பிருகு மகரிஷி (1)
படைக்கும் கடவுளாகிய
பிரம்மாவினால் படைக்கப்பட்ட
ஏழு ரிஷிகளில் ஒருவர்.
ஜோதிட சாஸ்திரம் தொடர்பாக
இவர் படைத்த நூல்தான்
பிருகு சம்ஹிதா
இவர் த்ரேதா யுகத்தில்
இருந்ததாக கருதப்படுகிறது.
இவர் துணைவி தக்ஷனின் மகள் கியாதி ஆகும்.
இவருக்கு ததா ,விததா ,சுக்ரன் என்ற மகன்களும்
ஸ்ரீ என்ற மகளும் உண்டு .
இவர் மிகவும் தபோ சக்தி படைத்தவர்
கும்பகோணம் அருகே சுவாமிமலையில்
இருக்கின்ற சக்திகள் போதாது
என்று இவர் மேலும் கடும் தவம் மேற்கொண்டார்.
தவத்தை தொடங்கியபோது ஒரு எச்சரிக்கை
விடுத்துவிட்டு தவத்தைத் தொடங்கினார்.
அது என்னவென்றால் அவர் தவத்தை யார் கலைத்தாலும்
அவர்களுக்கு தன் நினைவு எலாம் மறந்து போகும்
என்ற எச்சரிக்கைதான் அது.
அவரின் தவம் மிகக் கடுமையாக இருந்தது .அதனால்
அவர் தலையிலிருந்து அக்னி ஜ்வாலை கிளம்பி
அது தேவ லோகத்தை தாக்கியது
தேவர்கள் பயம் கொண்டு
சிவபிரானை சரணடைந்தனர்
ஈசன் தன் கையால் பிருகு மகரிஷியின் தலையிலிருந்து
கிளம்பிய அக்னி ஜ்வாலையை மூடினார்.
இதனால் அவர் தவம் கலைந்தது .
அவர் விடுத்திருந்த எச்சரிக்கையால்
சிவன் பிரணவ மந்திரத்தின் பொருளை மறந்துபோனார்.
ரிஷிகள் எவ்வளவு சக்தி படைத்தவ்ர்களாயினும்
தெய்வங்கள் அவர்களை மடக்கும் வழியை அறியும்.
இவ்வாறு நடக்கும் என்று முன்பே அறிந்திருந்த
சிவபெருமான் முருகப்பெருமானை
தன நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்து
பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்து வைத்திருந்தார் போலும்.
(நாம் முக்கிய file களுக்கு backup எடுத்து வைத்திருப்பது போல )
முருகப்பெருமான் தன்னுடைய
படைவீடான சுவாமிமலையில் தகப்பனாகிய
சிவ பெருமானுக்கு பிரணவத்தின்
இரகசியத்தினை நினைவுபடுத்தினார்.
இந்த பிருகு மகரிஷி இத்தோடு நிற்கவில்லை.
சும்மா இருந்தவரை மற்ற
முனிவர்கள் உசுப்பேற்றிவிட்டார்கள்
இன்னும் வரும்
படங்கள்- நன்றி-கூகிள்
பிரணவ மந்திரத்தை சிவபெருமான் மறந்ததற்கு இப்படி ஒரு பின்கதை இருக்கிறதா? அட! பிருகு முனிவர் காலடி பட்ட(தாகச் சொல்லப்படும்) ஒரு இடத்தில்தான் நான் வசிக்கிறேன்!
ReplyDeleteஅவரை நினைத்து தியானம் செய்யுங்கள்
Deleteஉங்களுக்கு ஞானம் பிறக்கும்
தொடர்கிறேன் ஐயா
ReplyDeleteநன்றி
என்ன செய்யப் போகிறாரோ...?
ReplyDelete