Monday, February 10, 2014

அபிராமி அந்தாதி (11) (பாடல்(4)



அபிராமி அந்தாதி (11)

அபிராமி அந்தாதி (11)




பாடல்(4)

4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.


இந்த புவனத்தில் மனிதராயிருந்தாலும்,
தேவர்களாயிருந்தாலும் மாயையை வென்ற
முனிவர்களாயினும் இயங்கவேண்டுமெனில்
சக்தி வேண்டும்.

சக்தியின் வடிவாகிய அம்பிகையே 
அனைவரும் உன்னைக் குனிந்து
தன் தலையை வைத்து 
வணங்கும் குளிர்ச்சி தரும் 
சிவந்த பாதங்களை உடையவளே
உனக்கு வணக்கம் என்று போற்றுகிறார்கள் 




சிரசின் மேல் குளிர்ச்சியை தரும்
சந்திரனும் படமெடுத்து ஆடும் பாம்பும்
வானுலகத்திலிருந்து கங்கையை 
பகீரதன் கடும் தவம் செய்து 
பாதாள உலகில் கபில முனிவரின் 
சாபத்தால் சாம்பலாகிப் போன தன் 
மூதாதையர்களைக் கடைத்தேற்ற 
தன்  முயற்சியால் இப்புவிக்கு கொண்டுவந்து
அவன் பெயராலேயே பாகீரதி 
என்றழைக்கப்படும் கங்கை நீரை பகீரதனின் 
வேண்டுதலை ஏற்று தன்  ஜடையில் 
தாங்கியுள்ள புனிதனான 



சிவ பெருமானும் நீயும் எப்போதும்
என் உள்ளத்தில் பொருந்தி நிரந்தரமாக
தங்கி அருள் செய்ய வேண்டும். 
என்று அபிராமி பட்டர் 
இந்தபாடலில் வேண்டுகிறார்  

சிரசின் மேல் உள்ள சந்திரன்
நம்முடைய மதியைக் குறிக்கிறது 

பாம்பு நம்முடைய 
ஐம்புலன்களைக் குறிக்கிறது.

இறைவனிடம் உள்ள பாம்பு தீங்கு செய்யாமல் 
அமைதியாக இருக்கிறது.அதுபோல் நம்முடைய 
புலன்களும் இறைவனின் பணியில் 
ஈடுபட்டுகொண்டிருந்தால் புலன்களால்
நமக்கு எந்த தீங்கும் விளையாது. 

நம்முடைய தலையில் உள்ள மூளை  எப்போதும் 
சூடேறக்கூடாது அது குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

தலையில் காய்ச்சல் காரணமாகசூடேறிவிட்டால் 
பனிக்கட்டிகளை வைத்து குளிர்விக்கிறோம் 

மதியில் எப்போதும் நாம்
இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தோமானால் 
எல்லாவிதமான துன்பங்களிலும் 
காப்பாற்றப்படுவோம். 

சிவபெருமான் கையில் உள்ள மான்
நம் மனத்தைக் குறிக்கிறது.

அலைபாயும் மனதை சிவ சக்தியாகிய 
அபிராமியின் பாதங்களில்
ஒப்படைத்துவிடுவோமானால் 
நமக்கு எந்நாளும் துன்பமில்லை.

அதைத்தான் அபிராமிபட்டர் 
அபிராமியை வேண்டுகிறார். 
நாமும் வேண்டுவோம் 
நலம் பெறுவோம். 


3 comments:

  1. மாசற்ற மனம் வேண்டுவோம்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. இறைவன் மாசற்றார்
      மனதில்தான் வெளிப் படுகின்றான் .
      மற்றவர்கள் உள்ளத்தில்
      மறை பொருளாகவே
      இருந்துவிடுகின்றான்.

      Delete
  2. விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete