Thursday, February 20, 2014

அபிராமி அந்தாதி (16) (பாடல்(9)


அபிராமி அந்தாதி (16) (பாடல்(9)

அபிராமி அந்தாதி (9)



பாடல்:9

9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் 
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் 
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், 
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

இந்த பாடலில் பட்டர் 
அம்பிகையில் உடலழகை வர்ணிக்கிறார்.

மனிதர்களின் உடலழகு காண்பவர்களின்
மன நிலையைப் பொறுத்து  
காமத்தினை தூண்டும்.

அழியும் உடலழகு மீது ஆசை வைத்தால் 
அழிவுதான் ஏற்படும்.

ஆனால் குழந்தைக்கு 
அந்த உணர்வு இல்லை.

அதுபோல தான் உடல் அல்ல ஆன்மாதான் 
என்ற உண்மையை உணர்ந்துகொண்ட 
ஞானிகளுக்கும் அந்த உணர்வு கிடையாது.
அதனால்தான் அவர்கள் விரசமின்றி 
அம்பிகையின் வடிவழகை வர்ணிக்க முடிகிறது.

அந்த  நிலையை எட்டாதவர்கள் 
இந்த பாடலின் விளக்கத்தினை படித்தால் 
அவர்களுக்கு அம்பிகை மீது பக்தி ஏற்படாது.
மாறாக காம உணர்வுகளே மேலோங்கி நிற்கும்.

காமாட்சியைப் போல் கையில் கரும்பு வில்லை கையில் ஏந்தியுள்ள அபிராமியை நம்மை காக்கும் அன்னையாக கருதிக்கொண்டு
நாம் காமத்தைக் கடந்து பக்தி செய்தோமானால்
நமக்கு அவள் அருள் கிடைக்கும். 

அப்படிப்பட்ட அபிராமித்தாயே! 
என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, வர்ணிக்க முடியாத உன் வடிவழகே ஆகும்

.

காமத்தை தூண்டுபவை அல்ல உன்மார்பகங்கள். 
மாறாக உயிர்களிடத்தில் நீ கொண்டுள்ள  
பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்குஞானப்பால் அளிப்பதற்காகவே 
அமைந்துள்ளது என்று பட்டர் கூறுகின்றார். 

நீ அணிந்துள்ள அழகிய  ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் எப்போதும் காட்சி தரவேண்டும் என்று வேண்டுகிறார் பட்டர். 

காமம் நீங்காவிடில் 
கடவுளின் அருளைப் பெற முடியாது.

காலில் தைத்த முள்ளை மற்றொரு முள்ளின் உதவியால் நீக்க முனைவதுபோல். காம சேற்றில் சிக்கியுள்ள மனிதர்கள் தங்கள் மனதில் உள்ள காமம் நீங்க காமத்தை தூண்டும் அபிராமியின் வடிவை ஒரு குழந்தையின் மனோபாவத்தில் கண்டு வணங்கி   காமாட்சியின் திருவடிகளைப் பற்றவேண்டும். 

1 comment:

  1. வணங்கும் முறை சொன்னவிதமும் அருமை ஐயா...

    ReplyDelete