Wednesday, February 26, 2014

இன்று மகா சிவராத்திரி.(1)



இன்று மகா சிவராத்திரி.(1)

PIC_0094


சிவபெருமானை வணங்கி
அருள்பெற மிக உகந்த நாள்

இந்த சிவராத்திரி குறித்து
கணக்கிலடங்கா  புராணங்களும்,
கதைகளும், துதிகளும்
வழிபாடு முறைகளும் உள்ளன

சிவாலயங்களில் இரவு முழுவதும்
பலவிதமான அபிஷேகங்களும்,
வழிபாடுகளும் நடக்கும்.

தீவிர பக்தர்கள் சிவாலயங்களுக்கு
சென்று இரவு முழுவதும் விழித்து
சிவ  லிங்கத்தை தரிசித்துபொழுதைக்  கழிப்பர்.

இரண்டாம் நிலை பக்தர்கள் இரவு முழுவதும்
விழித்திருந்து திரைப்படங்களை பார்த்து
சிவ  ராத்திரி விரதம் கடைபிடிப்பர்.

இந்த சிவராத்திரி விரதத்தினை கடைபிடித்து
விஷ்ணு  பகவான் சக்ராயுதத்தை
பெற்றார் என்று கூறுவார்.

காட்டில் ஒரு வேடனை புலி துரத்த
அவன் உயிருக்கு பயந்து ஓடி ஒரு மரத்தின்
மேலேறி உட்கார்ந்துகொண்டானாம் .

தூக்கம் வரும்போதெல்லாம் அ
ந்த மரத்தில் இலைகளை ஒவ்வொன்றாக
பறித்து பறித்து  இரவு முழுவதும் விழித்திருந்து
மரத்தின் கீழேபோட்டுக் கொண்டிருந்தானாம்

அந்த மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கம் இருந்ததாம் .
அன்று சிவா ராத்திரியாம் அவன் உட்கார்ந்திருந்த
 மரம் வில்வ மரமாம்.சிவராத்திரி அன்று
இரவு முழுவதும் விழித்திருந்து வில்வ இலைகளை
சிவ  லிங்கத்தின் மீது போட்டதால்
அவன் அடுத்த பிறவியில் ஒரு அரசனாகப் பிறந்தானாம்.
என்று ஒரு ஒரு கதை உண்டு.



அதாவது அவன் தன்னை அறியாமல்
செய்த செயல் சிவராத்திரி விரதம்
கடைபிடித்ததாகி விட்டது.

தன்னை அறியாமல் செய்தாலும்
அந்த விரதத்தின் பயனை அந்த வேடனுக்கு
அளிக்க சிவபெருமான் முடிவு செய்தார்.

நிலைமை அப்படி இருக்கும்போது
அந்த விரதத்தை சாத்திரங்களில்
விதிக்கப்பட்டுள்ள முறைப்படி கடைபிடித்தால் பலன்கள்  கிடைக்காமலா போகும்.
என்பதை வலியுறுத்தத்தான்
இத்தனை ஏற்பாடுகள் நம் முன்னோர்கள்.
வகுத்து வைத்திருக்கிறார்கள்.

ஈடுபாடு இருப்பவர்கள் முறைப்படி
அனைத்தையும் கடைபிடிக்கட்டும்.

முடியாதவர்கள் அனைவருக்காக
ஆலயங்களில் செய்யப்படும் வழிபாடுகளை
கண்டு இரவு முழுவதும் விழித்திருந்து வணங்கட்டும்

இல்லாதவர்கள். சிவா நாமாவளிகளையாவது
உச்சரித்துக்கொண்டு சிவனை நினைக்கட்டும் இந்நாளில்.

அதுசரி இவன் சொல்ல
வந்தது வேறு விஷயம்.

ஒவ்வொரு உயிரும் இரண்டு
விஷயங்களிலிருந்து எளிதாக என்ன
செய்தாலும் தப்பமுடியாது

அது பிறப்பு மற்றும் இறப்பு.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
உள்ள இந்த உலக வாழ்க்கை.

அதன் இடையே அடிக்கடி வந்து போகும்,
உறக்கம் மற்றும்.  மயக்கம்.

அதிலிருந்து தப்பிக்க
என்ன செய்ய வேண்டும். ?

இன்னும் வரும்


1 comment:

  1. சொல்ல வந்த விஷயத்தை அறிய காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete