கண்ணுக்கு
தெரியும் கடவுள்
நீர்தான் கண்ணுக்கு
தெரியும் கடவுள்
நீர்தான்
நம்மை காக்கும் கடவுள்.
நீர் என்றால் கண்ணுக்கு தெரியாத
ஏதோ ஒரு கடவுளை மட்டும்
குறிப்பிடுவது அல்ல
எந்த மதமாயினும், கடவுளே இல்லை
என்று மதம் பிடித்து அலைபவர்களாயினும்
அனைவருக்கும் நீர் இல்லையென்றால்.
அவர்களை பேசவைக்கும் உயிர் உடலில் தங்காது.
கண்ணுக்கு தெரியும் கடவுள் நீர்தான்
என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு
ஒன்றும் இல்லை
நீர் என்பது
பஞ்ச பூதங்களில் ஒன்று.
பஞ்ச பூதங்கள்
இறைவனின் சக்திகள்
ஒலியும்
அதில் ஒன்றுதானே
எந்த ஒளியும் இல்லாதபோது
நமக்கு வழி காட்டுவது ஒலிதானே
அதுவே பிரம்மம்
என்று உபநிஷதம் கூறுகிறது
ஓம் என்ற பிரணவ ஒலியிலிருந்துதானே
அனைத்தும் உண்டாயிற்று.
எண்ணங்கள்தான் அனைத்தும்.
அதுதானே நாம் காணும் உலகம்.
எண்ணம் தூயதாக இருந்தால் எல்லாம்
அதை பஞ்ச பூதங்களில் ஒன்றான
நீரிலும் பிரதிபலிக்கிறது.
அதுவே தீயதாக இருந்தால்
அதையும் அந்த நீரே பிரதிபலிக்கிறது
அதை அருந்துபவரின் உயிரை பறித்துவிடுகிறது
அதுவே தூயதாக இருந்தால் நம்மை
காக்கிறது வாழ வைக்கிறது
அதை நம்முடைய மகரிஷிகள்
அறிந்து கொண்டதினால்தான்.
நீரை கமண்டலத்தில் வைத்துக்கொண்டு
அனைத்தையும் செய்கிறார்கள்.
அதனால்தான் பாவங்களைப் போக்கும்
புனித கங்கை நீரை சிவ பெருமான்
தன் சிரசில் தரித்துக் கொண்டு
அதற்கு பெருமை சேர்க்கிறான்.
அதனால்தான் நம் பாவங்களை
போக்கும் சாதனங்களாக நதிகளும் கடல்களும்
தெய்வங்களாக நம்முடைய
இந்து மத சாஸ்திரங்களில்
போற்றப்படுகின்றன.
நீரிலிருந்துதான்
அனைத்தும் தோன்றின.
அலைமகளான இலக்குமியும்
அதிலிருந்துதான் தோன்றினாள்
முத்தும் பவழமும், மற்றும் ஏராளமான
செல்வங்களும் அமிர்தமும்
கடலிலிருந்துதான் தோன்றின
நாம் இன்று வாழும் உலகமும்
அதிலிருந்துதான் தோன்றியது
இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான
மக்களின் பசியைத் தீர்ப்பது கடல் உணவுகளே.
உலகில் அனைத்து உயிர்களும்,
தாவரங்களும் வாழ உயிர்நாடியாக குடி நீரை
வழங்குவது கடலன்னையே
நீரைப் போற்ற வேண்டும் ,
வாழ்த்த வேண்டும். வணங்க வேண்டும்.
தூய நீரில்லாவிடில்
இந்த உலகம் அழிந்துவிடும்.
அதை நாம் அசுத்தப்படுத்துகிறோம்
அசிங்கப்படுத்துகிறோம்
ஆனால் அது அசுத்தங்களை நீக்கி
நம்மை சுத்தப்படுத்துகிறது. .
நம் பாவங்களை போக்கி
நம்மை புனிதப்படுத்துகிறது.
நீரை போற்றுவோம். நீர்நிலைகளை,
நதிகளை தெய்வமென வணங்குவோம்.
.
நதிகளில் சாக்கடை,
மனித மிருக, ரசாயன
நச்சுக் தொழிற் சாலைக்கழிவுகளை,
பிணங்களை, விடுவதை நிறுத்துவோம்.
நம்மை பாதுகாக்கும்
நதிகளை பாதுகாப்போம்.
இல்லையேல் நாம் வணங்கும்
எந்த தெய்வமும் நம்மைக் காப்பாற்றாது
தெரியும் கடவுள்
நீர்தான் கண்ணுக்கு
தெரியும் கடவுள்
நீர்தான்
நம்மை காக்கும் கடவுள்.
நீர் என்றால் கண்ணுக்கு தெரியாத
ஏதோ ஒரு கடவுளை மட்டும்
குறிப்பிடுவது அல்ல
எந்த மதமாயினும், கடவுளே இல்லை
என்று மதம் பிடித்து அலைபவர்களாயினும்
அனைவருக்கும் நீர் இல்லையென்றால்.
அவர்களை பேசவைக்கும் உயிர் உடலில் தங்காது.
கண்ணுக்கு தெரியும் கடவுள் நீர்தான்
என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு
ஒன்றும் இல்லை
நீர் என்பது
பஞ்ச பூதங்களில் ஒன்று.
பஞ்ச பூதங்கள்
இறைவனின் சக்திகள்
ஒலியும்
அதில் ஒன்றுதானே
எந்த ஒளியும் இல்லாதபோது
நமக்கு வழி காட்டுவது ஒலிதானே
அதுவே பிரம்மம்
என்று உபநிஷதம் கூறுகிறது
ஓம் என்ற பிரணவ ஒலியிலிருந்துதானே
அனைத்தும் உண்டாயிற்று.
எண்ணங்கள்தான் அனைத்தும்.
அதுதானே நாம் காணும் உலகம்.
எண்ணம் தூயதாக இருந்தால் எல்லாம்
அதை பஞ்ச பூதங்களில் ஒன்றான
நீரிலும் பிரதிபலிக்கிறது.
அதுவே தீயதாக இருந்தால்
அதையும் அந்த நீரே பிரதிபலிக்கிறது
அதை அருந்துபவரின் உயிரை பறித்துவிடுகிறது
அதுவே தூயதாக இருந்தால் நம்மை
காக்கிறது வாழ வைக்கிறது
அதை நம்முடைய மகரிஷிகள்
அறிந்து கொண்டதினால்தான்.
நீரை கமண்டலத்தில் வைத்துக்கொண்டு
அனைத்தையும் செய்கிறார்கள்.
அதனால்தான் பாவங்களைப் போக்கும்
புனித கங்கை நீரை சிவ பெருமான்
தன் சிரசில் தரித்துக் கொண்டு
அதற்கு பெருமை சேர்க்கிறான்.
அதனால்தான் நம் பாவங்களை
போக்கும் சாதனங்களாக நதிகளும் கடல்களும்
தெய்வங்களாக நம்முடைய
இந்து மத சாஸ்திரங்களில்
போற்றப்படுகின்றன.
நீரிலிருந்துதான்
அனைத்தும் தோன்றின.
அலைமகளான இலக்குமியும்
அதிலிருந்துதான் தோன்றினாள்
முத்தும் பவழமும், மற்றும் ஏராளமான
செல்வங்களும் அமிர்தமும்
கடலிலிருந்துதான் தோன்றின
நாம் இன்று வாழும் உலகமும்
அதிலிருந்துதான் தோன்றியது
இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான
மக்களின் பசியைத் தீர்ப்பது கடல் உணவுகளே.
உலகில் அனைத்து உயிர்களும்,
தாவரங்களும் வாழ உயிர்நாடியாக குடி நீரை
வழங்குவது கடலன்னையே
நீரைப் போற்ற வேண்டும் ,
வாழ்த்த வேண்டும். வணங்க வேண்டும்.
தூய நீரில்லாவிடில்
இந்த உலகம் அழிந்துவிடும்.
அதை நாம் அசுத்தப்படுத்துகிறோம்
அசிங்கப்படுத்துகிறோம்
ஆனால் அது அசுத்தங்களை நீக்கி
நம்மை சுத்தப்படுத்துகிறது. .
நம் பாவங்களை போக்கி
நம்மை புனிதப்படுத்துகிறது.
நீரை போற்றுவோம். நீர்நிலைகளை,
நதிகளை தெய்வமென வணங்குவோம்.
.
நதிகளில் சாக்கடை,
மனித மிருக, ரசாயன
நச்சுக் தொழிற் சாலைக்கழிவுகளை,
பிணங்களை, விடுவதை நிறுத்துவோம்.
நம்மை பாதுகாக்கும்
நதிகளை பாதுகாப்போம்.
இல்லையேல் நாம் வணங்கும்
எந்த தெய்வமும் நம்மைக் காப்பாற்றாது
பல படங்களை இணைத்து நன்றாக விளக்கியது மிகவும் அருமை ஐயா...!
ReplyDeleteஅனைவரும் உடனே உணர வேண்டிய தகவல்கள்...
நன்றி... வாழ்த்துக்கள்...
உங்கள் வாசகர் வட்டம் பெரியது
Deleteஅனைவரின் கவனத்திற்கும்
கொண்டு செல்லுங்கள்.
உங்களுக்கு புண்ணியம் உண்டு.
DD சொல்வதுபோல இந்தமுறை நிறைய படங்களை இணைத்திருக்கிறீர்கள். நீரைப் போற்றுவோம்.
ReplyDeleteபோற்றிகளுக்கு என்ன பஞ்சம் நம் நாட்டில்?
Deleteதனி மனிதர்களுக்கு தெய்வங்களுக்கும் என ஆயிரக்கணக்கான போற்றிகள் இருக்கின்றன
எல்லோரும் ஏதாவது பலனை எதிர்நோக்கி அதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
வேண்டுதல்கள் நிறைவேறுகிறதோ இல்லையோ
இந்த உலகில் எவ்வளவோ நதிகள் காணாமலேயே போய் விட்டன
இருக்கின்ற நதிகளையும் நாம் காப்பாற்றாவிட்டால் நாம் அனைவரும் கூண்டோடு கைலாசமோ அல்லது வைகுண்டமோ அல்லது பரலோகமோ போவதைத் தவிர வேறு வழியில்லை. சுவர் இருந்தால் அல்லவோ சித்திரம் எழுத ?