Saturday, February 1, 2014

அபிராமி அந்தாதி (8)(பாடல்(2)


அபிராமி அந்தாதி (8)

அபிராமி அந்தாதி (8)

பாடல்(2)
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.



அனைத்தையும்
படைத்தவள் அன்னை அபிராமி 

அனைத்துமாயும் இருப்பவளும் 
அன்னை அபிராமியே 

அவள்தான் எனக்கு
எப்போதும் துணை. 

உறங்கும்போதும் விழித்திருக்கும்போதும் 
அவள்தான் எனக்கு துணையாய் நிற்பவள் 

அவள்தான் என்னை 
ஈன்றெடுத்த  தாய் 

அவள்தான் நான் 
வணங்கும்  தெய்வம் 

அவள்தான் வேதங்களில்
ஒலியாய் இருப்பவள் 

அதே வேதங்கள் காட்டும் 
ஒளியாய் இருப்பவளும் அவளே 

அனைத்திற்கும் ஆதார
 சுருதியாய் திகழ்பவளும் அவளே 

பனி சிந்தும்  மலர்கள் போல் தன் இதயத்தில் 
அடியார்களிடம் அன்பு ஊற்றெடுத்து 
அரவணைத்துக் காப்பவளும் அவளே  

கருணை கொண்ட விழிகளினால் 
நம்மை கடாஷித்து நம் துன்பங்களை 
நாம் உணராமல் இருக்க செய்பவளும் அவளே 

சிலையாய் கருத்த நிறத்தில் கோயிலில் 
உறைந்தாலும் நம் அறியாமையைப் போக்கி 
நிறைவான ஆனந்தம் தரும் ஓளி அவளே 

ஆனந்தம் தரும்
ஆசா பாசங்களை தருபவளும் அவளே 

அளவுக்கு மிஞ்சி ஆசா பாசங்களில் உழன்றால்
அதிலிருந்துநம்மை மீட்டுக் நம்மை 
அதிலிருந்து விடுவிப்பவளும் அவளே 

சத்துவம்,ரஜோ மற்றும் தமஸ் என்னும் 
மூன்று குணங்களில் சிக்கி தடுமாறும் நம்மை 
காப்பாற்றி அதிலிருந்து விடுவித்துக் 
காக்கும் கருணைக் கடல் 
திரிபுர சுந்தரியும் அவளே 



அனைத்துமாக விளங்கும் அபிராமியே 
நீதான் என் துணை என்றுணர்ந்தேன் 
என்று அபிராமி பட்டர் 
அன்னையைப் போற்றுகின்றார் 

நாமும் போற்றுவோம் 
அவள் அருள் பெறுவோம். 

1 comment:

  1. போற்றும் விதம் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete