Monday, February 3, 2014

சொன்னதை செய்பவன் யார்?(பகுதி-2)

சொன்னதை செய்பவன் யார்?(பகுதி-2)


சொன்னதை செய்பவனும் 
சொன்னதை செய்தவனும் 
அவன் ஒருவனே 


அவன் கடந்த யுகத்தில் 
அர்ஜுனனுக்கு சொன்னான் 

ஒரு செயலை செய்வதற்கு முன்புதான் 
முழு ஆராய்ச்சி தேவை. 

எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பதில்தான் கவனம் இருக்க வேண்டுமே ஒழியே 
மீண்டும் மறு  பரிசீலனையில் இறங்கக்கூடாது. 

ஒரு செயலைச் செய்ய தொடங்கிய பிறகு 
அதை முடிக்க வேண்டும் 

முடிக்காமல் தொடங்கும்போதே குழம்பக்கூடாது 
குழம்பினால் பழியும் பாவமுமே வந்து சேரும்.

இது ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்களுக்கு 
உபதேசம். இதையேதான் திருவள்ளுவர் 
தன்னுடைய குரலில் ஒரு குறளாக  எழுதி வைத்தார். 

ஆனால் கண்ணன் இரக்கமில்லாமல் 
அனைவரையும் கொல்லச்  சொல்லுகிறான் 
கீதை வன்முறையை போதிக்கும் நூல் என்று 
ஒரு கூட்டம் கூட்டம் போட்டு காலம் காலமாக 
பேசிக்கொண்டிருக்கிறது.

மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது 

சமாதான முயற்சிகளெல்லாம் தோற்றுப்போய் போர்க்களத்தில்  
முடிவு செய்யலாம் என்று இரு தரப்பினரும் முடிவு செய்த பிறகு 
போர் தொடங்குமுன் வேதாந்தம் பேசும்
மூடன் அர்ஜுனனுக்கு இதைத் தவிர வேறு
என்ன  உபதேசம் கண்ணன் செய்யமுடியும்?
அதைத்தான் அவன் செய்தான். 


அதோடு மற்ற உபதேசங்களையும் செய்தான். 
அவரவர்களுக்கு வேண்டியதை
எடுத்துகொள்ளட்டும் என்று. 

அர்ஜுனன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாலும்
அவன் மண்டையில் ஏறியது குழப்பத்தை விட்டு
போர் புரிய வேண்டும் என்ற உபதேசம் மட்டுமே

புறத்தே  தினமும் தீயவர்களோடு
போராடிக்கொண்டிருக்கும்,நாமும்
அகத்தே நம்மை தீய வழியில் செலுத்தி துன்பங்களை விளை வித்துக்கொண்டிருக்கும் 
தீய எண்ணங்களையும் போராட வேண்டி உள்ளது
கீதையின் கருத்துக்களை புரிந்துகொண்டு
நம் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக
நடத்தவேண்டுமென்றால் நம் மனதை அகந்தையற்று
கண்ணனின் திருவடிகளில் ஒப்படைத்தோம் என்றால் 


நம் வாழ்க்கை பயணம் துன்பங்கள் இருந்தாலும்,
துயரங்கள் வந்தாலும். போர்க்களத்தில்
எண்ணற்ற ஆபத்துகளிலிருந்து அர்ஜுனனைக் காத்து
அவனை வெற்றி பெற செய்தது போல் கண்ணனால் நாமும் காப்பாற்றப்படுவோம் என்பது உண்மை. 

ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு ஒரு படி மேலே 
சென்று உபதேசம் செய்தான் கண்ணன் 

அனைத்திற்கும் அவன்தான் ஆன்மா என்றும்
அவனிடமிருந்துதான் அனைத்தும் வந்தன என்றும்
அனைத்து உயிர்களுக்குள்ளும்  தெய்வங்கலுக்குள்ளும் 
ஆன்மாவாக  இருப்பவன் தானே என்றும்
தன் அகண்ட தரிசனத்தின் மூலம் உணர்த்தினான். 

இன்னும் வரும் 

படங்கள்-நன்றி-கூகிள் 



2 comments:

  1. "எண்ணித் துணிக கருமம்" என்பதை அருமையாக உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படித்து வருகிறேன்.

    ReplyDelete