ஆன்மீகத்தில் முன்னேற்றம் வேண்டுமா?
ஆன்மீக நாட்டம்
மட்டும் ஏற்பட்டால் போதாது.
அது வந்த வேகத்திலேயே
காணாமல் போய்விடும்.
ஒரு ரயில் பெட்டி ஓட வேண்டுமென்றால்
அதை ஒரு என்ஜினுடன் இணைக்கவேண்டும்
அந்த என்ஜினை ஓட்ட நல்ல
டிரைவர் இருக்கவேண்டும். .
அது போல ஆன்மீக நாட்டம்
தொடர வேண்டுமென்றால்.
நல்ல சத்சங்கத்திலே
இணைந்துகொள்ளவேண்டும்
பஜனை கோஷ்டியில் அல்ல
பாடி ஆடிவிட்டு ப்ரசாதம் சாப்பிட்டுவிட்டு.
கலைந்து போவதற்கு .
நல்ல சத்குருவை
நாட வேண்டும்.
இதுவரை கற்ற புளுகு மூட்டைகளை எல்லாம்
மூட்டை கட்டி தூக்கி எறிந்துவிட்டு
அவர் காட்டும் பாதையில் சென்றால்
வெற்றி கிடைக்கும் .
இந்த பிறவியில் அல்ல
பல பிறவிகளுக்கு பின்னர்.
ஏனென்றால் நம்முடைய மனதில்
எண்ணற்ற பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின்
பதிவுகளை தியானம் செய்வதன் மூலம் நீக்க வேண்டும் .
அதே நேரத்தில் நம்முடைய இதயத்தின்
உள்ளே ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஆன்மாவை
பற்றிய தியானமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் நம் மனமும், உடலும்,
நம்மை சுற்றியுள்ள உலகமும்
ஒத்துழைக்க வேண்டும்.
கடமைகளை
முடித்துக்கொள்ளவேண்டும்.
பந்தங்களை சிறிது காலம்
விட்டு விலக வேண்டும்.
கடமைகளை செய்யாவிடில்
மனம் அமைதியடையாது
.
.
அமைதியில்லாத மனதில்
தியானம் செய்ய முடியாது.
உணவுக் கட்டுப்பாடு வேண்டும்.
ஆசைகளையும், உணர்ச்சிகளையும்
மந்தத்தனத்தை உண்டாக்கும் உணவுகளை
வெறுத்து ஒதுக்க வேண்டும்.
பேச்சைக் குறைக்க வேண்டும்
பிறர் நம் மீது நாய் போல் குறைத்தாலும்
நாம் அவர்களிடம் அதுபோல் செய்யக்கூடாது.
குறை காணும்
கொடிய பழக்கத்தை விடவேண்டும்
புறம் கூறுவதை
அறவே விலக்க வேண்டும்
சகிப்புத்தன்மை வேண்டும்.
விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மை வேண்டும்.
தியாகம் செய்யும் குணம் வேண்டும்.
விருப்பு வெறுப்பை ஒழிக்க வேண்டும்.
அன்பாயிருக்க பழக வேண்டும்.
குரு வார்த்தைகளில்
முழு நம்பிக்கை வேண்டும்
எந்த சூழ்நிலையிலும்.
இறைவனை நம்ப வேண்டும்
விடா முயற்சி வேண்டும்.
உடனடி பலனை எதிர்பார்த்து
சாதனைகளை செய்யக்கூடாது
பிறரோடு தன்னை ஒப்பிட்டுப்
பார்க்கும் குணம்
இல்லாதிருக்கவெண்டும்
மேற்கூறிய முயற்சிகளுக்கு தயார் என்றால்தான்
ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியும்.
இல்லாவிடில் எத்தனை பிறவிகள் ஆனாலும்
வண்டி புறப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருக்கும்.
இத்தனை விளக்கமான... ஆணித்தரமாக... யாராலும் கூற முடியாது ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎல்லாம் அனுபவம்தான்
Deleteஉண்மையை அடைய அறிய ,தோல்விகளைத் கண்டு துவளாது விடா முயற்சியுடன் நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்..முயன்றால் வெற்றி உறுதி
இவன் எழுதுவதுஎல்லாம் இவன் வாழ்வில் அனுபவத்தில் கண்டவைகளே
Subbulakshmi Ganesh
ReplyDelete8:35 PM (10 minutes ago)
to me
Namaskaram mama. Felt refreshed with this message of yours. Will surely try to follow.