தரிசனம் செய்ய விரும்புகிறார்கள்.
ஆனால் கடவுள் எப்படி இருப்பார்
என்று ஒருவருக்கும் தெரியாது.
கண்டவர்கள் அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில்
ஏதோ பதிவு செய்து வைத்துள்ளனர்.
அவர்களை பதிவு மற்றவர்களுக்கு ஒரு ஆர்வத்தை தூண்ட பயன்படுமேயன்றி அவரவர் தானே அந்த அனுபவத்தை
பெற்றால்தான் உண்மை விளங்கும்.
இன்று பொதுவாக கடவுளை வணங்குவது என்றால்,
ஒரு கோயிலுக்கு சென்றோ அல்லது உலகம் பூராவும் உள்ள
கோயில்களுக்கு சென்றோ அங்குள்ள மூர்த்தங்களை
வழிபடுவது என்று செய்து கொண்டிருக்கின்றனர்.
சிலர் வீட்டிலேயே படங்களை வடிவங்களை வழிபடுகின்றனர்.
பல ஆண்டுகள் வழிபாடுகள் செய்தாலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருக்கின்றனர்.
தன்னை உணர்ந்த ஞானிகள் கடவுளுக்கு வடிவம் கிடையாது.
அவன் ஜோதி வடிவானவ்ன் .அவன் அன்பு வடிவானவன் என்றுதான்
அறுதியிட்டு சொல்கிறார்கள்.
ஆனால் நாம் அனைவரும் நம்முடைய மனதின் மூலமும், புலன்களின் மூலமும்தான் கடவுளை அடைய விரும்புகிறோம்.
ஆனால் அந்த இரண்டாலும் பல கோடி ஆண்டுகள் முயற்சி செய்தாலும்
கடவுளை காண முடியாது,உணர முடியாது என்பதே உண்மை.
மனம் மூலம் தான் இந்த உலகில் தொடர்பு கொள்கிறோம்.
மனம் எப்போதும் ஒரு வடிவத்தைத்தான் சார்ந்து நிற்கும்.
அந்த வடிவத்திற்கு பெயர் கொடுப்பது புத்தி ஆகும். பெயர்களும் வடிவங்களும்தான் உலகம் இந்த இரண்டும் இல்லையேல் உலகம் என்று ஒன்றும் இல்லை.
இந்த இரண்டையும் கடந்து நம்முள் இருப்பதுதான் ஆத்மா
அதன் ஒளியால்தான், அதன் சக்தியால்தான் அனைத்தும் தோன்றுகின்றன.
நாம் காணும் அனைத்தும் நம் மனதில்தான் பதிவுகளாக உள்ளன.
மனம் அழிந்துவிட்டால். கடந்தகாலமும் இல்லை எதிர்காலமும் இல்லை.
நிகழ்காலம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
நம்முள்ளே இருக்கும் அந்த "நான்" என்னும் பரிபூரணத்தை உணர்ந்துகொண்டால். நம்முடைய அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வந்துவிடும்.
பகவான் ரமணர் கூறுகிறார் .நீ கடவுளைக் காண வேண்டுமென்றால் நீ கடவுளாக வேண்டும் என்கிறார்
.
நாம் ஏற்கெனவே கடவுளின் அம்சம் என்றாலும்
அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இல்லை.
கடவுளின் இயல்பு அன்பு
அன்பே சிவம் என்கிறார்கள்.
நாம் அன்பு மயமாகிவிட்டால்.
அன்பு மயமான கடவுளை கண்டு
ஆனந்தம் பெறலாம்
அதற்கு பகவான் ரமணரின்
உபதேசங்கள் வழிகாட்டும்.

// நாம் அன்பு மயமாகிவிட்டால்... // இதை விட என்ன வேண்டும் ஐயா...?
ReplyDeleteசில வரிகளை இரண்டு மூன்று முறை படித்தேன்.
ReplyDelete